Tamil – Prophesying Outline JSTS23 Week 07

கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்

செய்தி 7

தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் இரண்டு அம்சங்கள்—சட்டரீதியான மீட்பு கூட்டல் ஜீவாதார இரட்சிப்பு

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்

ரோ. 5:10 ஏனெனில் தேவனுக்கு எதிரிகளாயிருந்த நாம், அவருடைய குமாரனின் மரணத்தின்மூலம் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால், அதற்கும் மேலாய் அவருடைய ஜீவனில் இரட்சிக்கவும்படுவோம்; இது நாம் ஒப்புரவாக்கப்பட்டிருப்பதால்…

ரோ. 12:2 மேலும் நீங்கள் இந்த யுகத்திற்கேற்றபடி வேஷந்தரிக்காதீர்கள், மாறாக…மனம் புதிதாகிறதினால் மறுசாயலாகுங்கள்.

ரோ. 8:30 எவர்களை முன்குறித்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிப்படுத்தியுமிருக்கிறார். எவர்களை நீதிப்படுத்தினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

 

பசிதூண்டும் வார்த்தை

தேவன் தம் வாழ்வின்மூலம் ஜீவாதார முறையில் செயல்படுத்திய இரட்சிப்பு சேர்க்கப்பட்டுள்ளதா?

(1) நாம் தேவனுடைய நித்திய ஜீவனைப் பெறுவதற்கான மறுபடிஜெநிப்பிக்கப்படுதல், (2) நாம் தெய்வீக ஜீவனில் வளர்வதற்கும் வாழ்வதற்குமான மேய்த்துப்பேணப்படுதல், (3) நம் பிறவிக்குணத்தில் பரிசுத்தமாக்கப்படுதல், (4) நம் மனதில் புதிதாக்கப்படுதல், (5) நம் சாயலில் மறுசாயலாக்கப்படுதல், (6) இது, தேவனுடைய கட்டிடத்தை விளைவித்தல், (7) தேவனுடைய முதற்பேறான குமாரனின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுதல், அதாவது தெய்வீக ஜீவனில் முதிர்ச்சியடைதல், மற்றும் (8) தேவனுடைய நித்தியப் பொருளாட்சியின் முழுநிறைவேற்றமாகிய மகிமைப்படுத்தப்படுதல்

 

ஆவிக்குரிய பாரம்

எட்டுப் பிரிவுகளிலுள்ள தேவனின் ஜீவாதார இரட்சிப்பில் அவரது இலக்கு, தேவத்துவத்திலன்று, மாறாக ஜீவனிலும், சுபாவத்திலும், வெளியாக்கத்திலும் நம்மை தேவனாக்குவதாகும், அதாவது, நம்மை தேவனின் ஒரு மறுஉற்பத்தியாக்குவதாகும், நகலாக்குவதாகும்; “நம் ஆவியுடன்கூட ஆவியானவர்தாமே” தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் இரகசியமாவார்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

தேவனின் முழுமையான இரட்சிப்புக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன சட்டரீதியான அம்சம், ஜீவாதார அம்சம்.

தேவனுடைய இரட்சிப்பின் ஜீவாதார அம்சம் பின்வரும் எட்டுப் படிகளில் ஜீவன்-தரும் ஆவியாகக் கிறிஸ்துவினால் அகம்சார்ந்தரீதியில் கிறிஸ்துவின் பரலோக ஊழியத்தின் தெய்வீக மற்றும் பரம்புதிரான மண்டலத்தில் செயல்படுத்தப்படுகிறது

எட்டுப் பிரிவுகளிலுள்ள தேவனின் ஜீவாதார இரட்சிப்பில் அவரது இலக்கு, தேவத்துவத்திலன்று, மாறாக ஜீவனிலும், சுபாவத்திலும் வெளியாக்கத்திலும் நம்மை தேவனாக்குவதாகும், அதாவது, நம்மை தேவனின் ஒரு மறுஉற்பத்தியாக்குவதாகும், நகலாக்குவதாகும்; “நம் ஆவியுடன்கூட ஆவியானவர்தாமே” தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் இரகசியமாவார்.

 

ஜீவனின் அனுபவம்

விசுவாசிகளின் முழு ஆள்தத்துவத்தையும் புதிய மனிதனின் அவயவமாகப் புதிதாக்க விசுவாசிகளின் மனதிற்குள் பரவும்படி, கிறிஸ்துவினால் உள்வசிக்கப்படும் விசுவாசிகளின் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியுடன் ஒரே ஆவியாகக் கலந்திணைந்திருக்கும் புதிதாக்கும் ஆவியானவரால் இது செயல்படுத்தப்படுகிறது.

ஒத்தசாயலாக்கப்படுதல், விசுவாசிகள் கிறிஸ்துவினுடைய நிறைவுக்குரிய வளர்த்தியின் அளவை, முழு வளர்ச்சியடைந்த மனிதனாக இருக்கும்படி கிறிஸ்துவைக்கொண்டு வளமாக்கப்பட்ட அவர்களது ஆவியில் முதிர்ச்சியாக்கும் ஆவியானவரால் தெய்வீக ஜீவனில் முதிர்ச்சியடைந்திருக்கும்போது ஏற்படுகிறது.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

கிறிஸ்துவின் தெய்வீக ஜீவனுக்கு விசுவாசிகளை ஒழுங்குபடுத்தவும், மகிமையில் கர்த்தருடைய சாயலுக்குள் அவர்களை மறுசாயலாக்கவும் வழி இருக்குமாறு விசுவாசிகள் ஆவியானவரால் வாழவும் நடக்கவும் (கலா. 5:16, 25), கலந்திணைந்த ஆவியின்படி நடக்கவும் (ரோ. 8:4) வேண்டும்

எட்டுப் பிரிவுகளிலுள்ள தேவனின் ஜீவாதார இரட்சிப்பில் அவரது இலக்கு, தேவத்துவத்திலன்று, மாறாக ஜீவனிலும், சுபாவத்திலும் வெளியாக்கத்திலும் நம்மை தேவனாக்குவதாகும், அதாவது, நம்மை தேவனின் ஒரு மறுஉற்பத்தியாக்குவதாகும், நகலாக்குவதாகும்; “நம் ஆவியுடன்கூட ஆவியானவர்தாமே” தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் இரகசியமாவார்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 தேவனுடைய முழுமையான இரட்சிப்புக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன (எபே. 1:7; ரோ. 5:10)

(தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் முதலாவது அம்சம் சட்டரீதியான அம்சம், நிறைவேற்றப்பட்ட ஐந்து காரியங்கள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஜீவாதார அம்சம், புதிய எருசலேமை முழுநிறைவாக்கப்போகும் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியமைக்க தேவனுடைய சபையை விளைவிக்கின்றன. (ரோம. 5:21)

(நோக்கத்தின் அம்சத்தில், தேவன் தம்முடைய ஜீவனால் ஜீவாதாரரீதியாக நிறைவேற்றியது இரட்சிப்பு என்பதையும், அதில் எட்டு காரியங்கள் அடங்கியுள்ளன என்பதையும் எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் வழிமுறையையும், அவரது முழுமையான இரட்சிப்பின் குறிக்கோளையும் நாம் வேறுபடுத்துவது மிகவும் முக்கியமானது. (எபே . 1:7; ரோம. 3:24)

(வழிமுறை சட்டரீதியானது, குறிக்கோள் ஜீவாதாரமானது. மேலும், இந்த வழிமுறை பௌதிக மண்டலத்தில் உள்ளது, குறிக்கோள் பரம்புதிரான மண்டலத்தில் உள்ளது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஜீவன்-தரும் ஆவியானவராக கிறிஸ்து. எட்டுப் படிகளில் தேவனின் ஜீவாதார இரட்சிப்பை அகம்சார்ந்தரீதியில் நிறைவேற்றுவதன்மூலம் தம் பரலோக ஊழியத்தை நிறைவேற்றுகிறார்.
(ரோ. 8:9-10)

(சட்டரீதியான அம்சம் என்பது தேவனுடைய இரட்சிப்பின் வழிமுறையாகிய தேவனுடைய நீதியின்படி இருக்கிறது. தேவனுடைய இரட்சிப்பின் ஜீவாதார அம்சம் தேவனுடைய இரட்சிப்பை நிறைவேற்றுவதற்கு தேவனுடைய ஜீவனின்மூலம் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 மறுபடி ஜெநிப்பிக்கப்படுதல் என்பது விசுவாசிகள் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, தேவனுடைய ஜீவனில் பங்குபெறுமாறு, அவர்களுக்குள் தேவன் தம் ஜீவனை உட்பகிர்வதாகும். (யோவான் 3:3, 6)

(எவ்வாறு ஒரு மனிதன் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டான் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 மறுபடிஜெநிப்பிக்கப்படு தல் என்பது தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் மையமாகவும், தேவனுடைய இரட்சிப்பின் ஜீவாதாரமான அம்சத்தில் அதின் தொடக்கமாகவும் உள்ளது (1 பேது. 1:23; யோவான் 1:12-13)

(மறுபடிஜெநிப்பிக்கப்படுவதற்கான வழி இயேசுவில் விசுவாசித்து அவரைப் பெற்றுக்கொள்வதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்கு, அதாவது, புதிய விசுவாசிகளுக்கு உணவூட்டுவதே ஆரம்ப உணவூட்டுதலாகும் (1 பேது. 2:2; யோவான் 6:63)

(புதிய விசுவாசிகளாகிய, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்கு, அவர்களது அனுதின இரட்சிப்புக்கென்று அவர்கள் தெய்வீக ஜீவனில் வளர்வதற்காக ஆவியானவராகிய வார்த்தையின் பாலைக்கொண்டு நாம் உணவூட்டுகிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஆரம்ப உணவூட்டுதலைத் தொடர்ந்து தொடர்ச்சியான உணவூட்டுதல் வருகிறது(எபி. 5:14)

(தொடர்ச்சியான உணவூட்டுதல் என்பது கிறிஸ்துவின் சாயலுக்கு மறுசாயலாக்கப்படுதல் மற்றும் ஒத்தசாயலாக்கப்படுதலுக்கென்று விசுவாசிகள் தெய்வீக ஜீவனில் முதிர்ச்சியடைவதற்காக ஜீவ ஆவியாகிய திடமான வார்த்தையைக்கொண்டு வளரும் விசுவாசிகளுக்கு உணவூட்டுவதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 புதிதாக்கப்படுதலில் கலந்திணைந்த ஆவி நம் தொந்தரவு உண்டாக்கும் மனதை ஊடுருவிச்சென்று, அது மாற்றப்படும்படி, அது கிறிஸ்துவின் மனமாக ஆகும்படிக்கூடச் செய்கிறது (எபே. 4:23; வெளி. 21:2)

(விசுவாசிகள் எல்லாரும் புதிய எருசலேமை முழுநிறைவாக்கும் பகுதியாக இருப்பார்கள் என்பதால், அவர்கள் புதிய எருசலேமைப்போல் புதிதாக இருக்க புதிதாக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 மறுசாயலாக்கப்படுதல் என்பது ஒரு புறம்பான வெளியாக்கத்தை விளைவிக்கும் உள்ளார்ந்த வளர்சிதைமாற்றத்தைப் பற்றிய ஒரு காரியமாகும் (ரோ. 12:2; 2 கொரி. 3:18)

(மறுசாயலாக்கப்படுதல், கிறிஸ்துவின் மகிமையின் சாயலுக்குள் விசுவாசிகளை மறுசாயலாக்குகிற கர்த்தராகிய ஆவியானவரால் (ஆவிக் கிறிஸ்துவால் நிறைவேற்றப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 மகிமைப்படுத்தப்படுதல் என்பது மகிமைக்குள் நுழைவதாகும் (ரோ. 8:23, 30)

(மகிமைப்படுத்தப்படுதல் என்பது விசுவாசிகள் கிறிஸ்துவின் ஜீவனில் முதிர்ச்சியடைவதற்கு வளர்வதாகும் (ரோ. 8:23, 30)

த2 மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் என்பது தேவன் மனிதனுக்குள் நுழைவதாகும். இப்படியிருக்க மகிமைப்படுத்தப்படுதல் என்பது மனிதன் தேவனுக்குள் நுழைவதாகும். (ரோ. 8:23, 30)

(முதிர்ச்சியடைந்த விசுவாசிகளின் மகிமைப்படுத்தப்படுதல், தேவனின் ஜீவாதார இரட்சிப்பில் உள்ள அவர்களது தெய்வீகக் குமாரத்துவத்தின் தலைசிறந்த பங்காகும் என்பதை எடுத்துரையுங்கள்)