கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்
செய்தி 10
தேவனுடைய தெய்வீகத்தில் பங்குபெறுவதற்கான தேவ – மனிதர்களின் தெய்வீக உரிமை
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
யோவா. 3:15 அவருக்குள் விசுவாசிக்கிற ஒவ்வொருவனும் நித்திய ஜீவனைப் பெறும்படி
2 கொரி. 3:18 ஆனால் நாம் எல்லாரும், முக்காடு நீக்கப்பட்ட முகமாய், கண்ணாடியைப்போல கர்த்தருடைய மகிமையை நோக்கிப் பார்த்துப் பிரதிபலித்து, கர்த்தராகிய ஆவியானவரிலிருந்து வருகிறபடியே, மகிமையிலிருந்து மகிமைக்கு அதே சாயலாகவே மறுசாயலாக்கப்பட்டுவருகிறோம்
பசிதூண்டும் வார்த்தை
தேவனுடைய தெய்வீகத்தின் பல்வேறு அம்சங்களில் தேவ மனிதர்களாகிய நாம் என்னென்ன பங்கு பெற முடியும்?
நம்மால் தேவனுடைய ஜீவனில் (யோவான் 3:15), சுபாவத்தில் (எபே. 1:4; 2 பேது. 1:4 ) மனதில் (எபே. 4:23, பிலி. 2:5) ஆள்தத்துவத்தில் (2 கொரி. 3:18, எபே. 3:8), சாயலில் (2 கொரி. 3:18, ரோ. 8:29), மகிமையில் (ரோ. 8:30, எபி. 2:10) குமாரத்துவத்தில் (எபே. 1:5; ரோ. 8:23), வெளியரங்கத்தில் (ரோ. 8:19), ரூபத்தில் (1 யோவா. 3:2), தேவ மனித வகையாக, தேவ மனித இனமாக இருக்க (யோவா. 1:12-13; ரோ. 8:14, 16) பங்கு பெற முடியும்.
ஆவிக்குரிய பாரம்
தேவ-மனிதர்களாக, நமக்கு தேவனுடைய தெய்வீகத்தில் பங்குபெறுவதற்கான, அதாவது, தேவனில் பங்குபெறுவதற்கான தெய்வீக உரிமை இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். தேவ – மனிதர்களாக, அதாவது, தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும்படி தேவனால் பிறந்திருப்பவர்களாக நமக்கு, தேவன் என்னவாக இருக்கிறாரோ அதில் பங்குபெறுவதற்கு, இன்னும் தேவத்துவத்திலன்று ஜீவனிலும் சுபாவத்திலும் வெளியாக்கத்திலும் தேவனாகுவதற்குக்கூட உரிமை இருக்கிறது.
நாம் எங்கிருந்தாலும்சரி, நாம் தேவனுடைய தெய்வீகத்தில் பங்குபெறுவதற்கான தெய்வீக உரிமையை உடைய தேவ-மனிதர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
தேவ-மனிதர்களாக, நமக்கு தேவனுடைய தெய்வீகத்தில் பங்குபெறுவதற்கான, அதாவது, தேவனில் பங்குபெறுவதற்கான தெய்வீக உரிமை இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும்.
நம்மால் தேவனுடைய ஜீவனில் (யோவான் 3:15), சுபாவத்தில் (எபே. 1:4; 2 பேது. 1:4 ) மனதில் (எபே. 4:23, பிலி. 2:5) ஆள்தத்துவத்தில் (2 கொரி. 3:18, எபே. 3:8), சாயலில் (2 கொரி. 3:18, ரோ. 8:29), மகிமையில் (ரோ. 8:30, எபி. 2:10) குமாரத்துவத்தில் (எபே. 1:5; ரோ. 8:23), வெளியரங்கத்தில் (ரோ. 8:19), ரூபத்தில் (1 யோவா. 3:2), தேவ மனித வகையாக, தேவ மனித இனமாக இருக்க (யோவா. 1:12-13; ரோ. 8:14, 16) பங்கு பெற முடியும்.
ஜீவனின் அனுபவம்
பரிசுத்தமாக இருக்கும்படி நம்மைத் தெரிந்துகொண்டு, நம் முழு ஆள்தத்துவமும் தேவனுடைய பரிசுத்த சுபாவத்தைக்கொண்டு பூரிதமாக்கப்பட்டு, ஊடுருவி வியாபிக்கப்படுமாறு, தேவன் பரிசுத்தராகிய தம்மையே நம் ஆள்தத்துவத்திற்குள்ளாக உட்பகிர்ந்து நம்மைப் பரிசுத்தமாக்குகிறார். நாள்தோறும் நாம் தேவனுடைய சுபாவத்தில் பங்குபெறவும் அவருடைய ஆள்தத்துவத்தின் ஆக்கக்கூறுகளை அனுபவித்துமகிழவும் வேண்டும்.
நாம் மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மூலம் தேவ-மனிதர்களாகிவிட்டதால், தேவனுடைய மனதில் பங்குபெறுவதற்கான உரிமை நமக்கு இருக்கிறது. அபிஷேகம் நம்முள் அசைந்துகொண்டிருக்கும்போது, அது தேவனை நமக்குள் அபிஷேகிக்கிறது, தேவனுடைய மனதை நமக்கு வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து நம் ஆவியிலிருந்து நம் மனதைப் பூரிதமாக்கி, நம் மனதை அவரது மனதுடன் ஒன்றாக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
இறுதியில் தேவனுடைய மகிமையில் பங்கெடுப்பதற்கு நாம் அவருடைய மகிமைக்குள் கொண்டுவரப்படுவோம். நாம் கர்த்தருடைய மகிமையை நோக்கிப் பார்த்துப் பிரதிபலிக்கையில், நாம் மகிமையிலிருந்து மகிமைக்குக் கர்த்தருடைய சாயலாகவே மறுசாயலாக்கப்பட்டு வருகிறோம்.
நாம் எங்கிருந்தாலும்சரி, நாம் தேவனுடைய தெய்வீகத்தில் பங்குபெறுவதற்கான தெய்வீக உரிமையை உடைய தேவ-மனிதர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 தேவ மனிதர்களாக, தேவனுடைய தெய்வீகத்தில் பங்கு பெறுவதற்கு தெய்வீக உரிமை நமக்கு இருக்கிறது (யோவான் 3:6)
(நம்மால் தேவனுடைய தெய்வீகத்தில் பங்கு பெற முடியும் அதாவது தேவனில் பங்கு பெற முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவ மனிதர்கள் என்பவர்கள் தேவனால் பிறந்தவர்கள் (யோவா. 1:12-13; எபி. 2:10)
(தேவ-மனிதர்களின் முதல் தகுதி, அவர்கள் தேவனின் பல குமாரர்களாக இருக்கும்படி அவரால் பிறக்கின்றனர் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த2 தேவ மனிதர்களாக, தேவனுடைய ஜீவனில் பங்கு பெறுவதற்கு தெய்வீக உரிமை நமக்கு இருக்கிறது (யோவா. 3:15; கொரி. 3:4)
(மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மூலம் நாம் தேவனால் அவரது தெய்வீக ஜீவனைக்கொண்டு கிருபையளிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவ மனிதர்களாக, தேவனுடைய சுபாவத்தில் பங்கு பெறுவதற்கு தெய்வீக உரிமை நமக்கு இருக்கிறது (எபே. 1:4; 2 பேது. 1:4)
(தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய நமக்கு, பரிசுத்தமாயிருப்பதென்றால், தேவனுடைய தெய்வீக சுபாவத்தில் பங்குபெறு வதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 தேவ மனிதர்களாக, தேவனுடைய மனதில் பங்கு பெறுவதற்கு தெய்வீக உரிமையும் நமக்கு இருக்கிறது (பிலி. 2:5, 7-8)
(மனிதர்களாகிய நாம் தெய்வீக மனதை பெற முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய ஆள்தத்துவத்தில் பங்கு பெறுவதற்குகான தெய்வீக உரிமை தேவ மனிதர்களுக்கு இருக்கிறது (2 கொரி. 3:18; எபே. 3:8)
(கிறிஸ்துவின் ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியங்கள் நமக்குள் பகிர்ந்தளிக்கப்படுவதென்றால், நாம் தேவனின் ஆள்தத்துவத்தில் பங்கு பெறுகிறோம் என்று அர்த்தம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 தேவ மனிதர்களாக, தேவனுடைய சாயலில் பங்கு பெறுவதற்கு தெய்வீக உரிமையும் நமக்கு இருக்கிறது (2 கொரி. 3:18)
(கர்த்தராகிய ஆவியானவர் நம்மைக் கிறிஸ்துவின் சாயலாக மறுசாயலாக்கி, நம் ஆள்தத்துவத்தில் ஒரு வளர்சிதை மாற்றத்தைச் செயல்படுத்தும் வழி முறையில் இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய மகிமையில் பங்கெடுப்பதற்கு நாம் அவருடைய மகிமைக்குள் கொண்டு வரப்படுவோம் (ஆதி. 12:1, 4; எபி 2:10)
(தேவனின் மகிமை ஆபிரகாமை உலகத்திலிருந்து தேவனுக்கென்று பிரித்தெடுத்து, அவனுக்கு ஒரு மாபெரும் கவர்தலாக இருந்தது. தேவனின் மகிமை ஆபிரகாம் தேவனைப் பின்பற்றத் திறனளித்த ஒரு மாபெரும் உற்சாகப்படுத்துதலாகவும் பலமாகவும் இருந்தது என்பதை எடுத்துரையுங்கள்.)
நாள் 5
த1 தேவ மனிதனின் தெய்வீக உரிமையின் மற்றொரு அம்சம், தேவனுடைய குமாரத்துவத்தில் பங்கு பெறுவதற்கான உரிமையாகும் (ரோ. 8:23, 19, 21)
(ரோமர் 8இன்படி, குமாரத்துவத்தின் என்ன ஆசீர்வாதங்களை, தேவனுடைய குமாரர்களால் அனுபவிக்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மூலம் பிள்ளைகள், மறுசாயலாக்கப்படுதல்மூலம் குமாரர்கள், உருமாற்றம் அல்லது மகிமைப்படுத்தப்படுதல் மூலம் வாரிசுகள் (ரோ. 8:14, 16-17)
(மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மறுசாயலாக்கப்படுதல் மற்றும் உருமாற்றம் ஆகியவற்றை எடுத்துரையுங்கள். இவை அனைத்தும் குமாரத்துவத்தை நமக்கு தருகிறது)
நாள் 6
த1 தேவனுடைய தெய்வீகத்தில் பங்குபெறுவதற்கான தேவ-மனிதர்களின் தெய்வீக உரிமையில், தேவனுடைய ரூபத்தை ஏந்தும் உரிமையும் உள்ளடங்கும்.(1 யோவான் 3:2)
(நாம் தேவனுடைய ரூபத்தை ஏந்துவோம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவ-மனிதர்களுக்கு தேவ வகையாக- தேவ இனங்களாக இருப்பதற்கான தெய்வீக உரிமை உள்ளது (யோவா. 1:12; ரோ. 8:14, 16)
(நாம் தேவ இனமாக இருக்கும்படி மறு படிஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம். நாம் தேவ வகையாக, தேவனின் இனமாக இருக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)