கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்
செய்தி 4
இழைந்திணைதலும் கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜமும்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்.
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்.
வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல்.
1 கொரி 1:2 கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறவர்களாகிய அழைக்கப்பட்ட பரிசுத்தவான்களான கொரிந்துவிலுள்ள தேவனுடைய சபைக்கு…
1 கொரி. 10:17 ஒரே அப்பம் இருக்கிறபடியால், அநேகராகிய நாம் ஒரே சரீரமாயிருக்கிறோம்; ஏனெனில் நாம் எல்லாரும் ஒரே அப்பத்திலிருந்து பங்கெடுக்கிறோமே.
யோவா. 12:24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், கோதுமை மணி நிலத்திற்குள் விழுந்து மரிக்காவிட்டால், அது தனித்திருக்கிறது; ஆனால் அது மரித்தால், மிகுந்த கனியைக் கொடுக்கிறது.
பசிதூண்டும் வார்த்தை
இழைந்திணைதல் மற்றும் இழைந்திணைதலின் குறிக்கோள் என்ன என்பதை விவரியுங்கள்?
“தேவன் சரீரத்தை ஒன்றாக இழைத்திணைத்திருக்கிறார்”. இழைத்திணைக்கப்படுதல் என்ற வார்த்தைக்கு “சரிசெய்யப்படுதல்;” “இசைவிக்கப்படுதல்” “இணக்குவிக்கப்படுதல்;” “கலந்திணைக்கப்படுதல்” என்று அர்த்தம். இது வேறுபாடுகளை இழப்பதை மறைவாகக் குறிக்கிறது. இழைந்திணைக்கப்படுதல் என்றால் நாம் மற்றவர்களால் தொடப்பட்டிருக்கிறோம் என்றும், நாம், சிலுவையின் வழியாகச் சென்று, ஆவியானவரால் காரியங்களைச் செய்து எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நலனுக்காகக் கிறிஸ்துவைப் பகிர்ந்தளிக்கும்படி செய்வதன்மூலம் மற்றவர்களைத் தொடுகிறோம் என்றும் அர்த்தம்.
இழைந்திணைதலின் குறிக்கோள், நம் அனைவரையும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜத்திற்குள் கொணர்வதே ஆகும். கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜமே நம் இழைந்திணைதலின் உட்கருத்து. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் மூவொரு தேவனோடு, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, ஒத்தசாயலாக்கப்பட்டு. மகிமைப்படுத்தப்பட்ட முப்பகுதி தேவ-மனிதர்களின் நித்திய சேர்க்கையிலான கலந்திணையும் வாழ்க்கையே கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜம்.
ஆவிக்குரிய பாரம்
தேவனுடைய பொருளாட்சியை நிஜமாகவும், நடைமுறையாகவும், உண்மையாகவும் செயல்படுத்தக்கூடிய கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் அதிஉன்னத சிகரம், தேவன் ஒரு பௌதிக விதத்தில் அநேக உள்ளூர் சபைகளை உற்பத்திசெய்வது அல்ல, மாறாக, தம் உயிரியாக இருப்பதற்கான ஒரு ஜீவாதார சரீரத்தை உற்பத்திசெய்வதே ஆகும். இழைந்திணைதலின் குறிக்கோள், நம் அனைவரையும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜத்திற்குள் கொணர்வதே ஆகும். மெய்யான மனிதர்களாக இருந்தும், தங்கள் ஜீவனால் வாழாமல், தங்கள் நற்பண்புகள் மூலமாக வெளிக்காட்டப்பட்டிருக்கும் குணாம்சங்களுக்குரியவரான பதனிடப்பட்ட மூவொரு தேவனுடைய ஜீவனால் வாழ்கின்ற சீர்பொருத்தப்பட்ட தேவ மனிதர்களால் வாழப்படும் ஒரு கூட்டு வாழ்க்கையே கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜம்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
“தேவன் சரீரத்தை ஒன்றாக இழைத்திணைத்திருக்கிறார்”. இழைத்திணைக்கப்படுதல் என்ற வார்த்தைக்கு “சரிசெய்யப்படுதல்,” “இசைவிக்கப்படுதல்,” “இணக்குவிக்கப்படுதல்,” “கலந்திணைக்கப்படுதல்” என்று அர்த்தம். இது வேறுபாடுகளை இழப்பதை மறைவாகக் குறிக்கிறது.
யோவான் 12:24 மற்றும் 1 கொரிந்தியர் 10:17, இழைந்திணைதலுக்கான அவசியத்தைச் சித்தரித்து, அதின் உட்கருத்தை வெளிப்படுத்துகின்றது.
இழைந்திணைதலின் குறிக்கோள், நம் அனைவரையும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜத்திற்குள் கொணர்வதே ஆகும்.
கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜமே தேவனுடைய பொருளாட்சியில் உள்ள அதிஉன்னத சிகரம்.
ஜீவனின் அனுபவம்
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் மூவொரு தேவனோடு, மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, ஒத்தசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட முப்பகுதி தேவமனிதர்களின் நித்திய சேர்க்கையிலான கலந்திணையும் வாழ்க்கையே கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜம். இந்தக் கலந்திணைதல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையில் கிறிஸ்துவின் மரணத்திற்கு ஒப்பாக்கப்படும் ஒரு கூட்டு வாழ்க்கையாகும். இத்தகையதொரு கலந்திணையும் வாழ்க்கை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ளது, ஆவியானவரே இந்த உயிர்த்தெழுதலின் நிஜம்; இந்த உயிர்த்தெழுதல் முழுநிறைவடைந்த மூவொரு தேவனை விசுவாசிகளுக்குள் உட்பகிர்ந்து, மரணத்தை ஜெயங்கொள்ளும் ஜீவனை விசுவாசிகளுக்குள் விடுவிக்கிறது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
இழைந்திணைதல் என்றால், மற்றவர்களுடன் ஐக்கியப்படும்படி நாம் எப்போதும் நிறுத்த வேண்டும் என்று அர்த்தம். நம்முடன் ஒருங்கிணைந்து செயல்படுகிற மற்ற பரிசுத்தவான்களுடன் ஐக்கியப்படாமல் நாம் எதையும் செய்யக்கூடாது. ஏனென்றால் ஐக்கியம் நம்மை சரிசெய்கிறது, நம்மை இசைவிக்கிறது, நம்மை இணக்குவிக்கிறது, நம்மைக் கலந்திணைக்கிறது.
நாம் முழு மணிகளாக நிலைத்திருக்கக் கூடாது; ஓர் அப்பத்தை உருவாக்குவதற்காக, நாம் மற்றவர்களுடன் இழைத்திணைக்கப்படக் கூடுமாறு, நாம் உடைக்கப்பட்டு, மெல்லிய மாவாக அரைக்கப்பட வேண்டும்; இந்த அப்பமே கிறிஸ்துவின் சரீரம்.
சுயத்தை நிராகரிக்கவும், இன்னொரு ஜீவனால்-கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவனால்-வாழவும் தொடர்ச்சியாகப் பயிற்சி செய்வதன்மூலம் முதிர்ச்சியடைந்துள்ளவர்களே சீர்பொருத்தப்பட்ட தேவ-மனிதர்கள்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 இழைத்திணைக்கப்படு என்பதற்கான கிரேக்க வார்த்தை வேறுபாடுகளை இழப்பதை மறைவாகக் குறிக்கிறது. (மத். 16:24; கலா. 3:5; 1 கொரி. 12:24)
(சரீர வாழ்க்கையில் இசைவிக்கப்பட்டு, இழைத்திணைக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டு, கலந்திணைக்கப்பட்டு, இணக்குவிக்கப்படுவதற்கு, நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் நிமித்தமாக சிலுவையினூடாகச் செல்லவும், ஆவியானவரால் இருக்கவும், கிறிஸ்துவை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 ஐக்கியம் நம்மை இணக்குவிக்கிறது, ஐக்கியம் நம்மைச் சரிசெய்கிறது, ஐக்கியம் நம்மை இசைவிக்கிறது, ஐக்கியம் நம்மைக் கலந்திணைக்கிறது (1 யோவான் 1:7)
(நாம் ஒன்றைச் செய்யப் போகும்போது, நம்மை நிறுத்தும்படி ஐக்கியம் கோருகிறது என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 இழைந்திணைதலின் ஒரு மாதிரி (லேவி. 2:4)
(லேவியராகமம் 2:4இல் உள்ள போஜனபலி, எண்ணெயுடன் கலந்திணைக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்யப்பட்ட அதிரசங்களை உள்ளடக்கியது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 போஜன பலி, எண்ணெயுடன் கலந்திணைக்கப்பட்ட மெல்லிய மாவின் வடிவிலோ, அல்லது ஓர் அதிரசத்தின் வடிவிலோ இருக்கலாம். (லேவி. 2:1-2, 4)
(நாம் சபை வாழ்க்கையை ஒரு கூட்டுப் போஜனபலியாக அனுபவித்துமகிழலாம் என்று லேவியராகமம் 2 வெளிப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 இழைந்திணைதலின் குறிக்கோள் (1 கொரி. 1:2; எபே. 1:23)
(இழைந்திணைதலின் குறிக்கோள், நம் அனைவரையும் கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜத்திற்குள் கொண்டுவருவதே என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இன்று கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் சபை வேலையின் வழக்கமான செயல்முறைகள் நான்கு படிகளை உள்ளடக்குகின்றன: பெற்றெடுத்தல், போஷித்தல், போதித்தல் (சீர்பொருத்துதல்), மற்றும் கட்டியெழுப்புதல். (எபே. 4:12, 16)
(பெற்றெடுத்தல், போஷித்தல், சீர்பொருத்துதல் ஆகியவற்றின் படிகள் யாவும் இன்னோர் உயர்வான படிக்காக, அதாவது உள்ளூர் சபைகளில் கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக உள்ளன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 சீர்பொருத்தப்பட்ட தேவ-மனிதர்களால் வாழப்படும் ஒரு கூட்டு வாழ்க்கையே கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜம் (2 கொரி. 13:9, 11; எபே. 4:12;)
(அவர்கள் தங்கள் ஜீவனால் அல்ல மாறாக பதனிடப்பட்ட தேவனின் ஜீவனால் வாழ்கிறார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இயேசு ஓர் மெய்யான மனிதனாக இருந்தார், ஆனால் அவர் மனிதனின் ஜீவனால் வாழாமல் தேவனின் ஜீவனால் வாழ்ந்தார். (மத். 16:24; பிலி. 3:10)
(இயற்கையான ஜீவனின் அவனுடைய மரித்தல் சிலுவையையும், தெய்வீக ஜீவனில் அவனுடைய வாழ்தல் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 தேவ-மனித வாழ்க்கை, சிலுவையின் மூலம் கிறிஸ்துவின் மரணத்திற்கு ஒத்தசாயலாக்கப்படுகிற ஒரு வாழ்க்கையாகும்
(பிலி. 3:10; யோவா. 11:25)
( இத்தகைய ஒரு வாழ்க்கை மட்டுமே கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜத்தை வாழ்ந்து காட்ட முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்துவினுடைய சரீரத்தின் நிஜம் (எபே. 1:23; எபே. 4:16)
(கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில், மூவொரு தேவனோடு, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட முப்பகுதி தேவ மனிதர்களின் நித்திய சேர்க்கையில் உள்ள கலந்திணைதல் வாழ்க்கை ஆகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கிறிஸ்துவின் சரீரத்தின் நிஜம் என்பது தேவ மனிதர்களால் வாழப்படும் கூட்டு வாழ்க்கை ஆகும் (வெளி. 21:10-11)
(சீர்பொருத்தப்பட்டு முதிர்ச்சியடைந்த தேவ-மனிதர்கள் சீயோனாக, ஜெயங்கொள்பவர்களாக, சபைகளுக்குள் இருக்கும் உயிர்த்துடிப்புள்ள குழுக்களாக உள்ளனர் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 மனிதன் தேவனாக ஆகுமாறு தேவன் தம்மையே மனிதனாக ஆக்குவதே அவரது நோக்கம். (வெளி. 21:10-11)
(பரிசுத்த நகரமாகிய எருசலேம், எல்லா தரிசனங்கள் மற்றும் வெளிப்பாடுகளின் முழுமொத்தமாக இருக்கிறது. அது, முப்பகுதி மனிதனுடன் மூவொரு தேவனின் ஒரு கட்டமைப்பு என்பதை எடுத்துரையுங்கள்)