தெய்வீகப் பொருளாட்சிக்காக தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளித்தல்
செய்தி 3
ரோமர் 8இல் உள்ள ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் மூலம் தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பில் வாழ்தல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்தி குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல் ;
ரோமர் 8:3 ஏனெனில் கிறிஸ்து இயேசுவின் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னை பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்திலிருந்து விடுதலை செய்து விட்டது
6 ஏனெனில் மாம்சத்தின் மேல் பதிந்த மனம் மரணம் ஆனால் ஆவியின் மேல் பதிந்த மனமோ ஜீவனும் சமாதானமுமாம்
சங்கீதம் 27 : 4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் நான் கர்த்தருடைய (அழகைப்) மகிமையைப் பார்க்கும் படியாகவும் அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும் நான் என் ஜீவன் உள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி இருப்பதையே நாடுவேன்.
பசி தூண்டும் வார்த்தை
ரோமர் 8 முழு வேதத்தின் குவிமையமும் பிரபஞ்சத்தின் மையமுமாய் இருக்கிறது என்று ஏன் கூறப்படுகிறது?
தாம் தம் மீட்கப்பட்ட மக்கள் என் ஜீவனாகவும் அவர்கள் தம் கூட்டு வெளியாக்கமாகவும் இருக்குமாறு தாம் அவர்களுக்குள் நுழைய கடந்த நித்தியத்தில் தேவன் குறிக்கோள் கொண்டார். இதுவே தேவனுடைய பொருளாட்சியின் குவிமையம். மனிதனே தேவனுடைய சிருஷ்டிப்பின் மையம், ஏனென்றால், மனிதன் மூலம் வெளியாக்கப்படுவதே தேவனின் நோக்கம்; மனிதன் தேவனால் வாழ்ந்து தேவனை வாழ்ந்துகாட்டுமாறு, தான் மனிதனின் ஜீவனும் உள்ளடக்கமுமாக இருக்கவும், மனிதனை தம்முடன் ஒன்றாகவும் தேவன் மனிதனுக்குள் நுழைவதன் மூலம் மட்டுமே மனிதன் தேவனின் வெளியாக்குமாய் ஆக முடியும் ; இவ்விதமாய் தேவன் மனிதனுக்குள் இருந்து வெளிக்காட்டப்படுகிறார்.
பதனிடப்பட்ட மூவொரு தேவன் நமக்குள் வந்து இப்போது நம்மில் வசிப்பதே பிரபஞ்சத்திலுள்ள மத்திய குவிமையமாகும் ; இதுவே மிகப்பெரிய அற்புதம் ; பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இதைவிட அதிக முக்கியமானதாக இருக்க முடியாது.
ஆவிக்குரிய பாரம்
ஓர் “அறிவியல்” விதியாக, ஒரு தானியங்கிக் கோட்பாடாக நம் ஆவியில் நிறுவப்பட்டுள்ள ஜீவனுடைய ஆவியின் பிரமாணமாவதற்காக மாம்சமாகுதல், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவற்றினுடாய் மூவொரு தேவன் பதனிடப்பட்டிருக்கிறார்; இது தேவனின் பொருளாட்சியில் அதி பெரும் கண்டுபிடிப்புகளுள், மீட்டுத்திருப்புதல்களுள் ஒன்று
ஆவியின் உள்ளான உணர்வுக்கு நாம் செவிகொடுக்கும்போது, ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நமக்குள் முடுக்கிவிடப்படுகிறது; நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நமது கிறிஸ்துவ வாழ்க்கையின் இரகசியம் ரோமர் 8:6இல் காணப்படுகிறது, இது ஜீவனுடைய ஆவியின் பிரமாணமாகக் கிறிஸ்துவைப் பற்றிய நம் ஆவிக்குரிய அனுபவத்துடன் தொடர்பில் வேதத்திலுள்ளதிலேயே அதி முக்கியமான வசனமாகும் -” மாம்சத்தின் மேல் பதிந்த மனம் மரணம், ஆனால் ஆவியின் மேல் பதிந்த மனமோ ஜீவனும் சமாதானமுமாம் “
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
ஜெயம் கொள்பவராக இருப்பதற்கான திறவுகோல், தவிப்பான தேடுபவர்களுக்கான ஒரு அதிகாரமாகிய ரோமர் 8இல் உள்ள ஜீவனுடைய ஆவியின் பிரமாணமாகும். ரோமர் 8 முழு வேதத்தின் குவிமையமும் பிரபஞ்சத்தின் மையமும் ஆகும். எனவே நாம் ரோமர் 8ஐ அனுபவிக்கிறோம் என்றால், நாம் பிரபஞ்சத்தின் மையத்தில் இருக்கிறோம்.
ரோமர் 8 பதனிடப்பட்ட மூவொரு தேவன் ஜீவனுடைய ஆவியின் பிரமாணமாக விசுவாசிகளின் வாழ்க்கைக்காக அவர்களுக்கு தெய்வீக ஜீவனை வழங்குகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது; இதுவே தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்தளிப்பின் அனுபவம்.
ஆவியின் உள்ளான உணர்வுக்கு நாம் செவிகொடுக்கும்போது, ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நமக்குள் முடுக்கிவிடப்படுகிறது; நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நமது கிறிஸ்துவ வாழ்க்கையின் இரகசியம் ரோமர் 8:6இல் காணப்படுகிறது, இது ஜீவனுடைய ஆவியின் பிரமாணமாகக் கிறிஸ்துவைப் பற்றிய நம் ஆவிக்குரிய அனுபவத்துடன் தொடர்பில் வேதத்திலுள்ளதிலேயே அதி முக்கியமான வசனமாகும் -” மாம்சத்தின் மேல் பதிந்த மனம் மரணம், ஆனால் ஆவியின் மேல் பதிந்த மனமோ ஜீவனும் சமாதானமுமாம் “
ஜீவனின் அனுபவம்
ஆவியின் உள்ளான உணர்வுக்கு நாம் செவிகொடுக்கும்போது, ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நமக்குள் முடுக்கிவிடப்படுகிறது; நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நமது கிறிஸ்துவ வாழ்க்கையின் இரகசியம் ரோமர் 8:6இல் காணப்படுகிறது, இது ஜீவனுடைய ஆவியின் பிரமாணமாகக் கிறிஸ்துவைப் பற்றிய நம் ஆவிக்குரிய அனுபவத்துடன் தொடர்பில் வேதத்திலுள்ளதிலேயே அதி முக்கியமான வசனமாகும் -” மாம்சத்தின் மேல் பதிந்த மனம் மரணம், ஆனால் ஆவியின் மேல் பதிந்த மனமோ ஜீவனும் சமாதானமுமாம் “
நாம் ஜெபத்தின்மூலம் கர்த்தருடனான தொடர்பில் நிலைத்திருக்கும்போது நம் ஆவியில் அவருடனான தொடர்பில் தங்கியிருக்கையில் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நமக்குள் தன்னிச்சையாகவும், புறத்தூண்டுதலின்றியும், முயற்சியின்றியும் செயல்படுகிறது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நமக்குள் இருக்கும் தெய்வீக “மின்சாரத்தின்” பிரமாணமாக தேவனின் கிரியை செய்தல் ஜெபத்தின் மூலம் இந்த சட்டத்தை ” முடுக்கிவிட ” செய்ய நம் ஒத்துழைப்பைக் கோருகிறது.
நம் நிலைமையை பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக நாம் தேவனை நோக்கி பார்த்து அவரது அழகை கண்ணோக்கி அவரை துதித்து அவருக்கு நன்றி செலுத்தி அவரை ஆராதனை செய்து அவரை உறிஞ்சிக்கொள்வதன் மூலம் அவரை தொடர்புகொள்ள அவரது பிரசன்னத்திற்குள் நுழைய வேண்டும்.
உள்வசிக்கும், நிறுவப்பட்ட, தானியங்கும், உள்ளாக செயல்படும் தேவனுடன் நம் ஐக்கியத்தைத் தக்கவைக்க அவருடன் உரையாடுவதன்மூலம் ஜீவனுடைய ஆவியின் பிரமாணமாக உள்ள அவருடன் நாம் ஒத்துழைக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்
ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
தா 1 நாம் ஆவியின் படி நடக்கும்போது கிறிஸ்துவின் எல்லா ஐசுவரியங்களையும் அனுபவிக்கிறோம். (ரோம. 7:24; 8:9)
(ரோமர் 5 முதல் 8 வரையிலான அதிகாரங்களின் உள்ளான அர்த்தத்தை சுருக்கமாக எடுத்துரையுங்கள்)
தா 2 ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நமக்குள் நிறுவப்பட்டது (ரோம. 7:24, 8:2)
( ரோமர் 8 விடுவிக்கப்பட தீவிரமாக இருப்பவர்களுக்காக உள்ளது என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 2
தா 1 ரோமர் 8ஆம் அதிகாரம் வேதாகமத்தின் குவிமையமாகவும் பிரபஞ்சத்தின் மையமாகவும் கருதப்படலாம் (ரோம. 8:9, 11)
( தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களுக்குள் தம்மையே பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதே இந்த பிரபஞ்சத்தில் உள்ள தேவனுடைய நோக்கம் என்பதை எடுத்துரையுங்கள்.)
தா 2 ரோமர் 8ஆம் அதிகாரம் நமக்கு ஒரு பதனிடப்பட்டு முழுமையடைந்த தேவனை வழங்குகிறது (ரோம.8:9,11)
( ரோமர் 8இல் ஆவியானவராக முழு நிறைவடைந்து பதனிடப்பட்டிருக்கும் ஒரு பிரயோகிக்கத்தக்க மற்றும் வந்தடைகிற மூவொரு தேவன் நமக்கு இருக்கிறார்)
நாள் 3
தா 1 நமக்குள் பகிர்ந்தளிக்கப்பட்ட தெய்வீக ஜீவனிடம் ஒரு பிரமாணம் உள்ளது (ரோம.8:2)
(இந்த தெய்வீகப் பிரமாணம் நமக்குள் கிரியைசெய்வதால் நாம் இந்த தெய்வீகத் திரியேகத்துவத்தின் தெய்வீகப் பகிர்ந்து அளிப்பை பெறுவோம் என்பதை எடுத்துரையுங்கள்)
தா 2 ஜோயேவின் மனிதர்களாக ஆக (ரோம.8:10,6,11)
( மூவொரு தேவனின் ஜீவன் எவ்வாறு நம் ஆள்த்தத்துவத்தின் மூன்று பகுதிகளுக்குள்ளும் பகிர்ந்தளிக்கப்பட்டது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
தா 1 ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்துடன் ஒத்துழைப்பதற்கான வழி ஆவியில் நடந்து, எளிமையாக, ஆவியில் இருப்பதே ஆகும் (ரோம.8:4)
( ஆவியில் இருப்பதென்றால் தெய்வீக மின்சாரத்தை முடுக்கி விடுவதாகும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
தா 2 ஜெபம் என்பது தேவனை உறிஞ்சி கொள்வதாகும்; ஜெபம் மனிதன் தேவனைப் பெற்றுக்கொள்ளும்படி செய்கிறது (சங்.27:1)
( ஜெபம் என்பது தேவனைத் தொடர்புக் கொள்வதும் அவரைப் பெற்றுக் கொள்வதுமாகும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
நாள் 5
தா 1 ஜெபத்தின் இரண்டாவது அர்த்தம் தேவனை வெளிக்காட்டுவது அதாவது அவரை பேச அனுமதிப்பது (ஆதி.18:33)
( நிஜமான ஜெபம் என்பது நாம் தேவனிடம் வருவதும் நம் சொந்த வார்த்தைகளை பேசுவதற்கும் பதிலாக தேவனைப் பேச விடுவது ஆகும்.)
தா 2 ஜெபத்தில் நாம் உச்சரிக்கும் வார்த்தைகள், நமக்குள் உள்ள பேசுதலின் வெளியாக்கமாகும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரையுங்கள் (சங்.27:8)
( தேவன் நமக்குள் பேசுகிறார், ஜெபிப்பதென்றால் அவர் பேசியிருப்பதை மீண்டும் அவரிடமே திரும்பப்பேசுவதாகும் என்பதை எடுத்து உரையுங்கள்)
நாள் 6
தா 1 சாத்தான் நம் சரீரத்தின் அபயவங்களில் குடியிருக்கிறான், ஆனால் தேவன் நம் ஆவியில் இருக்கிறார் (ரோம. 8:6)
( நம் மனதை ஆவியின் மீது பதித்து, கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டும் அப்பொழுது நாம் விடுதலையாக்கப்படுவோம்)
தா 2 நம் மனதை ஆவியின் மீது பதிப்பது என்பதை நாம் கற்றறிந்தாக வேண்டும் (ரோம.8:6)
( நாம் ரோமர் 8:6ஐ பிரயோகிக்காவிட்டால் நாம் அறிந்த மற்றும் செய்த அனைத்தும் சிறிதளவே சாதிக்கும் என்பதை எடுத்துரையுங்கள்)