Tamil – Prophesying Outline JSTS23 Week 09

கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்

செய்தி 9

மூன்று நிலைகளில் கிறிஸ்துவின் முழு ஊழியம்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல்

யோவான் 1:14 வார்த்தையானவர் மாம்சமாகி…நம் மத்தியில் வாசஸ்தலமிட்டார் (நாங்கள் அவருடைய மகிமையைத் தரிசித்தோம்…)

1 கொரி. 15:45 அந்தப்படியே, “முதல் மனிதனாகிய ஆதாம் ஜீவிக்கிற ஆத்துமாவானான்” என்றும் எழுதப்பட்டிருக்கிறது; கடைசி ஆதாம் ஜீவன்தரும் ஆவியானார்

வெளி. 1:4, 5 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவரிடமிருந்தும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளிடமிருந்தும்…உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

 

பசிதூண்டும் வார்த்தை
தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின் ஒப்பற்ற போதனை (1 தீமோ. 1:3-4), மாம்சமாகுதல், உள்ளடக்கம், அதிதீவிரமாகுதல் ஆகிய மூன்று நிலைகளில் கிறிஸ்துவின் முழு ஊழியத்தைப் பற்றிய போதனையாகும். அந்தப் போதனை என்ன?
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் என்னவாக இருக்கும், அது எவ்வாறு இருக்கும் என்பது நாம் இந்தப் போதனையை எவ்வாறு கையாளுகிறோம் என்பதைச் சார்ந்துள்ளது” (விட்னெஸ் லீ); இந்தப் போதனையை ஓர் எளிய வாக்கியத்தில் சுருக்கமாகக் கூறலாம் “தேவன் மாம்சமாகிறார், மாம்சம் ஜீவன்-தரும் ஆவியாகிறார். ஜீவன்-தரும் ஆவியானவர் கிறிஸ்துவின் சரீரமாக ஆகி, புதிய எருசலேமை முழுநிறைவாக்குகிற சபையைக் கட்டியெழுப்ப ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்ட ஆவியானார்

 

ஆவிக்குரிய பாரம்

தேவனின் உடன்-வேலையாட்களாக அவருடன் சேர்ந்து வேலைசெய்ய, நாம் கிறிஸ்துவை அவரது மூன்று தெய்வீக மற்றும் பரம்புதிரான நிலைகளில் அவரது முழு ஊழியத்தில் அறியவும், அனுபவமாக்கவும், அனுபவித்துமகிழவும் வேண்டும்.

அதிதீவிரமடைதல் என்ற இந்தக் காரியத்தை நாம் பரிசீலிக்கவும், “நான் உள்ளடக்கம் என்ற நிலையிலிருந்து அதிதீவிரமாகுதல் என்ற நிலைக்கு முன்னேற விரும்புகிறேன். கர்த்தாவே, நீர் ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்டிருக்கிறீர், புதிய எருசலேமை முழுநிறைவாக்க சரீரம் கட்டியெழுப்பப்படுமாறு, சபையின் சீரழிவை ஜெயங்கொள்ள நானும் அதிதீவிரமாக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறேன்” என்று கூறி தவிப்புடன் கர்த்தரிடம் ஜெபிக்கவும் வேண்டும்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின் ஒப்பற்ற போதனை, மாம்சமாகுதல், உள்ளடக்கம், அதிதீவிரமாகுதல் ஆகிய மூன்று நிலைகளில் கிறிஸ்துவின் முழு ஊழியத்தைப் பற்றிய போதனையாகும்

முதல் நிலையில், அதாவது, தம் மனிதப் பிறப்புமுதல் தம் மரணம்வரை தம் மாம்சமாகுதலின் நிலையில், கிறிஸ்து பின்வரும் முக்கிய காரியங்களை நிறைவேற்றினார். கிறிஸ்து தம் மாம்சமாகுதலின் நிலையில் வரம்பற்ற தேவனை வரம்புள்ள மனிதனுக்குள் கொண்டுவந்தார். கிறிஸ்து மூவொரு தேவனை முப்பகுதி மனிதனுடன் ஒன்றிணைத்து, கலந்திணைத்து, கூட்டிணைத்தார்.

தம் உயிர்த்தெழுதலிலிருந்து சபையின் சீரழிவு வரையுள்ள தம் உள்ளடக்கத்தின் நிலையாகிய இரண்டாம் நிலையில், கிறிஸ்து பின்வரும் முக்கியக் காரியங்களை நிறைவேற்றினார். அவர் தேவனுடைய முதற்பேறான குமாரனாக இருக்கும்படி உயிர்த்தெழுதலில் பெற்றெடுக்கப்பட்டார். கடைசி ஆதாம், ஜீவன்-தரும் ஆவியானார்.

சபையின் சீரழிவுமுதல் புதிய எருசலேமின் முழுநிறைவேற்றம்வரை, தம் அதிதீவிரமடைதலின் நிலையாகிய மூன்றாம் நிலையில், கிறிஸ்து தம் ஜீவாதார இரட்சிப்பை அதிதீவிரமாக்குகிறார், ஜெயங்கொள்பவர்களை உற்பத்திசெய்கிறார், புதிய எருசலேமை முழுநிறைவாக்குகிறார்.

 

ஜீவனின் அனுபவம்

தெய்வீகம், பரிசுத்தத்தின் ஆவியானவர், கிறிஸ்துவில் அவரது மரணத்தில் கிரியைசெய்தார், உயிர்த்தெழுதலில் அவர் தேவனுடைய முதற்பேறான குமாரனாகவும், ஜீவன் பகிர்ந்தளிக்கும் ஆவியானவராகவும் இருக்கும்படி “மலர்ந்தார்”, நம்மை தம் அநேக சகோதரர்களாக ஆக்க தம் தெய்வீக ஜீவனை நமக்குள் உட்பகிர்ந்தார். உயிர்த்தெழுதலில் கிறிஸ்து தம் மனுஷீகத்தில் தேவனுடைய குமாரனாக நியமிக்கப்பட்டார், இத்தகைய ஓர் உயிர்த்தெழுதலின் மூலம் நாமும் தேவனுடைய குமாரர்களாக நியமிக்கப்படும் வழிமுறையில் இருக்கிறோம்.

கிறிஸ்துவின் விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவின் ஒரே சரீரத்திற்குள் ஒரே ஆவியானவரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டமைப்பிற்காக இந்த ஒரே ஆவியானவரைப் பருகக் கொடுக்கப்பட்டுள்ளனர். தம் உயிர்த்தெழுதலில் கிறிஸ்து தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதன்மூலம் தம்மையே அளவற்ற சகலத்தையும்-உள்ளடக்கிய ஜீவன்-தரும் ஆவியாகக் கொடுத்தார்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

நாம் ஜெயங்கொள்பவர்களாக இருக்க விரும்பினால், கர்த்தர்மீதான நம் முதல் அன்பை நாம் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். நாம் நம் வாழ்க்கையில் கிறிஸ்துவை எல்லாமாகக் கருதி, எல்லாக் காரியங்களிலும் எல்லா விஷயங்களிலும் முதல் இடத்தை, முதல் நிலையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

ஏழுமடங்கு அதிதீவிரமடைந்த ஆவிக் கிறிஸ்துவின் பேசுதல் மூலமும், ஜெயங்கொள்ளும் பரிசுத்தவான்கள் தங்கள் ஆவியில் வாழ்வதன் மூலமும் நாம் சீரழிவிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம்.

அதிதீவிரமடைதல் என்ற இந்தக் காரியத்தை நாம் பரிசீலிக்கவும், “நான் உள்ளடக்கம் என்ற நிலையிலிருந்து அதிதீவிரமாகுதல் என்ற நிலைக்கு முன்னேற விரும்புகிறேன். கர்த்தாவே, நீர் ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்டிருக்கிறீர், புதிய எருசலேமை முழுநிறைவாக்க சரீரம் கட்டியெழுப்பப்படுமாறு, சபையின் சீரழிவை ஜெயங்கொள்ள நானும் அதிதீவிரமாக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறேன்” என்று கூறி தவிப்புடன் கர்த்தரிடம் ஜெபிக்கவும் வேண்டும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்-ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 தேவனுடைய மைய வெளிப்பாடு (யோவான்1:14; 1 கொரி . 15:45b; வெளி . 1:4)

(தேவனுடைய மைய வெளிப்பாடு என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவின் முழு ஊழியத்தில் கிறிஸ்துவை அனுபவமாகவும் அனுபவித்து மகிழ்வதினால் அவரை ஆதாயப்படுத்த வேண்டும் (பிலி. 3:8)

(கிறிஸ்துவை ஆதாயப்படுத்துவதென்றால், ஒரு விலைசெலுத்துவதன் மூலம் அவரது ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியங்கள் அனைத்தையும் அனுபவமாக்குவதும், அனுபவித்துமகிழ்வதும், உடைமையாக்குவதும் ஆகும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 கிறிஸ்து நறுமணமிக்க நற்பண்புகள் மூலம் தம் ஐசுவரியமான குணாம்சங்களில் உதாரத்துவமான தேவனை தம் மனுஷீகத்தில் வெளிக்காட்டவும் செய்தார் (லூக்கா 7:47-48)

(இந்த ஐசுவரியமான குணாம்சங்கள் கர்த்தராகிய இயேசுவால் அவரது மனுஷீகத்தில் நறுமண நற்பண்புகளாக ஆகுமாறு அவரது மனுஷீகத்தில் வெளிக்காட்டப்பட்டன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 அவரது தெய்வீக குணாம்சங்களுடன் அவரது மனித நற்பண்புகளில் (லூக்கா 7:47-48)

(அவரது தெய்வீக குணாம்சங்களுடன் அவரது மனித நற்பண்புகளில் உள்ள வெளியாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான ஓர் உதவியாக, லூக்கா சுவிசேஷத்தில் 7:36-50 உள்ள சில சம்பவங்களை நாம் உதாரணங்களாகப் பயன்படுத்துவோம்)

 

நாள் 3

த1 உயிர்த்தெழுதல்மூலம் அவர் தம் மனுஷுகத்துடன் தேவனுடைய குமாரனாக நிரூபித்துக்காட்டப்பட்டார் (அப். 13:33; எபி. 1:5; கலா. 4:6)

(நாம் மனுஷ குமாரர்களாகப் பிறந்தோம். ஆனால் நாம் தேவனுடைய குமாரர்களாக மறுபடிபிறந்திருக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 உங்களை மேம்படுத்த முயற்சிசெய்யாதீர்கள் அதற்கு மாறாக நிரூபிக்கப்பட்ட ஆவியானவரை அனுபவித்து அனுபவமாக்குங்கள் (ரோ. 1:3-4; 8:13)

(நாம் அனுதினமும் ஆவியானவரின்படி நடந்தால், நாம் உயிர்த்தெழுதலால் நிரூபிக்கப்படும் வழிமுறையில் முழுவதும் இருப்போம் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் தேவனின் ஆவி ஜீவன் தரும் ஆவியாக இருக்கும்படி முழுநிறைவடைந்தார் (1 கொரி 15:45)

(கிறிஸ்துவின் இரண்டாம் நிலையைப்பற்றி பேசுவதில் நாம் “உள்ளடக்கம்” என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறோம்?)

த2 தெய்வீக ஜீவன் நம் முப்பகுதி ஆள்தத்துவத்திற்குள்ளாக பகிர்ந்தளிக்கப்பட்டது (ரோ. 8:10, 6, 11)

(மையம்முதல் இடைப்பகுதி வழியாக சுற்றளவுவரை, மூவொரு தேவனின் ஜீவன் நம் முழு ஆள்தத்துவத்திற்குள்ளும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 ஏழு ஆவிகள் ஏழு தனிப்பட்ட ஆவிகள் அல்ல. மாறாக ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்ட ஒரே ஆவியானவர். (வெளி. 1:4-5)

(ஒரே ஜீவன் தரும் ஆவியாக கிறிஸ்து ஏழு மடங்கு அதிதீவிரப்படுத்தப்பட்ட ஆவியானார் என்பதற்கான காரணம் மற்றும் குறிக்கோளை எடுத்துரையுங்கள்.)

த2 ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்ட ஆவியானவராக, கிறிஸ்து சபையின் சீரழிவுடன் தொடர்புடைய காரியங்களிலிருந்து விசுவாசிகளை இரட்சிக்கிறார். (வெளி.2:4-5)

(வெளிப்படுத்தின விசேஷம் 2இல் எபேசு சபையில் இழக்கப்பட்ட நான்கு காரியங்கள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 வரம்பற்ற, ஜீவன்-விடுவிக்கும், ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்ட ஆவிக் கிறிஸ்துவின் பேசுதலால் நாம் சீரழிவிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம் (வெளி. 5:6)

(நம் ஜெயங்கொள்ளுதல் கிறிஸ்துவின் பேசுதல் ஆவியானவரின் பேசுதலாக ஆவதன்மூலம் உள்ளது. அது எல்லா நேரமும் நம் ஆவியில் வாழ்வதின் மூலம் உள்ளது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவின் ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்ட பரலோக ஊழியம் (வெளி. 19:7; 17:14; 20:1-3)

(கிறிஸ்துவின் ஏழுமடங்கு அதிதீவிரமாக்கப்பட்ட பரலோக ஊழியம், கிறிஸ்து மனுஷீகத்தில் தம் பிரதான எதிரிகளைத் தோற்கடித்து, அழிப்பதற்காக திருமண சேனையை உருவாக்குவதற்காகவும் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)