தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல்
செய்தி 6
கர்த்தருக்குத் திறந்த ஒரு பாத்திரமாக இருத்தலும், தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் சாதாரணமான நாட்களை வாழுதலும்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்.
செய்தி குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்.
வசனங்களை ஜெபவாசிப்பு செய்தல்;
ரோ. 9:23 மகிமைக்கென்று தாம் முன்பே ஆயத்தப்படுத்திய இரக்கத்தின் பாத்திரங்கள்மீது,.. தம் மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தும்படி….
2 கொரி. 4:7 ஆனால் இந்த வல்லமையின் மேன்மை, எங்களிலிருந்து உண்டாகாமல், தேவனுடையதாயிருக்கும்படி நாங்கள் இந்தப் பொக்கிஷத்தை மண்பாத்திரங்களில் பெற்றிருக்கிறோம்.
மத். 22:37 அதற்கு அவர் அவனிடம், “உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்றார்.
பசி தூண்டும் வார்த்தை.
பவுலின் பதினான்கு நிருபங்களை இரண்டே வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறிவிடலாம்: திறந்த பாத்திரம்: திறந்த பாத்திரம் என்றால் என்ன? நாம் எவ்வாறு தேவனுக்குத் திறந்த பாத்திரங்களாக இருக்க முடியும்?
திறந்த பாத்திரம் எதுவும் செய்வதில்லை, மாறாக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பால் நிரப்பப்படுவதற்கு தன்னைத் திறந்ததாக வைத்துக்கொள்கிறது.
ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை, கர்த்தரிடம் அன்பு-கூர்கிற, தன்னைக் கர்த்தருக்குத் திறந்து வைத்திருக்கிற, தான் செய்வதை நிறுத்துகிற வாழ்க்கை ஆகும். அதன்பின் கர்த்தர் உள்ளே வந்து, அவரே எல்லாவற்றையும் செய்கிறார்; இந்தப் பாத்திரம் எளிமையாகக் கர்த்தரை உள்ளடக்குகிறது, கர்த்தருடைய நிரப்புதலையும் செயலையும் அனுபவிக்கிறது. நாம் கர்த்தர் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய அவருக்கு எல்லா வாய்ப்பையும் கொடுத்து, எளிமையாகக் கர்த்தரிடம் அன்புகூரவும் அவருக்கு நம்மைத் திறந்து வைத்திருக்கவும் வேண்டும்.
ஆவிக்குரிய பாரம்
கிறிஸ்துவின் விசுவாசிகளாக,நாம் கர்த்தர் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய அவருக்கு எல்லா வாய்ப்பையும் கொடுத்து, எளிமையாகக் கர்த்தரிடம் அன்புகூரவும் அவருக்கு நம்மைத் திறந்து வைத்திருக்கவும் வேண்டும் மற்றும் தெய்வீகப் பொருளாட்சியின் அற்புதமான இயல்பு நிலையின்படி, தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் வழக்கமான, இயல்பான அனுபவங்கள் நிறைந்த சாதாரணமான நாட்களைக்கொண்ட வாழ்க்கையில் நாம் திருப்தி அடைய கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
தேவன் தம் குறிக்கோளை நிறைவேற்றுவதில் அவருடைய வழிமுறையின் முதல்படி, தம்மையே ஜீவனாக உள்ளடக்கும்படி மனிதனை ஒரு பாத்திரமாக சிருஷ்டிப்பதாக இருந்தது.
நாம் மூவொரு தேவனால் நிரப்பப்பட்ட கனத்தின் பாத்திரங்களாக இருக்கும்படி தேவன் நம்மைத் தெரிந்துகொண்டார். பவுலின் பதினான்கு நிருபங்களை இரண்டே சுருக்கமாகக் கூறிவிடலாம்: திறந்த பாத்திரம்.
ஜீவனின் அனுபவம்
தெய்வீகப் பகிர்ந்தளிப்பின் மூலம் மூவொரு தேவன் நமக்குத் தருகிற ஜீவனின் எல்லாக் காரியங்களும் அமைதியாகவும் நிசப்தமாகவும் இருக்கின்றன, மேலும் விசுவாசிகளாகிய நம் வாழ்க்கையும் அமைதியாகவும் நிசப்தமாகவும் இருக்க வேண்டும்; ஒவ்வொரு நாளும் நாம் இவ்விதத்தில் வாழ்ந்து, எளிமையாக தெய்வீகப் பகிர்ந்தளிப்பைப் பெறுகிற ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும்.
கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுவது ஒரு இயல்புநிலையாகும், ஆயினும் நாம் கூப்பிடும்போது, பதனிடப்பட்டு, முழுநிறைவடைந்த மூவொரு தேவனின் முழுமொத்தத்தை நாம் பெறுகிறோம் என்பது ஆச்சரியமானது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளாக, தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் வழக்கமான, இயல்பான அனுபவங்கள் நிறைந்த சாதாரணமான நாட்களைக்கொண்ட வாழ்க்கையில் நாம் திருப்தி அடைய கற்க வேண்டும். நாம் தெய்வீகப் பகிர்ந்தளிப்பை மெதுவாக, நிலையான விதத்தில் மீண்டும் மீண்டும் பெற்று, இந்த பகிர்ந்தளிப்பை சிறிது சிறிதாக, ஒவ்வொரு நாளும் பெற வேண்டும்.
ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை, கர்த்தரிடம் அன்பு-கூருகிற, தன்னைக் கர்த்தருக்குத் திறந்து வைத்திருக்கிற, தான் செய்வதை நிறுத்துகிற வாழ்க்கை ஆகும்.’கர்த்தாவே, உம் கிருபையால், என் ஆள்தத்துவத்தின் எந்தப் பகுதியையும் உமக்கு அடைக்கப்பட்டதாக நான் வைக்க விரும்பவில்லை; என்னை முற்றிலுமாகவும் முழுமையாகவும் உமக்குத் திறந்தவனாய் வைத்துக்கொள்வதையே நான் தெரிந்தெடுக்கிறேன்” என்று நாம் ஜெபிக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்
ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 தேவனின் நோக்கம், அவரை உள்ளடக்கவும் அவரை வெளிக்காட்டவும் ஒரு பாத்திரத்தை சிருஷ்டிக்க வேண்டும் என்பதே (ரோ. 9:23; 2 தீமோ. 2:20)
( நாம் தேவனை உள்ளடக்குவதற்கான கனம்பொருந்திய பாத்திரங்களாக இருக்குமாறு தேவன் நம்மை தெரிந்தெடுத்தார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நாம் அவரை நேசிக்கவும் நம்மை அவருக்கு திறந்து கொடுக்கவும் மட்டுமே அவர் விரும்புகிறார்
(2 தீமோ. 2:20)
( மனிதனுடைய வீழ்ச்சியின் நிஜமான உட்கருத்து மற்றும் மனிதனுடைய வீழ்ச்சியின் நிஜமான சுபாவம் என்ன?)
நாள் 2
த1 பவுலின் 14 நிருபங்களை இரண்டே வார்த்தைகளில் சுருக்கமாக கூறிவிடலாம்: திறந்த பாத்திரம் (ரோ.9:23; 2 கொரி. 4:7)
( திறந்த பாத்திரம் என்றால் என்ன?)
த2 கர்த்தரை முற்றும்முடிய நேசியுங்கள்; அவருக்காக நீங்களாகவே எதுவும் செய்யாதீர்கள்
(எபே. 3:17)
( செயல்படும்- செயல்படாமல் என்றால் என்ன?)
நாள் 3
த1 எல்லா சமயத்திலும் அவருக்கு உங்களையே திறந்து வைத்திருக்கிறீர்கள். இருப்பினும் நீங்கள் எதையும் செய்யமாட்டீர்கள். ஆனால் அவர் எல்லாவற்றையும் செய்வார். (கலா. 2:20)
( இது சாத்தியம் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தரிடம் அன்புகூர்ந்து, உங்களை திறந்து வைத்து, செய்வதை நிறுத்துங்கள் (கலா. 2:20)
( நேர்த்தியான மற்றும் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 4
த1 நாம் யாரை விசுவாசிக்கிறோமோ, அவர் ஆவியானவராக ஆகிவிட்டார் (யோவா. 20:21; 1 கொரி. 15:45)
( அவருடைய தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் நாம் பங்கு பெறுவதற்குமுன் ஏன் மூவொரு தேவன் ஆவியானவராக இருக்க வேண்டும்?)
த2 இன்று கர்த்தர் நிச்சயமாக என்னில் வாழ்கிறார். அவர் நம் நபராகவும் ஜீவனாகவும் இருக்கிறார் (ரோ. 8:10-11)
( கர்த்தர், நம் நபராகவும் நம் ஜீவனாகவும் இருப்பதற்கு நம்மிடம் வருகிறார் என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 5
த1 தெய்வீகப் பொருளாட்சியின் அற்புதமான இயல்புநிலை (1 தீமோ. 1:4; எபே. 3:9)
(நம் அனுபவத்திற்காகவும்
அனுபவமகிழ்ச்சிக்காகவும் தேவனால் நமக்கு வழங்கப்படும் ஆவிக்குரிய, தெய்வீகக் காரியங்கள் எல்லாம் இயல்பானவை)
த2 தேவன் நம் ஜீவனாக இருக்க நமக்குள் வருவதைப் பற்றிய இந்த ஆவிக்குரிய காரியம் மிகவும் இயல்பான காரியம் (யோவா. 3:5-7)
(இரட்சிக்கப்படுவது என்பது மிகவும் இயல்பான காரியம் என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 6
த1 நம் வாய்களைத் திறந்து ” ஆ கர்த்தராகிய இயேசுவே” என்று கூப்பிடுவது மிகவும் இயல்பானது (ரோ.1:12-13)
( “ஆ கர்த்தராகிய இயேசுவே” என்று கூப்பிடுவது மற்றும் எனது அனுபவமகிழ்ச்சிக்காக பதனிடப்பட்ட மூவொரு தேவனை பெறுகிறேன் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் ஒர் அற்புதமான இயல்புநிலையாகும் (யோவா. 3:6)
( மறுபடிஜெபிக்கப்படுதல் என்பது நம் மனித ஜீவனுக்கு கூடுதலாக, தேவனுடைய தெய்வீக ஜீவனை பெறுவதே என்பதை எடுத்துரையுங்கள் )