Tamil – Prophesying Outline JSTS23 Week 11

கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்

செய்தி 11

மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளுடன், பதனிடப்பட்ட தேவனின் தெய்வீக-மனுஷீகக் கூட்டிணைப்பு – கிறிஸ்து தெய்வீக மகிமையைக்கொண்டு பிதாவால் மகிமைப்படுத்தப்படுவதின் விளைவு.

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்

யோவான்14:20 நான் என் பிதாவில் இருக்கிறேன், நீங்கள் என்னில் இருக்கிறீர்கள், நான் உங்களில் இருக்கிறேன் என்பதை அந்த நாளில் நீங்கள் அறிவீர்கள்.

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வசிப்பிடங்கள் இருக்கின்றன அப்படி இல்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஏனெனில் நான் உங்களுக்காக ஓர் இடத்தை ஆயத்தஞ்செய்யப் போகிறேன்.

யோவான் 15:1 நானே மெய்யான திராட்சைச்செடி, என் பிதா தோட்டக்காரர்.

சிதூண்டும் வார்த்தை

யோவான் 14:20, முழுநிறைவடைந்த மூவொரு தேவனும் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் ஒரு கூட்டிணைப்பானார்கள் என்று வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள். இந்தக் கூட்டிணைப்பின் மூன்று அம்சங்கள் என்ன?

“அந்த நாளிலே” – குமாரனுடைய உயிர்ந்தெழுதலின் நாளிலே, “நான் என் பிதாவில் இருக்கிறேன்” (குமாரனும் பிதாவும் ஒன்றாய்க் கூட்டிணைக்கப்பட்டிருக்கிறார்கள்), “நீங்கள் என்னில் இருக்கிறீர்கள்” (மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகள் குமாரனுக்குள்ளும் குமாரனில் பிதாவுக்குள்ளும் கூட்டிணைக்கப் பட்டிருக்கிறார்கள்), “நான் உங்களில் இருக்கிறேன்” (பிதாவில் குமாரன் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளுக்குள் கூட்டிணைக்கப்பட்டிருக்கிறார்) “என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கிறிஸ்துவினுடைய மகிமைப்படுத்துதலாகிய அவரது உயிர்த்தெழுதலின் விளைவு, பிதாவின் வீடு, குமாரனின் திராட்சைச் செடி, ஆவியானவரின் பிள்ளை ஆகிய மூன்று அம்சங்களில், தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட, மீட்கப்பட்ட, மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட மக்கள் அனைவரின் கூட்டிணைப்பாகும்.

ஆவிக்குரிய பாரம்

கிறிஸ்துவை நம் குடியிருப்பாக எடுத்துக்கொண்டு அவரில் வசிப்பதும், கிறிஸ்து நம்மைத் தம் குடியிருப்பாக எடுத்துக்கொண்டு நம்மில் வசிக்க அவரை அனுமதிப்பதுமே, மீட்கப்பட்டு மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளுடன், பதனிடப்பட்டு முழுநிறைவடைந்த மூவொரு தேவனின் பிரபஞ்சமளாவிய கூட்டிணைப்பின் நிஜத்தில் வாழ்வது ஆகும்.

புதிய எருசலேம் தேவனுடைய வாசஸ்தலமாகும், வாசஸ்தலத்தின் மையம் மறைவான மன்னாவாகிய கிறிஸ்து; இந்தப் பிரபஞ்சமளாவிய, தெய்வீக-மனுஷீகக் கூட்டிணைப்பிற்குள், அதாவது, தேவன் மற்றும் மனிதனின் பரஸ்பர வசிப்பிடத்திற்குள் கூட்டிணைக்கப்படுவதற்கான வழி, மறைவான மன்னாவாகக் கிறிஸ்துவைப் புசிப்பதாகும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

முழுப் பிரபஞ்சத்திலும் தேவன் ஒன்றை மட்டுமே விரும்புகிறார், அதாவது, மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளுடன், பதனிடப்பட்ட மூவொரு தேவனாகிய தமது பிரபஞ்சமளாவிய கூட்டிணைப்பையே விரும்புகிறார் என்று நாம் பார்க்க வேண்டும்.

கிறிஸ்துவினுடைய தெய்வீகத்தின் மகிமை விடுவிக்கப்படுவது, அவரது மரணத்தின்மூலம் அவரது உயிர்த்தெழுதலில் (லூக். 24:26) தெய்வீக மகிமையைக்கொண்டு அவர் பிதாவால் மகிமைப்படுத்தப்படுவதாகும் (12:23-24); அவரது தெய்வீக ஜீவனுடன்கூட அவரது தெய்வீகத்தின் மகிமை விடுவிக்கப்படுவதே பூமியில் அக்கினியைப் போடுவதாகும்.

கிறிஸ்துவினுடைய மகிமைப்படுத்துதலாகிய அவரது உயிர்த்தெழுதலின் விளைவு, பிதாவின் வீடு, குமாரனின் திராட்சைச் செடி, ஆவியானவரின் பிள்ளை ஆகிய மூன்று அம்சங்களில், தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட, மீட்கப்பட்ட, மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட மக்கள் அனைவரின் கூட்டிணைப்பாகும்.

ஜீவனின் அனுபவம்

கிறிஸ்து நம்மில் வசிக்கும்படி நாம் அவரில் வசிப்பதென்றால், கிறிஸ்துவை நம் எல்லாமாக எடுத்துக்கொண்டு அவரில் நம் வாழ்க்கையைக் கொண்டிருப்பதாகும்; அவரை நம் வாழ்விடமாக, நம் நித்தியக் குடியிருப்பாக எடுத்துக்கொள்வதே, கிறிஸ்துவை அனுபவமாக்கும் உன்னதமான, முழுமையான அனுபவமாகும். நாம் கர்த்தராகிய இயேசுவை அன்புகூரும்போது, அவர் தம்மையே நமக்கு வெளியரங்கமாக்குகிறார். அப்போது பிதா நம் அனுபவமகிழ்ச்சிக்காக நம்முடன் ஒரு வசிப்பிடத்தை உண்டாக்க அவருடன் வருகிறார்; இந்த வசிப்பிடம் ஒரு பரஸ்பர வசிப்பிடமாகும், இதில் மூவொரு தேவன் நம்மில் வசிக்கிறார். நாமும் அவரில் வசிக்கிறோம்.

நாம் கர்த்தருடைய நிலையான மற்றும் எழுதப்பட்ட வார்த்தையில் வசித்தால், அவரது உடனடியான மற்றும் ஜீவிக்கும் வார்த்தைகள் நம்மில் வசிக்கும். புறம்பான, எழுதப்பட்ட வார்த்தையால், பரம்புதிரான கர்த்தரின் விளக்கம், வரையறை, வெளியாக்கம் இருக்கின்றன, உள்ளான, ஜீவிக்கும் வார்த்தையால், வசிக்கிற கிறிஸ்துவை அனுபவமாக்கும் அனுபவமும் நடைமுறைரீதியான கர்த்தரின் பிரசன்னமும் இருக்கின்றன.

பயிற்சி மற்றும் பிரயோகம்

நம் பழைய தங்குமிடமாகிய நம்மைவிட்டுப் பெயர்ந்து, நம் புதிய தங்குமிடமாகிய மூவொரு தேவனுக்குள், அதாவது, மூவொரு தேவன் ஒருவருக்குள் ஒருவர் இருக்கும் ஒருமையின் இடத்திற்குள் வரும்படி, காலைதோறும் நாம் வார்த்தையைத் தொடுவதின்மூலமும் ஆவியானவர் நம்மைத் தொட அனுமதிப்பதின்மூலமும் பரிசுத்தமாக்கப்பட வேண்டும்.

இந்தப் பிரபஞ்சமளாவிய, தெய்வீக-மனுஷீகக் கூட்டிணைப்பிற்குள், அதாவது, தேவன் மற்றும் மனிதனின் பரஸ்பர வசிப்பிடத்திற்குள் கூட்டிணைக்கப்படுவதற்கான வழி, மறைவான மன்னாவாகக் கிறிஸ்துவைப் புசிப்பதாகும். நாம் உலகத்துடன் இணைக்கப்பட்டவர்களாய் இருக்கக்கூடாது நாம் மறைவான மன்னாவாகக் கிறிஸ்துவைப் புசிப்பதன்மூலம் புதிய எருசலேமுக்குள் கூட்டிணைக்கப்பட வேண்டும்; நாம் அவரைப் புசிக்கும்போது, இந்த மாபெரும் கூட்டிணைப்பில் நாம் அவரால் வாழ்கிறோம்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள் – ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 தேவன் தம் தெய்வீகத் திரியேகத்துவத்தில் ஒரு கூட்டிணைப்பாக இருக்கிறார் (யோவான் 14:10-11)

(தெய்வீகத் திரியேகத்துவத்தின் மூவரும் பரஸ்பரமாக உள்வசிப்பதன்மூலம் கூட்டிணைக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 முழுநிறைவேற்றமடைந்த மூவொரு தேவனும், மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளும் ஒரு கூட்டிணைப்பாக உள்ளனர் (யோவா. 14:16-19)

(முழுநிறைவேற்றமடைந்த மூவொரு தேவனும், மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் ஒரு கூட்டிணைப்பாக ஆனார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 2

த1 கிறிஸ்து கடந்த நித்தியத்திலிருந்து தெய்வீக மகிமையை உடைமையாக்கினார்
(யோவா. 1:14; 12:23)

(கிறிஸ்துவின் மாம்சமாகுதல் மூலம் அவரது மனுஷீகம் அவரது தெய்வீகத்தின் மகிமையை மறைக்க ஓர் ஓடாக ஆனது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கர்த்தராகிய இயேசு தம் மாம்சம் என்ற ஓட்டின் நெருக்கப்படுதலிருந்து விடுவிக்கப்பட விரும்பினார் (லூக்கா 12:50; யோவான் 12:24)

(கிறிஸ்து சிலுவையில் தம் மரணத்தின் ஞானஸ்நானத்தைக்கொண்டு ஞானஸ்நானம்பண்ணப்பட்டபோது, அவரது தெய்வீகத்தின் மகிமை விடுவிக்கப்பட்டது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 3

த1 மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளுடன் முழுநிறைவடைந்த தேவனின் கூட்டிணைப்பின் முதல் அம்சம் பிதாவின் வீடாகும் (யோவான் 14:2, 23)

(பிதாவின் வீடு என்பது தம் மீட்கப்பட்டு, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்ட தெரிந்துகொள்ளப்பட்டோரைக்கொண்டு கட்டியமைக்கப்பட்ட பதனிடப்பட்டு, முழுநிறைவடைந்த தேவனின் தெய்வீக மற்றும் மனுஷீக கூட்டிணைப்பாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பிதாவின் வீடு தேவனுடைய வீட்டாராகவும், தேவனுடைய இராஜ்ஜியமாகவும் இருக்கிறது (எபே. 2:19)

(பிதாவின் வீட்டின் குறிக்கோள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 கிறிஸ்து ஒரு வீடு ஒரு மரம் மற்றும் ஒரு புதிய மனிதன் (யோவான் 15:1; 16:21)

(கர்த்தர் ஓர் உயரமான தேவதாரு மரம் அல்ல, மாறாக ஒரு பரவும் திராட்சைச் செடி என்பதை எடுத்துரையுங்கள்)

த2 மெய்யான திராட்சைச் செடி, பதனிடப்பட்டு முழுநிறைவடைந்த மூவொரு தேவனின் உயிரியாக இருக்கிறது (யோவான் 15:1; ரோ. 11:17)

(அதன் கிளைகள் கிறிஸ்துவின் விசுவாசிகளாகும். மேலும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் விசுவாசிப்பதன்மூலம் பண்படுத்தப்பட்ட ஒலிவ மரத்திற்குள் ஒட்டியிணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 நாம் குமாரனை நேசிப்பதால் குமாரனும் பிதாவும் நம்மிடம் வந்து, நம்முடன் ஒரு வசிப்பிடத்தை ஏற்படுத்துகிறார்கள் (யோவான் 14:21)

(கர்த்தர் நம்மிடம் வருவதும், நம்முடன் ஒரு வசிப்பிடத்தை அமைப்பது, அவரது தோன்றுதலாகும். அவரது வெளியரங்கமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் கர்த்தரை அனுமதிக்க விரும்பினால், அவரது வார்த்தைகள் நம்மில் வசிக்க நாம் அனுமதிக்க வேண்டும் (யோவான் 15:7)

(நம் கைகளில் லோகோஸ் உள்ளது, ஆனால் நம் ஆவியில் ரேமா உள்ளது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 மறைவான மன்னாவைப் புசிப்பதென்றால் வாசஸ்தலத்திற்குள் கூட்டணைக்கப்படுவதாகும் (வெளி. 21:3; 2:17).

(பழைய ஏற்பாட்டிலுள்ள வாசஸ்தலம் பிரபஞ்சமளாவிய கூட்டிணைப்பின் ஓர் அடையாளமாகும் என்பதை எடுத்துரையுங்கள்.)

த2 தேவனுடைய வாசஸ்தலமாக, புதிய எருசலேம் பிரபஞ்சமளாவிய கூட்டிணைப்பாகும் (வெளி. 2:17)

(எவ்வளவாய் நாம் கிறிஸ்துவைப் புசிக்கிறோமோ, அவ்வளவாய் நாம் இந்தப் பிரபஞ்சமளாவிய கூட்டிணைப்பிற்குள் கூட்டிணைக்கப்படுகிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)