கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்
செய்தி 5
தேவ-மனித வாழ்க்கை
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெபவாசிப்பு செய்தல்
எபே. 4:24 நீங்கள் உண்மையிலே அவருக்குச் செவிகொடுத்தும், இயேசுவில் நிஜம் இருக்கிறபடியே அவரில் கற்பிக்கப்பட்டும் இருக்கிறீர்கள் என்றால், அவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லையே.
1 யோவா. 4:16-17 தேவன் நம்மில் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவனே அன்பு, அன்பில் வசிக்கிறவன் தேவனில் வசிக்கிறான், தேவனும் அவனில் வசிக்கிறார். நியாயத்தீர்ப்பு நாளில் நமக்குத் தைரியமுண்டாயிருக்கும்படி, இதிலே நம்மிடம் அன்பு பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது, ஏனெனில் அவர் இருக்கிறபடியே நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோமே
பசிதூண்டும் வார்த்தை
நிஜம் கிறிஸ்துவில் உள்ளது என்பதன் அர்த்தம் என்ன? இயேசுவில் உள்ள நிஜமாக கிறிஸ்துவை கற்றுக்கொள்வது என்பது என்ன?
நான்கு சுவிசேஷங்கள், தேவன் வாஞ்சிக்கிற வாழ்க்கையின் முன்மாதிரியை, அதாவது தேவனைத் திருப்திப்படுத்தவும், அவரது குறிக்கோளை நிறைவேற்றவும்கூடிய வாழ்க்கையின் அச்சைக் காட்டுகின்றன; இயேசு தேவனில், தேவனுடன், தேவனுக்காக எல்லாவற்றையும் செய்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். தேவன் அவரது வாழ்க்கையில் இருந்தார். அவர் தேவனோடு ஒன்றாயிருந்தார். இதுவே இயேசுவில் நிஜம் இருக்கிறபடியே என்பதன் அர்த்தமாகும். இயேசுவில் நிஜம் இருக்கிறபடியே கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வதென்றால் கிறிஸ்துவின் முன்மாதிரிக்குள் அச்சுவார்க்கப்படுவதாகும். கிறிஸ்துவின் சாயலுக்குள் ஒத்தசாயலாக்கப்படுவதாகும்.
ஒரு மனிதனாக இருக்கும்படி கர்த்தராகிய இயேசுவை அனுப்புவதில் தேவனின் குறிக்கோள் அவர் தெய்வீக ஜீவனால் ஒரு தேவ-மனித வாழ்க்கை வாழ்வதற்காக இருந்தது; நாம் அவரைப் புசிக்கும்போது, நாம் துல்லியமாக அவர் இருக்கும்வண்ணமாகவே இருக்கும் ஒரு பிரபஞ்சமளாவிய மாபெரும் மனிதனாக-தெய்வீக ஜீவனால் தேவ-மனித வாழ்க்கை வாழும் ஒரு மனிதனாக ஆவதற்கு அவர் நிமித்தம் ஜீவிக்கிறோம்.
ஆவிக்குரிய பாரம்
தேவனுடைய இருதயத்தின் வாஞ்சையானது, “இயேசுவிலுள்ள நிஜம்” (எபே. 4:21), அதாவது, நான்கு சுவிசேஷங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி இயேசுவின் தேவ-மனித வாழ்க்கையின் நிஜமான நிலை, தேவனுடைய பொருளாட்சியில் உன்னத சிகரமான கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜமாக ஆவதற்கு நிஜத்தின் ஆவியானவரால் கிறிஸ்துவின் சரீரத்தின் பல அவயவங்களில் நகலாக்கப்படுவதாகும்
நாம் தேவனேயாகிய அன்பில் நிலைத்திருக்கும்போது, “நியாயத்தீர்ப்பு நாளில் நமக்குத் தைரியமுண்டாயிருக்கும்படிக்கு, இதிலே நம்மிடம் அன்பு பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது, ஏனெனில் அவர் இருக்கிறபடியே நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோமே” (1 யோவா. 4:17)- தகன பலியின் நிஜமாகிய கிறிஸ்து இந்த உலகத் தேவனையே அன்பாகக்கொண்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்; இந்த உலகத்தில் நாம் அன்பின் அதே வாழ்க்கை வாழுமாறும், அவர் இருக்கும்வண்ணமாகவே நாமும் இருக்குமாறும் அவர் இப்போது நம் ஜீவனாக இருக்கிறார்
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
நாம் தேவனேயாகிய அன்பில் நிலைத்திருக்கும்போது, “நியாயத்தீர்ப்பு நாளில் நமக்குத் தைரியமுண்டாயிருக்கும்படிக்கு, இதிலே நம்மிடம் அன்பு பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது, ஏனெனில் அவர் இருக்கிறபடியே நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோமே” (1 யோவா. 4:17)- தகன பலியின் நிஜமாகிய கிறிஸ்து இந்த உலகத் தேவனையே அன்பாகக்கொண்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்; இந்த உலகத்தில் நாம் அன்பின் அதே வாழ்க்கை வாழுமாறும், அவர் இருக்கும்வண்ணமாகவே நாமும் இருக்குமாறும் அவர் இப்போது நம் ஜீவனாக இருக்கிறார்
தேவனுக்குப் பிரியமான ஒரே வாழ்க்கை, பூமியில் கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்ப வாழும் ஒரு வாழ்க்கையாகும்; இது, கிறிஸ்துவைத் தகன பலியாக அவரது அனுபவங்களில் அவரை அனுபவமாக்கும் வாழ்க்கையாகும்
தேவனின் புதிய ஏற்பாட்டு ஊழியத்தை நிறைவேற்றுவதில், தகன பலியின் நிஜமாகிய கர்த்தராகிய இயேசு (யோவா. 5:19) எதையும் தம்மிலிருந்து செய்யவிசெய்யவில்லைல்லை, அவர் தம் சொந்த வேலையைச் (4:34; 17:4), அவர் தம் சொந்த வார்த்தையைப் பேசவில்லை (14:10, 24), அவர் தம் சொந்த சித்தத்தால் அல்லாமல் எல்லாவற்றையும் செய்தார் (5:30), அவர் தம் சொந்த மகிமையைத் தேடவில்லை (7:18); அவர் தேவனைக் கொண்டு மட்டுமே திருப்தியடைந்ததால் அவர் ஒருபோதும் ஊக்கமிழக்கவில்லை.
ஜீவனின் அனுபவம்
நாம் கலந்திணைந்த ஆவியில் வாழும்போது, நாம் நிஜத்தின் ஆவியானவரால் இயேசுவில் நிஜம் இருக்கிறபடியே கிறிஸ்துவைக் கற்றுக்கொள்கிறோம்; அவரது சரிதை நம் வரலாறாக ஆகும்படி நம் மூலமாதிரியாக நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்; புதிய மனிதனாகக் கிறிஸ்துவின் சரீரத்தின் வாழ்க்கை, சுவிசேஷங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இயேசுவின் வாழ்க்கையைப் போன்று அப்படியே இருக்க வேண்டும்.
எவ்வளவாய் நாம் கிறிஸ்துவில் சாம்பலாகக் குறைக்கப்படுகிறோமோ, அவ்வளவாய் நாம் கிழக்கில் வைக்கப்படுவோம். கிழக்கில், சூரியன் உதிக்கும் என்ற, அதாவது, நாம் உயிர்த்தெழுதலின் சூர்யோதயத்தை அனுபவிப்போம் என்ற நிச்சயம் நமக்கு இருக்கும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நாம் கர்த்தரை நேசித்து, அவரைத் தொடர்புகொண்டு, அவரிடம் ஜெபிக்கையில், சுவிசேஷங்களில் விவரிக்கப்பட்டுள்ள அச்சு, வடிவம், மாதிரியின்படி நாம் தன்னிச்சையாகவே அவரை வாழ்கிறோம்; இவ்விதத்தில் நாம் இந்த அச்சின் உருவத்திற்கு வடிவமைக்கப்பட்டு, ஒத்தசாயலாக்கப்படுகிறோம்—இதுவே கிறிஸ்துவைக் கற்றுக்கொள்வது என்பதன் அர்த்தம்.
நாம் மற்றவர்களை எரிக்கும்படியும், தேவனின் வெளியாக்கத்திற்காகப் புதிய எருசலேமாக ஆகும்படி சாம்பலாக்கப்படும்படியும் நாம் ஒரு தொடர்ச்சியான தகனபலியாக இருக்குமாறு கர்த்தர் நம்மை சுட்டெரிக்க நாம் அவரை அனுமதிக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 கிறிஸ்து நமக்கு ஜீவனாக மட்டுமல்லாமல், ஓர் எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார் (யோவா. 13:15, 1 பேது. 2:21).
(நாம் நம் இயற்கை ஜீவனால் அல்லாமல், நம் ஜீவனாகிய அவரால் அவரது எடுத்துக்காட்டின்படி அவரிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் (மத். 11:29) என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்து என்ற அச்சுக்கு ஏற்றபடி தேவன் நம்மை வடிவமைக்க விரும்புகிறார் (ரோம. 8:29; கலா . 3:27)
(தேவனுடைய பார்வையில், நாம் ஞானஸ்- நானம்பண்ணப்பட்டபோது, இந்த அச்சுக்குள் வைக்கப்பட்டோம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 இயேசுவிலுள்ள நிஜம் என்பது இயேசுவினுடைய வாழ்க்கையின் நிஜமான நிலைமை ஆகும். (மத். 11:29; எபே. 4:20-21)
(இயேசுவிலுள்ள நிஜம் என்றால் என்ன?)
த2 சத்தியம் தேவனுடைய வெளியாக்கமாக இருக்கிறது (1 யோவான் 1:5)
(ஒளியின் இந்தப் பிரகாசித்தலே சத்தியம், சத்தியமே தேவனின் வெளியாக்கமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 “தகனபலி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் எழுத்துப்பிரகாரமான அர்த்தம் “மேலேறிச் செல்கின்ற ஒன்று” என்பதாகும். இது தேவனிடமாய் மேலேறிச் செல்லும் ஏதோவொன்றைச் சுட்டிக்காட்டுகிறது
(லேவி. 1:9; 2 கொரி. 5:15)
(தகன பலியின் முக்கியத்துவம் என்ன?)
த2 நாம் அவர் மீது கைகளை வைப்பதின்மூலம், நாம் நம்மோடு அவரை ஒன்றாக ஆக்குகிறோம் மற்றும் நம்மை அவரோடு ஒன்றாக ஆக்குகிறோம் (எபி. 9:28)
(நாம் அவர் மீது கைகளை வைப்பதன் மூலம் அப்போது அவர் தம் வாழ்க்கையை நம்மில் மீண்டும் வாழ்வார் என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 4
த1 தகன பலி சாம்பலாக்கப்படுவதென்றால் தேவன் திருப்தி அடைகிறார் என்று அர்த்தம்
(லேவி. 6:11; 1:16)
(தகன பலிகளை செலுத்தும் நமக்கு ஏன் சாம்பல் உண்மையில் இனிமையானது விலைமதிப்பற்றது?)
த2 இந்த சாம்பல் புதிய எருசலேமாக மாறும்.
(லேவி . 6:11; 1:16)
(எவ்வாறு இந்தச் சாம்பல் புதிய எருசலேம் மாற முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 கர்த்தர் தம் வாழ்நாள் முழுவதும் தேவனில் திருப்தியடைந்தார் (யோவான் 8:29)
(ஏன் மக்கள், நிகழ்வுகள் மற்றும் இந்த உலகத்தில் உள்ள காரியங்கள் எப்படி மாறினாலும் கர்த்தராகிய இயேசு ஏமாற்றமடையவில்லை?)
த2 கர்த்தர் ஒரு ஜெப மனிதராக வாழ்ந்தார் (லூக்கா 6:12; யோவான் 1:30)
(அவர் ஒரு ஜெப மனிதராக, தேவனோடு ஒன்றாய் இருக்கும் ஒரு மனிதராக இருந்தார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 தேவனாகவே இருக்கும் அன்பில் நாம் வசிப்பதில், தேவனுடைய அன்பு நம்மை பூரணப்படுத்தப்படுகிறது (1 யோவான் 4:16-17)
(அன்பில் வசிப்பதென்றால், தேவன் நம்மில் வெளிக் காட்டப்படுமாறு தேவனாகவே இருக்கிற அன்பைக்கொண்டு பழக்கமானவிதத்தில் மற்றவர்களிடம் அன்புகூருகிற ஒரு வாழ்க்கை வாழ்வதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்துவின் பிரமாணமாகிய அன்பின் பிரமாணம் ஜீவனின் பிரமாணமாக இருக்கிறது
(கலா. 6:2)
(அன்பின் பிரமாணமாகிய கிறிஸ்துவின் பிரமாணம் தெய்வீக ஜீவனால் உறுதிப்படுத்தப்பட்டாக வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)