கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்
செய்தி 8
ஜீவனில் ஆளுகை செய்தல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
ரோ. 5:17 ஏனெனில் அந்த ஒருவனுடைய மீறுதலினால், அந்த ஒருவன்மூலம் மரணம் ஆளுகைசெய்தது என்றால், அதற்கும் மேலாய், கிருபை மற்றும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தைப் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர்மூலம் ஜீவனில் ஆளுகைசெய்வார்கள்.
ரோ. 5:21 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் நித்திய ஜீவனுக்கு ஏதுவாக நீதியின்மூலம் ஆளுகைசெய்யும்படி…
பசிதூண்டும் வார்த்தை
கிறிஸ்துவை ஆவலாய் பின்தொடர்வதின் அதிஉயர்ந்த அடைதல் என்ன? அனுபவத்தில் ஜீவனில் ஆளுகை செய்தல் என்றால் என்ன?
கிறிஸ்துவை ஆவலாய்ப் பின்தொடர்வதன் அதிஉயர்ந்த அடைதல், கிறிஸ்துவின் பெருகுகின்ற கிருபையின்மூலம் அவரது தெய்வீக ஜீவனில் அவரோடு ஆளுகைசெய்வதாகும். ஜீவனில் ஆளுகைசெய்வதென்றால் சாத்தான், உலகம், பாவம், மாம்சம், நாம், எல்லாச் சுற்றுப்புற சூழல்கள் ஆகியவற்றை ஜெயங்கொண்டு, கீழ்ப்படுத்தி, அவற்றின்மீது ஆளுகைசெய்வதாகும்.
அனுபவத்தில், ஜீவனில் ஆளுகைசெய்வதென்றால் தெய்வீக ஜீவனின் ஆளுகையின்கீழ் இருப்பது என்று அர்த்தமாகும். தெய்வீக ஜீவனின் ஆட்சியின்கீழ் இருப்பதன்மூலம் நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும்போது, நாம் இருளின் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்படுகிறோம். நாம் தெய்வீக ஜீவனின் ஆட்சியின்கீழ் இருக்கும்போது, நாம் தேவனுடைய அன்பின் குமாரனின் இராஜ்ஜியத்தில் வாழ்கிறோம். அங்கு நாம் அன்பின் இனிமையில் ஆளுகை செய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறோம். ஜீவனில் ஆளுகைசெய்வதென்றால், எல்லாவித முரட்டாட்டத்தையும் கீழ்ப்படுத்துவதாகும். ஜீவனில் ஆளுகைசெய்வதென்றால், நம் இருதயங்கள் கர்த்தரால் வழிநடத்தப்படுவதாகும்.
ஆவிக்குரிய பாரம்
நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும் அனுபவத்திற்குள் நுழைய வேண்டும். நாம் ஒரு தெய்வீகமான, ஆவிக்குரிய, பரலோக, இராஜரீக, இராஜாங்க ஜீவனால் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம்; இந்த ஜீவன் எல்லாவற்றின்மீதும் இராஜாக்களாக ஆளுகைசெய்ய நம்மை சிங்காசனத்தில் அமர்த்துகிறது. அனுபவத்தில், ஜீவனில் ஆளுகை செய்வதன் அர்த்தம் என்னவென்றால், தெய்வீக ஜீவனின் ஆட்சிசெய்தலின்கீழ் இருப்பதாகும்.
தெய்வீக ஜீவனின் ஆட்சிசெய்தலின்கீழ் நாம் ஜீவனில் ஆளுகைசெய்வதின் விளைவு, சபை வாழ்க்கையில் வெளிக்காட்டப்படும் நிஜமான, நடைமுறைக்குரிய சரீர வாழ்க்கையாகும். நாம் ஜீவனில் ஆளுகைசெய்வதன் மூலம் சரீர வாழ்க்கைக்கான அதிஉயர்ந்த நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
தேவனுடைய முழுமையான இரட்சிப்பு என்பது நாம் கிருபை மற்றும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தினால் ஜீவனில் ஆளுகைசெய்வதாகும்.
ரோமர் 5இல் ஜீவனில் ஆளுகைசெய்தலே ரோமர் 6-16இலுள்ள எல்லாவற்றிற்குமான திறவுகோலாகும்.
தெய்வீக ஜீவனின் ஆட்சிசெய்தலின்கீழ் நாம் ஜீவனில் ஆளுகைசெய்வதின் விளைவு, சபை வாழ்க்கையில் வெளிக்காட்டப்படும் நிஜமான, நடைமுறைக்குரிய சரீர வாழ்க்கையாகும்.
ரோமர் 16, எல்லாப் பரிசுத்தவான்களையும் கிறிஸ்துவின் முழு சரீரத்தின் இழைந்திணைந்த ஜீவனுக்குள் கொண்டுவருவதில் அப்போஸ்தலனாகிய பவுலின் ஒரு மேன்மையான முன்மாதிரியை நமக்குத் தருகிறது; இத்தகைய ஓர் ஜீவனில்தான் நாம் மெய்யாகவே ஜீவனில் ஆளுகைசெய்ய முடியும்.
ஜீவனின் அனுபவம்
நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும் அனுபவத்திற்குள் நுழைய வேண்டும். நாம் ஒரு தெய்வீகமான, ஆவிக்குரிய, பரலோக. இராஜரீக, இராஜாங்க ஜீவனால் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம். இந்த ஜீவன் எல்லாவற்றின்மீதும் இராஜாக்களாக ஆளுகைசெய்ய நம்மை சிங்காசனத்தில் அமர்த்துகிறது. நாம் தெய்வீக ஜீவனின் ஆட்சியின்கீழ் இருக்கும்போது, நாம் தேவனுடைய அன்பின் குமாரனின் இராஜ்ஜியத்தில் வாழ்கிறோம், அங்கு நாம் அன்பின் இனிமையில் ஆளுகை செய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறோம்.
ஜீவனில் ஆளுகைசெய்வதென்றால், எல்லாவித முரட்டாட்டத்தையும் கீழ்ப்படுத்துவதாகும். ஆளுகைசெய்யும் ஆவி என்பது பலமாகவும், ஜீவிக்கிறதாகவும், செயலற்றதாயில்லாமல் துடிப்பானதாகவும், எதிர்மறையானதாயில்லாமல் நேர்மறையாகவும், அலட்சியமானதாயில்லாமல் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நாம் நம் சரீரங்களை ஒரு ஜீவிக்கிற பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். நாம் இந்த யுகத்திற்கேற்றபடி வேஷந்தரிக்கக் கூடாது, மாறாக மனம் புதிதாகிறதினால் மறுசாயலாக வேண்டும்.
நாம் ஜீவனில் ஆளுகைசெய்வதன்மூலம் சரீர வாழ்க்கைக்கான அதிஉயர்ந்த நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும். நாம் மாய்மாலமின்றி நேசிக்கவும். ஒருவரையொருவர் சகோதர சிநேகத்தில் கனிவாய் நேசிக்கவும் வேண்டும். நாம் வைராக்கியத்தில் சோம்பலாய் இருக்கக்கூடாது. மாறாக ஆவியில் அனலாயிருந்து கர்த்தரைச் சேவிக்க வேண்டும். நாம் களிகூருகிறவர்களுடன் களிகூர வேண்டும், அழுகிறவர்களுடன் அழ வேண்டும். கூடுமானால், நம்மாலானமட்டும் எல்லா மனிதர்களுடனும் சமாதானமாய் வாழ வேண்டும்
உள்ளூர் சபைகளைக் கிறிஸ்துவின் சரீரத்தின் ஐக்கியத்திற்குள் கொண்டுவருவதற்கு அப்போஸ்தலனாகிய பவுலைப் பின்பற்றுவதில் நாம் ஜீவனில் ஆளுகைசெய்ய வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 ஜீவனில் நாம் ஆளுகைசெய்வது, தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பை அனுபவிக்கும் நம் அனுபவத்தின் நிரூபணமாகும். (ரோம. 5:10, 17)
(தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பில் நாம் எவ்வளவாய் இரட்சிக்கப்படுகிறோம் என்பது, ஜீவனில் நம் ஆளுகை எவ்வளவாய் வெளியரங்கமாக்கப்படும் என்பதைத் தீர்மானிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 ஆளுகின்ற கிருபை எப்போதும் பெருகுகின்ற கிருபையை பின்தொடர்கிறது (ரோ. 5:17)
(கிருபை நம்மில் ஆளுகைசெய்கையில் நாம் ஜீவனின் ஆளுகைசெய்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 நீதிப்படுத்தப்பட்ட ஒரு நபர் ஆளுகைசெய்யும்படி அவனிடம் தெய்வீக ஜீவன், அதாவது ஓர் இராஜரீக ஜீவன் இருப்பதால் அவன் ஆளுகைசெய்ய வேண்டும். (ரோ. 5:17, 21)
(ஏன் நம்மால் இப்போது ராஜாக்களாக ஜீவனில் ஆளுகைசெய்ய முடிகிறது?)
த2 நாம் நம் அரசத்துவத்தை பயிற்சிசெய்ய கற்றாக வேண்டும் (ரோ. 5:17, 21)
(கிறிஸ்துவின் தெய்வீக ஜீவனின் ஆளுகைசெய்தல் நம்மை எல்லாவிதமான முரட்டாட்டத்திலிருந்தும் இரட்சிக்கிறது மற்றும் எல்லாவிதமான எதிர்மறையான காரியங்களிலிருந்தும் நம்மை இரட்சிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 ரோமர் 5இலுள்ள ஜீவனில் ஆளுகைசெய்வது மீதமுள்ள ரோமர் 6முதல் 16வரை உள்ள புத்தகங்களை திறப்பதற்கான திறவுகோல்
(ரோ. 5:17, 21)
(நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும்போது ரோமர் 6முதல் 16வரை வழங்கப்பட்டுள்ள என்னென்ன காரியங்களில் நாம் இருக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்.)
த2 ஜீவனின் ஆளுகை செய்வதன்மூலம் உச்சநிலையான நம் தெய்வீக குமாரத்துவத்தில் பங்குபெறுதல் (ரோ. 8:23)
(நாம் ஜீவனின் ஆளுகைசெய்யும்போது தேவன் நமக்காக இருப்பதன்மூலம், நாம் சுற்றுச்சூழல் கஷ்டங்களையும் பாடுகளையும் முற்றும் முடிய ஜெயிக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 தெய்வீக ஜீவனின் ஆட்சிசெய்தலின்கீழ் நாம் ஜீவனின் ஆளுகைசெய்வதின் விளைவு, நிஜமான, நடைமுறைக்குரிய சரீர வாழ்க்கையாகும் (ரோ. 12:1-3)
(சரீர வாழ்க்கையை வாழ்வதற்காக ரோமர் 12முதல் 13வரை குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காரியமும் நம் தெய்வீக ஜீவனால் ஆளுகைச்செய்யப்பட, கர்த்தருக்கு வாழ நம்மைக் கோருகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சரீர வாழ்க்கைக்கான அதி உயர்ந்த நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை நாம் வாழ வேண்டும் (ரோ. 12:9-21)
(ஜீவனில் ஆளுகைசெய்வதன்மூலம் மட்டுமே நம்மால் சரீர வாழ்க்கைக்கான அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை பெற முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 ஜீவனில் ஆளுகைசெய்கிற ஒருவனின் முன்மாதிரியிலுள்ள முதல் உருப்படி சுவிசேஷம் பிரசங்கித்தலாகும் (ரோ. 15:16)
(நாம் தெய்வீக ஜீவனின் ஆளுகையின்கீழ் இருக்கும்போது, நாம் புறத்தூண்டுதலின்றி சுவிசேஷத்தைப் பிரசங்கிப்போம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 ஒரே சரீரம் ஒரே ஆவியானவர் (1 கொரி. 12:13)
(எபேசியர் 4:4 இல் சரீரம் ஆவியானவருக்கு முன்பாக ஏன் குறிப்பிடப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1(பவுல் பரிந்துரைகள் மற்றும் வாழ்த்துதல்களால் கிறிஸ்துவின் முழு சரீரத்தின் இழைந்திணைந்த வாழ்க்கைக்குள் எல்லா பரிசுத்தவான்களையும் கொண்டுவந்தார்)
(ரோமர் 16, எல்லாப் பரிசுத்தவான்களையும் கிறிஸ்துவின் முழு சரீரத்தின் இழைந்திணைகிற வாழ்க்கைக்குள் கொண்டுவருவதில் அப்போஸ்தலனின் ஒரு மேன்மையான முன்மாதிரியை நமக்குத் தருகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சபை வாழ்க்கையின் நடைமுறைப் பயிற்சிக்கான முதல் கோரிக்கை, நாம் சபையைச் சேவிப்பதாகும் (ரோம. 16:1)
(பெபேயாளைப் போல நாமெல்லாரும் சபை வாழ்க்கையில் சேவிக்கிறவர்களாக இருந்தாக வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)