Tamil – Prophesying Outline JSTS23 Week 12

கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்

செய்தி 12

புதிய எருசலேமாகுதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்

வெளி. 19:7 களிகூர்ந்து மகிழ்வோம், அவருக்கே மகிமைசெலுத்துவோம்; ஏனெனில் செம்மறிக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது. அவருடைய மனைவி தன்னை ஆயத்தப்படுத்திவிட்டாள் என்று சொல்லக் கேட்டேன்.

வெளி. 21:22 அதிலே நான் ஆலயத்தைக் காணவில்லை, ஏனெனில் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் செம்மறிக்குட்டியானவருமே அதன் ஆலயம்.

வெளி. 3:12 ஜெயங்கொள்கிறவன் எவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன், அவன் இனி ஒருபோதும் வெளியே போகவேமாட்டான்.

 

பசிதூண்டும் வார்த்தை

வேதத்தின் போதனையின் விளைவு, புதிய எருசலேமாகிய ஒரே வஸ்து மட்டுமே, இந்த புதிய எருசலேம் ஒரு பொருள் நகரமா?

புதிய எருசலேம் “செம்மறிக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி… எருசலேமாகிய பரிசுத்த நகரம்.” புதிய எருசலேம் ஒரு மணவாட்டி; இது அவள் ஒரு பௌதிக நகரமல்ல, மாறாக, கிறிஸ்துவின் திருப்திக்கான ஒரு கூட்டு நபர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

புதிய எருசலேம், தெய்வீகமும் மனுஷீகமும் சேர்ந்து ஒரே வஸ்துவாகக் கலந்திணைக்கப்பட்டு, இழைத்திணைக்கப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட ஒரு தொகுப்பாகும்; எல்லா ஆக்கக்கூறுகளுக்கும் ஒரே ஜீவனும், சுபாவமும், கட்டமைப்பும் இருக்கின்றன, இவ்வாறு அவை ஒரு கூட்டு நபராக இருக்கின்றன.

 

ஆவிக்குரிய பாரம்

புதிய எருசலேம், தெய்வீகமும் மனுஷீகமும் சேர்ந்து ஒரே வஸ்துவாகக் கலந்திணைக்கப்பட்டு, இழைத்திணைக்கப்பட்டு, கட்டியெழுப்பப்பட்ட ஒரு தொகுப்பாகும்; எல்லா ஆக்கக்கூறுகளுக்கும் ஒரே ஜீவனும், சுபாவமும், கட்டமைப்பும் இருக்கின்றன, இவ்வாறு அவை ஒரு கூட்டு நபராக இருக்கின்றன—மணவாட்டி, செம்மறிகுட்டியானவருடைய மனைவி.

கர்த்தராகிய இயேசு மீட்டுத்திருப்பப்பட்ட சபையிலுள்ள ஜெயங்கொள்பவனை, தேவனுடைய ஆலயத்திற்குள் கட்டப்பட்ட ஒரு தூணாக்குவார்; அந்த ஆலயம் மூவொரு தேவனே. இன்று சபை வாழ்க்கையில் கர்த்தர் நம்மை தேவனுடைய ஆலயத்திலுள்ள தூண்களாக ஆக்க, நம்மைக் கட்டியமைக்க வாஞ்சிக்கிறார்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

நம் கிறிஸ்தவ வாழ்க்கையையும் சபை வாழ்க்கையையும் பொறுத்தவரை, புதிய எருசலேமைப் பற்றிய தரிசனத்தை நாம் பெற வேண்டும்.

புதிய எருசலேம் “செம்மறிக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி… எருசலேமாகிய பரிசுத்த நகரம்.

மீட்டுத்திருப்பப்பட்ட சபையிலுள்ள ஜெயங்கொள்பவன்மீது, கர்த்தராகிய இயேசு தம் தேவனுடைய நாமத்தையும் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் புதிய எருசலேமின் நாமத்தையும் தம் புதிய நாமத்தையும் எழுதுவார்.

ஜீவனின் அனுபவம்

கர்த்தர் நம்மை மறுசாயலாக்குவதன்மூலம், அதாவது, நம் இயற்கை மூலக்கூறை அகற்றி வெளியேற்றி, அதைத் தம் தெய்வீக மூலக்கூறைக்கொண்டு இடமாற்றுவதன் மூலம் நம்மைத் தூண்களாக்குவார். தேவனுடைய நாமமும், புதிய எருசலேமின் நாமமும் கர்த்தருடைய நாமமும் ஜெயங்கொள்பவன்மீது எழுதப்படுவது, தேவன் என்னவாக இருக்கிறாரோ அதுவும், புதிய எருசலேமின் சுபாவமும், கர்த்தருடைய நபரும் ஆகிய யாவும் அந்த ஜெயங்கொள்பவனுக்குள் அடித்துருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

வெளி. 3:12 ஜெயங்கொள்கிறவன் எவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன், அவன் இனி ஒருபோதும் வெளியே போகவேமாட்டான், நான் என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும் என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் சபை வாழ்க்கைக்கும் நாம் புதிய எருசலேமைப் பற்றிய ஒரு தரிசனத்தைக் கொண்டிருக்க வேண்டும். இன்று சபை வாழ்க்கையில் கர்த்தர் நம்மை உருவாக்கவும், நம்மைக் கட்டமைக்கவும், தேவனுடைய ஆலயத்தில் தூண்களாகவும் விரும்புகிறார். கர்த்தராகிய இயேசு மீட்டுத்திருப்பப்பட்ட சபையில் ஜெயங்கொள்பவரை, மூவொரு தேவன் தாமே தேவனுடைய ஆலயத்திற்குள் கட்டப்பட்ட தூணாக ஆக்குவார்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 புதிய எருசலேம், தேவத்துவத்திலல்ல, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதன் தேவனாவதும் சம்பந்தப்பட்டுள்ளது (வெளி. 21:2; 3:12)
(புதிய ஏற்பாட்டின் முக்கிய உள்ளடக்கம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 வேதத்தின் போதனையின் விளைவு புதிய எருசலேமாகிய ஒரே வஸ்து மட்டுமே (வெளி. 21:7; எபி. 2:10-11)
(தேவனுடைய புதிய ஏற்பாட்டு பொருளாட்சி என்ன?)

 

நாள் 2

த1 புதிய எருசலேம் என்பது கட்டியமைத்தல், இணைத்தல், கலந்திணைதல் ஆகியவற்றின்மூலம் தம் மீட்கப்பட்டோரைக்கொண்டு பெரிதாக்கப்படும் தேவன்தாமே (யோவான் 3:29, 30; வெளி. 3:12)
(புதிய எருசலேம் அதிஉயர்ந்த சத்தியமும், அதிஉயர்ந்த சுவிசேஷமாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 வேதத்தின் ஆரம்பத்தில் தேவன் மட்டுமே இருந்தார் முடிவில் ஒரு மாபெரும் கூட்டு தேவன் இருக்கிறார்—புதிய எருசலேம் (ஆதி. 1:1; வெளி. 21:2)
(புதிய எருசலேம், நித்தியத்தில் தேவனுடைய பெரிதாக்கம் மற்றும் விரிவாக்கமாக, தேவனுடைய வெளியாக்கமாக இருக்கிறது; இது கூட்டு தேவனாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 வேதத்தின் கருப்பொருள் ஒரு பிரபஞ்சமளாவிய தம்பதியின் ஒரு தெய்வீக காதல் (ஆதி. 2:21-24; சங். 54:5; எரே. 2:2)
(பிரபஞ்சமளாவிய தம்பதியிலுள்ள ஆண் கிறிஸ்து தாமே மற்றும் பெண் தேவனுடைய தெரிந்தெடுக்கப்பட்ட மீட்கப்பட்ட மக்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 மனுஷீகத்தின்படி புதிய எருசலேம் மனைவியாகவும் மற்றும் தெய்வீகத்தின்படி கணவராகவும் இருக்கிறது (வெளி. 21:2, 9)
(அதன் மனுஷீகத்திலும் தெய்வீகத்திலும் அது ஒரு ஜோடி ஒரு மனைவி ஒரு கணவன் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 மறுசாயலாகுதலின் பல்வேறு நிலைகளினூடாய்க் கடந்துசென்ற சாலொமோனின் காதலி, சாலொமோனின் நகலாக ஆகியிருக்குகிறாள். (உ.பா. 6:13, 4)
(புதிய எருசலேம் என்பது முழுநிறைவடைந்த சூலமித்தியாள் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 இவ்வாறு, கிறிஸ்துவின் பல நேசர்கள் இறுதியில் தேவத்துவத்தில் அல்ல, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் தேவனின் நகல்களாக மாறுவார்கள். (2 கொரி. 2:10; யாத். 33:11)
(நம்மைக் கவர்ந்திழுக்க தேவன் ஒரு மனிதனானார் என்றும், இப்போது அவருடனான நம் தனிப்பட்ட, பாசமுள்ள, அந்தரங்கமான, ஆவிக்குரிய உறவின் மூலம் அவரது வெளியாக்கத்திற்காக நாம் தெய்வீகமாக ஆவதன் மூலம் அவரைக் காதல்புரிய அவர் விரும்புகிறார் என்றும் வேதம் வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 ஜெயங்கொள்கிறவன் எவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன் (வெளி. 3:12)
(இந்த வசனத்தில் ஆக்குவேன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)

த2 இன்றைய சபை வாழ்கையில், ஜெயங்கொள்ளுகிற பரிசுத்தவான்கள் மூவொரு தேவனில் தூண்களாக இருக்கிறார்கள் (வெளி. 3:12; 21:22).
(ஆலயத்தில் தூண்களாக இருப்பதென்றால் அவர்கள் மூவொரு தேவனில் தூண்களாக இருப்பார்கள் என்று பொருள் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 தேவனுடைய நாமம், புதிய எருசலேமின் நாமம், கர்த்தரின் புதிய நாமம் ஆகியவை ஜெயங்கொள்பவன்மீது எழுதப்பட்டிருக்கிறது. (வெளி. 3:12)
(தேவனுடைய நாமம், புதிய எருசலேமின் நாமம், கர்த்தரின் புதிய நாமம் ஆகியவை ஜெயங்கொள்பவன்மீது எழுதப்பட்டிருப்பது எதை சுட்டிக்காட்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 சாத்தான் அக்கினிக் கடலில் இருப்பான். தேவன் தம் ஜீவிக்கும் குடியிருப்பில் இருப்பார் (எபே. 2:22; 21:2-3)
(புதிய ஏற்பாட்டில் புதிய வானம் மற்றும் புதிய பூமியில் தேவனின் குடியிருப்பு என்ன என்பதை எடுத்துரையுங்கள்)