கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்
செய்தி 3
தேவன் கிறிஸ்துவில் தம்மையே நம் ஆள்தத்துவத்திற்குள் கட்டுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல்
2 சாமு.- 7:12-14. உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைப்பண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப் பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.
எபே. 3:16-17 அவர் தம் ஆவியானவர்மூலம் வல்லமையினால் நீங்கள் உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்பட அருளும்படியும், விசுவாசத்தின்மூலம் கிறிஸ்து உங்கள் இருதயங்களில் தம் வீட்டை அமைக்கும்படியும்,
பசிதூண்டும் வார்த்தை
2 சாமுயேல் 7:12-14, ஒரு தீர்க்கதரிசனம் திரைநீக்குதலால் மாதிரியியல்மூலம் எதை நமக்கு காண்பிக்கிறது?
நம் முழு ஆள்தத்துவமும் கிறிஸ்துவைக்கொண்டு மறுபடிகட்டியமைக்கப்படுமாறு, நம் உள்ளான கட்டமைப்புக்குள் தேவன் கிறிஸ்துவைக் கட்டியெழுப்புவது நமக்குத் தேவை என்பதை நமக்குக் காட்டுகிறது. ஆவிக்குரிய வளர்ச்சிதைரீதியான வழிமுறையின்மூலம் கிறிஸ்துவின் சரீரமாக சபையின் ஜீவாதார கட்டியெழுப்புதல், உண்மையில் 2 சாமுயேல் 7:12-14இல் மாதிரியியல்ரீதியாக, யெகோவா தாவீதுக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததாகும்; இந்த வழிமுறையின்மூலமாக மட்டுமே மனிதர்கள் தேவனுடைய குமாரர்களாக மறுசாயலாக்கப்பட முடியும், மனுஷீகமான ஒன்று, மனித வித்து தெய்வீகமான ஒன்றாக—தேவனுடைய குமாரர்களாக ஆக முடியும்.
ஆவிக்குரிய பாரம்
எபேசியர் 3இலுள்ள அப்போஸ்தலனின் ஜெபம், தேவனுடைய நித்தியப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக, நாம் தேவனுடைய சகல நிறைவுக்கென்று நிரப்பப்படக்கூடுமாறு, கிறிஸ்து நம் முழு ஆள்தத்துவத்தையும் ஆட்கொண்டு, நம் இருதயங்களில் தம்மையே கட்டும்படி, பிதா தம் மகிமையின் ஐசுவரியங்களின்படியே, தம் ஆவியானவர் மூலம் வல்லமையினால் உள்ளான மனிதனுக்குள்ளாக நம்மைப் பலப்படுத்துவது நமக்குத் தேவை என்று வெளிப்படுத்துகிறது.
தேவன் தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் தம்மையே அடித்துருவாக்க விரும்புகிறார் என்பதை நாம் உணர்ந்தறிந்தால், மூவொரு தேவன் மற்றவர்களுடைய ஆள்தத்துவத்திற்குள் தம்மையே கட்டக்கூடுமாறு, கட்டுகிற, கட்டப்பட்ட தேவனை அவர்களுக்குள் ஊழியஞ்செய்வதே நம் வேலையின் இலக்காக இருக்கும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
இரண்டு சாமுயேல் 7:12-14, நம் முழு ஆள்தத்துவமும் கிறிஸ்துவைக்கொண்டு மறுபடிகட்டியமைக்கப்படுமாறு, நம் உள்ளான கட்டமைப்புக்குள் தேவன் கிறிஸ்துவைக் கட்டியெழுப்புவது நமக்குத் தேவை என்பதை மாதிரியியல்மூலம் நமக்குக் காட்டுகிற ஒரு தீர்க்கதரிசனத்தின் திரைநீக்குதலாகும்.
கிறிஸ்துவில் தேவனுடைய ஜீவனைக்கொண்டு மறுபடிஜெநிப்பிக்கப்பட்டிருக்கிற விசுவாசிகள், தேவனுடைய கட்டிடத்திற்காக விலையேறப்பெற்றக் கட்டுமானப்பொருட்கள் உற்பத்திசெய்யப்படுமாறு, கிறிஸ்துவை வளர்க்க தேவனின் பண்படுத்தப்பட்ட நிலமாக, தேவனின் புதிய சிருஷ்டிப்பிலுள்ள ஒரு பண்ணையாக இருக்கிறார்கள்.
எபேசியர் 3இலுள்ள அப்போஸ்தலனின் ஜெபம், தேவனுடைய நித்தியப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக, நாம் தேவனுடைய சகல நிறைவுக்கென்று நிரப்பப்படக்கூடுமாறு. கிறிஸ்து நம் முழு ஆள்தத்துவத்தையும் ஆட்கொண்டு, நம் இருதயங்களில் தம்மையே கட்டும்படி, பிதா தம் மகிமையின் ஐசுவரியங்களின்படியே, தம் ஆவியானவர்மூலம் வல்லமையினால் உள்ளான மனிதனுக்குள்ளாக நம்மைப் பலப்படுத்துவது நமக்குத் தேவை என்று வெளிப்படுத்துகிறது.
இறுதியில், மூவொரு தேவனும் மீட்கப்பட்ட மனுஷீகமும் ஒரே வஸ்துவாக புதிய எருசலேமாக கலந்திணைக்கப்பட்டு, இழைத்திணைக்கப்பட்டு, கட்டியெழுப்பப்படும்.
ஜீவனின் அனுபவம்
நாம் “இப்போதைய கிறிஸ்துவைப் புசித்து பருகி, சுவாசித்து அவரை அனுபவித்துமகிழும்போது, ஒரு வளர்ச்சிதைரீதியான வழிமுறை நமக்குள் நடைபெறுகிறது. அப்போது கிறிஸ்து நம் ஆள்தத்துவத்திற்குள் கட்டியமைக்கப்படுகிறார்.
நாம் நம் ஆத்துமாவில், நம் இயற்கை மனிதனில் தங்கியிருந்தால், தெய்வீக விதையின் வளர்ச்சிக்கான எந்தவொரு ஊட்டச்சத்துக்களும் இருக்காது; ஆனால், நாம் நம் உள்ளான மனிதனில் பலப்படுத்தப்பட்டால், நாம் நம் ஆவிக்குக் கவனம் செலுத்தி நம் ஆவியைப் பயிற்சிசெய்தால், ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படும். அப்போது, கிறிஸ்து நம் இருதயங்களில் தம் வீட்டை அமைப்பார்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
தேவனுடைய கட்டிடம் கட்டப்படுவதற்கு, ஜீவன்-தரும் ஆவியாக உள்ள ஜீவாதாரமான, ஆவிக் கிறிஸ்துவை, நம் ஆவிக்குரிய உணவாக, பானமாக, சுவாசமாக நாம் பெற்று, ஜீரணித்து, தன்மயமாக்க வேண்டும்.
நாம் ஒரு காரியத்தை பதனிடப்பட்டு, முழுநிறைவடைந்த மூவொரு தேவன் தம்மையே மற்றவர்களின் உள்ளான மனிதனுக்குள் கட்டுமாறு அவரை அவர்களுக்குள் ஊழியஞ்செய்வதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்விதத்தில் வேலைசெய்ய கர்த்தர் நமக்குப் போதிக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 நாம் தேவனுக்காக எதையும் கட்டவேண்டும் என்று அவர் விரும்பவில்லை என்பதை அதிகாரம் 7 சுட்டிக்காட்டுகிறது. (2 சாமு. 7:12-14)
(2 சாமுவேல் 7, மாதிரியியல் மூலம் தீர்க்கதரிசனத்தின் ஒரு திரைநீக்குதல் ஆகும். இது நமக்கு எதை காண்பிக்கின்றது)
த2 தேவன் தம்மையே நம் ஆள்தத்துவத்திற்குள் கட்டுவது முற்றிலும் ஒரு ஜீவதாரமான காரியம் (யோவான் 6:57; 7:37; 20:22)
(மறுசாயலாக்கப்படுதல் என்பது நம் ஆள்தத்துவத்திற்குள் சில புதிய மூலக்கூறை கூட்டிச்சேர்ப்பதன் மூலமும், பழைய மூலக்கூறை வெளியேற்றுவதன் மூலமும் நம்மை மாற்றுகிற ஒரு வளர்சிதைமாற்ற வழிமுறையாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 நம் இயற்கையான கட்டமைப்பைக்கொண்டு சபையை கட்டாதிருத்தல் (1 கொரி. 3:9, 12)
(நீங்கள் எவ்வளவு அதிகமாக வளர்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் தேவனின் கட்டிடத்திற்கான பொன், வெள்ளி, விலையேறப்பெற்றக் கற்களாக மாறுவீர்கள் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 வளர்வதற்கு, விதையானது நல்ல மண்ணில் விதைக்கப்பட்டாக வேண்டும் (மத். 13:23)
(தேவன் கிறிஸ்துவில் தம்மையே நமக்குள் கட்டுவது நாம் என்னவாக இருக்கிறோம் என்பதோடு மிகவும் தொடர்புடையது என்பதை மத்தேயு 13இலுள்ள விதைப்பவனின் உவமையோடு எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 கிறிஸ்து நம் இருதங்களில் தம் வீட்டை அமைக்குமாறு, நாம் கிறிஸ்துவில் வேரூன்றியிருக்கிறோம் (எபே 3:16-19).
(கிறிஸ்து நம்மில் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் தம் வீட்டை நம் இருதயத்தில் கீழ்நோக்கி அமைக்கவும் செய்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்து நம் இருதயத்தின் ஒவ்வொரு அறையையும், ஒவ்வொரு அறையின் ஒவ்வொரு மூலையையும் ஆட்கொள்ள விரும்புகிறார் (எபே. 3:16-19)
(நம் இருதயம் நான்கு அறைகளைக்கொண்ட ஒரு வீட்டைப் போன்றது. இந்த அறைகளே மனம், உணர்ச்சி, சித்தம் மற்றும் மனச்சாட்சி என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றபடி இருப்பது போதுமானதல்ல, தேவன் நமக்குள்ளாக அடித்துருவாக்கப்பட வேண்டும். (2 சாமு. 7:12; எபே. 3:7)
(தாவீதின் வீழ்ச்சி, நாம் தேவனின்படியான ஒரு நபராக இருந்தாலும்கூட தேவன் நமக்குள் அடித்துருவாக்கப்படவில்லை என்றால், நாம் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் அல்ல என்பதை எடுத்துரையுங்கள்).
த2 இன்று மீட்டுத்திருப்புதலில் உள்ள நம் வேலை, மக்களுக்கு தேவனை ஊழியஞ்செய்வதாகும்
(மத். 16:18; எபே. 2:21-22)
(நாம் ஊழியஞ்செய்கிற தேவன் கட்டுகிற தேவன் மட்டுமல்ல அவர் கட்டப்பட்ட தேவனாகவும் இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்).
நாள் 5
த1 ஒரு மனிதனின் வித்து அதாவது ஒரு மனிதனின் குமாரன் தேவனுடைய குமாரனாக மாற முடியும்
(2 சாமு 7:14; ரோ. 1:3-4)
(தேவத்துவத்திலன்று, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதனைத் தேவனாக்கும் பொருட்டு, தம்மையே மனிதனாக ஆக்குவதே தேவனுடைய நோக்கம் என்பதை இது மறைவாகக்காட்டுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தாவீதின் சந்ததியாகிய கிறிஸ்து தேவனின் குமாரனாக நிச்சயித்துக்காட்டப்பட்டுள்ளார்
(2 சாமு. 7:14; ரோ. 1:3-4)
(2 சாமுயேல் 7இல் வெளிப்படுத்தப்பட்டிருப்பது ரோமர் 1:34இல் பவுலால் விவரிக்கப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 வேதாகமத்திலுள்ள தெய்வீக வெளிப்பாட்டின் முடிவுரை புதிய எருசலேமாகிய ஒரு கட்டிடமாகும்
(வெளி. 21:2, 18-19)
(இந்தக் கட்டிடம் மனுஷுகத்தோடு தெய்வீகத்தின் இழைந்திணைதலும் கலந்திணைதலும் ஆகும். இது, வெளிப்படுத்தல் 21இலுள்ள புதிய எருசலேமைப் பற்றிய விளக்கத்தால் நிரூபிக்கப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்).
த2 புதிய எருசலேம், சுத்தப் பொன், முத்துக்கள் மற்றும் விலையேறப்பெற்றக் கற்களால் அலங்கரிக்கப்படுகிறது. அதாவது, மூவொரு தேவனை மூலக்கூறுகளாகக் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. (வெளி. 21:2, 18-19)
(தேவனுடைய தெய்வீகக் கட்டிடத்தின் மூன்று அம்சங்கள் என்ன?)