கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்
செய்தி 6
தேவனின்படி மேய்த்துப்பேணுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்.
வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல்.
1 பேது. 5:2-3 உங்களிடையேயுள்ள தேவனுடைய மந்தையை, கட்டாயத்தினால் அல்ல, தேவனுக்கேற்றபடி மனப்பூர்வமாயும்…கண்கணிப்பு செய்து, அதை மேய்த்துப்பேணுங்கள்.
1 பேது. 2:25 ஏனெனில் நீங்கள் வழிதவறி நடத்தப்படும் செம்மறிகளைப்போல் இருந்தீர்கள், ஆனால் இப்போது உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும் கண்காணியுமானவரிடம் திரும்பிவந்துவிட்டீர்கள்,
அப். 20:28 உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்த தம்முடைய சபையை மேய்த்துப்பேணும்படி பரிசுத்த ஆவி எதன் மத்தியில் உங்களைக் கண்காணிகளாக வைத்திருக்கிறாரோ அந்த மந்தை முழுவதைக்குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்.
பசிதூண்டும் வார்த்தை
தேவனின்படி மேய்த்துபேணுதல் என்றால் என்ன?
தேவனின்படி மேய்த்துப்பேணுவதென்றால், நம் முன்தெரிவு, ஆவல், குறிக்கோள், பிறவிக்குணம் ஆகியவற்றின்படி அல்ல, மாறாக தேவனின் சுபாவம், வாஞ்சை, வழி, மகிமை ஆகியவற்றின்படி மேய்த்துப்பேணுவதாகும். ஒன்று பேதுரு 5:2இலுள்ள தேவனின்படி என்பதற்கு, நாம் தேவனை வாழ்கிறோம் என்று அர்த்தம்; தேவனை வாழ்கிறவர்கள் மட்டுமே தேவனின்படி மேய்த்துப்பேண முடியும்.
தேவனின்படி மேய்த்துப்பேணுவது என்றால், தேவன் தம் குணாம்சங்களில் என்னவாக இருக்கிறாரோ அவற்றின்படி மேய்த்துப்பேணுவதாகும். தேவன் அன்பும், ஒளியும், பரிசுத்தமும், நீதியுமானவர். “தேவனின்படி” என்பது குறைந்தபட்சம் தேவனுடைய இந்த நான்கு குணாம்சங்களின்படி ஆகும். நாம் இந்த நான்கு குணாம்சங்களின்படி இளைஞர்களையும், பலவீனர்களையும், பின்மாற்றமடைந்தவர்களையும் மேய்த்துப்பேண வேண்டும். அப்போது நாம் நல்ல மேய்ப்பர்களாக இருப்போம்.
ஆவிக்குரிய பாரம்
தேவனின்படி மேய்த்துப்பேணுவதற்கு, நாம் மேய்த்துப்பேணும் வாழ்க்கை வாழ வேண்டும். நாம் நம் பிதாவாகிய தேவனின் அன்பான, மென்மையான இருதயத்தின்படியும், நம் இரட்சகராகிய கிறிஸ்துவின் தேடுகிற, மேய்த்துப்பேணுகிற ஆவியின்படியும் தேவனுடைய மந்தையை மேய்த்துப்பேண வேண்டும். நாம் அனைவரும் கிறிஸ்துவின் ஜீவாதார மேய்த்துப்பேணுதலின்கீழ் இருக்க வேண்டும், ஒருவரையொருவர் மேய்த்துப்பேண அவருடன் ஒன்றாக இருக்க வேண்டும். பரஸ்பரமாக மேய்த்துப்பேணுகிறவர்களாய், மேய்த்துப்பேணப்படுகிறவர்களுமாய், நாம் செம்மறிகளாகவும் மேய்ப்பர்களாகவும் இருக்கிறோம். இந்தப் பரஸ்பர மேய்த்துப்பேணுதல் மூலம், கிறிஸ்துவின் சரீரமாகிய சபை அன்பில் தன்னைத்தானே கட்டியெழுப்புகிறது.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
மேய்த்துப்பேணுவதென்றால் மந்தைக்கு சகலத்தையும்-உள்ளடக்கிய மென்மையான கரிசனை வழங்குவதாகும்.
இன்று கர்த்தரின் மீட்டுத்திருப்புதலில், மேய்த்துப்பேணுதலின் அவசரத் தேவை இருக்கிறது. விசுவாசிகளை மேய்த்துப்பேணுவது கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக முதிர்ச்சிக்கென்று தெய்வீக ஜீவனில் அவர்களது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம்.
மேய்த்துப்பேணுதல் போதித்தலைச் சார்ந்திருக்கிறது; நம்மால் போதிக்க முடியாவிட்டால், நம்மால் மேய்த்துப்பேண முடியாது.
நம் மேய்த்துப்பேணுதல் எப்போதும் போதித்தலோடுகூட இருக்க வேண்டும், நம் போதித்தல் எப்போதும் மேய்த்துப்பேணுதலோடுகூட இருக்க வேண்டும்.
ஜீவனின் அனுபவம்
நாம் அனைவரும் கிறிஸ்துவை நம் ஆத்துமாக்களின் மேய்ப்பராக அறியவும் அனுபவிக்கவும் வேண்டும். நம் ஆத்துமாக்களின் மேய்ப்பராக, கிறிஸ்து நம் உள்ளான ஆள்தத்துவத்தின் சூழ்நிலைக்காக அக்கறைப்பட்டு, நம் உள்ளான நிலைமையைக் கண்காணிக்கிறார்.
நம் ஆத்துமா மிகவும் சிக்கலானது என்பதால், நம் ஆத்துமாவில் நம்மை மேய்த்துப்பேண அதாவது நம் மனம், உணர்ச்சி, சித்தத்தையும், நம் எல்லாப் பிரச்சினைகளையும், தேவைகளையும், காயங்களையும் கவனித்துக்கொள்ள நம் ஆவியில் ஜீவன் தரும் ஆவியானவராகிய கிறிஸ்து நமக்குத் தேவை. நம் ஆவி-மேய்ப்பராக, கிறிஸ்து நம் ஆவியினுள் இருந்து நம்மைக் கவனித்துக்கொள்கிறார். கிறிஸ்து நம் ஆவியிலிருந்து நம் ஆத்துமாவின் எல்லாப் பகுதிகளையும் சென்றடைந்து, ஒரு மென்மையான, ஜீவாதாரமான, சகலத்தையும்-உள்ளடக்கிய விதத்தில் நம்மைக் கவனித்துக்கொள்கிறார்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
தேவனுடைய மந்தையை மேய்த்துப்பேணுகிறவர்கள் தேவனின்படி மேய்த்துப்பேண வேண்டும். தேவனின்படி மேய்த்துப்பேணுவதென்றால், நம் முன்தெரிவு, ஆவல், குறிக்கோள், பிறவிக்குணம் ஆகியவற்றின்படி அல்ல, மாறாக தேவனின் சுபாவம், வாஞ்சை, வழி, மகிமை ஆகியவற்றின்படி மேய்த்துப்பேணுவதாகும்.
தேவனின்படி மேய்த்துப்பேணுவதற்கு, நாம் மேய்த்துப்பேணும் வாழ்க்கை வாழ வேண்டும். நாம் நம் பிதாவாகிய தேவனின் அன்பான, மென்மையான இருதயத்தின்படியும், நம் இரட்சகராகிய கிறிஸ்துவின் தேடுகிற, மேய்த்துப்பேணுகிற ஆவியின்படியும் தேவனுடைய மந்தையை மேய்த்துப்பேண வேண்டும்.
பரஸ்பரமாக மேய்த்துப்பேணுகிறவர்களாய், மேய்த்துப்பேணப்படுகிறவர்களுமாய், நாம் செம்மறிகளாகவும் மேய்ப்பர்களாகவும் இருக்கிறோம். நாம் அனைவரும் கிறிஸ்துவின் ஜீவாதார மேய்த்துப்பேணுதலின்கீழ் இருக்க வேண்டும், ஒருவரையொருவர் மேய்த்துப்பேண அவருடன் ஒன்றாக இருக்க வேண்டும்
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்-ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 மேய்த்துப்பேணுவது என்றால் சகலத்தையும்-உள்ளடக்கிய கனிவான கரிசனையைக் கொண்டு மந்தையைக் கவனித்துக்கொள்வதாகும். (மத். 9:36; 1 பேது. 5:4)
(முதலில் கர்த்தருடைய மேய்த்துப்பேணுதல் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தில் இருந்தது. இரண்டாவதாக கர்த்தருடைய மேய்த்துபேணுதல் அவருடைய பரலோக ஊழியத்தில் உள்ளது என்பதை எடுத்துரைங்கள்)
த2 கிறிஸ்து தம் மந்தையை மேய்த்துப்பேணுவதில், அவர்களது புறம்பான விஷயங்கள் மற்றும் அவர்களது உள்ளான ஆள்தத்துவம் ஆகியவற்றின்மீதுள்ள அவரது கரிசனை அடங்கும் (1 பேது. 2:25)
(நம் உள்ளான ஆள்த்தத்துவத்தின் நலனுக்காகக் கரிசனைப்படுவதாலும், நம் ஆத்துமாவின் அதாவது நம் நிஜமான நபரின் நிலைமையைக் கண்காணிப்பதற்கான அவரது கண்காணித்தலைப் பயிற்சிசெய்வதாலும் கிறிஸ்து நம்மை மேய்த்துப்பேணுகிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 மேய்ப்பனாக இருக்கும் எவனும் ஒரு போதகனாக இருந்தாக வேண்டும் (எபே. 4:11)
(எபேசியர் 4இன்படி, மேய்ப்பர்களும் போதகர்களும் ஒரே வகையினர் ஆவர் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 மற்றவர்களுக்காக அக்கறைப்பட நீங்கள் பெற்றுக்கொண்ட கிருபையையும் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கொடையையும் பயன்படுத்தும்படி உங்களையே பயிற்சிசெய்யுங்கள் (கொலோ. 1:28)
(நாம் செய்யும் செயல்களால் நாம் மற்றவர்களுக்கு போதிக்க முடியும் என்பதை எடுத்துரைங்கள்)
நாள் 3
த1 அவர் நம் ஆத்துமாவின் மேய்ப்பராக இருக்கிறார் (1 பேது. 2:25)
(சரீரம் நமக்குப் பல பிரச்சினைகளைத் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆயினும்கூட நம் நிஜமான பிரச்சினை நம் ஆத்துமாவில் உள்ளது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நம் ஆத்துமாவுக்கு கர்த்தருடைய மேய்த்துபேணுதல் தேவைப்படுகிறது (1 பேது. 2:25)
(கர்த்தர் மெய்யாகவே நம் ஆத்துமாவின் மேய்ப்பர். அவர் நம் மனதை வழிநடத்துகிறார், நம் உணர்ச்சியைத் தேற்றுகிறார். நம் சித்தத்தை வழிநடத்தி, வழிகாட்டுகிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 தேவையான அனைத்தையும் கொண்டு மந்தையை நிரப்பீடு செய்யும்படி மேய்ப்பன் மேற்பார்வையைப் பயிற்சி செய்கிறான் (1 பேது. 5:2)
(மேய்ப்பனுடைய மேற்பார்வை மந்தையை பாதுகாப்பது மந்தையை வழிநடத்துவது மந்தையை போஷிப்பது ஆகியவற்றோடு தொடர்புடையது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனின்படி என்பதற்கு தேவனை வாழ்ந்தாக வேண்டும் என்று அர்த்தம். நாம் தேவனை கொண்டிருக்க வேண்டும் (1 பேது. 2:25; 5:2)
(தேவனின்படி மேய்த்துபேணுவது என்றால் தேவன் தம் குணம்சங்களில் என்னவாக இருக்கிறாரோ அவற்றின்படி மேய்த்துபேணுவதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் உள்ள கிறிஸ்துவின் கட்டமைப்புக்கு ஒரு மேய்த்துபேணும் அம்சம் இருக்கிறது (யோவா. 1:10-11)
(நம்மால் யாரையும் மேய்த்துபேண முடியாது, ஆனால் நமக்குள் கட்டியமைக்கப்பட்ட கிறிஸ்து மேய்ப்பராக இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்.)
த2 ஆளுகை செய்யும் அம்சம் முதலில் மேய்த்துப்பேணும் அம்சமாக இருக்கிறது (ஆதி. 37:2; 41:40, 57)
(ஆளுகை செய்யும் அதிகாரம் மேய்த்துப்பேணும் ஜீவனில் இருந்து வருகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 சபையானது மேய்த்துப்பேணுதல்மூலம் வளர்கிறது (1 கொரி. 12:24-26)
(சபையில் மற்றவர்களை கவனித்துக்கொள்வதற்கான பாரத்தை ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நம் பராமரிப்பின்கீழ் உள்ளவர்கள்மீது நம்பிக்கை வைத்து, அவர்களைச் சர்ந்துகொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். (1 கொரி. 12:24-26)
(மற்றவர்களை மேய்த்துப்பேண நாம் எவ்வளவு அதிகமான பாரத்தை எடுத்துக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமான காரியங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை எடுத்துரையுங்கள்)