கர்த்தருடைய பிரசன்னமாகுதலுக்குமுன் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மைய பாரத்தையும், தற்போதைய சத்தியத்தையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டம்
செய்தி 1
தேவனுடைய பொருளாட்சியின் உச்சநிலை இலக்கு — புதிய எருசலேமை முழுநிறைவாக்க கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக தேவத்திவத்திலன்று மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதன் தேவனாகுமாறு தேவன் மனிதனானார்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
எபே.1:4-5 அதன்படியே, அன்பில் தமக்கு முன்பாக நாம் பரிசுத்தமாகவும் மாசற்றும் இருக்கும்படி, தம்முடைய சித்தத்தின் நல்லின்பத்தின்படியே, நம்மைத் தம்மிடமாய் இயேசு கிறிஸ்துவின்மூலம் குமாரத்துவத்திற்கென்று முன்குறித்து, உலகத்தின் அஸ்திபாரத்துக்கு முன்பே இவரில் நம்மைத் தெரிந்துகொண்டார்.
எபே. 5:26 வார்த்தையிலுள்ள தண்ணீரின் கழுவுதலால் அவளைத் தாம் சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்தும்படிக்கும்.
பசிதூண்டும் வார்த்தை
கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தார் என்பதை வெளிப்படுத்துகின்ற எபே.1: 4-5இன் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் என்ன?
பரிசுத்தமாக்கப்படுவதென்றால் பரிசுத்தமாக ஆக்கப்படுவதாகும். அதாவது, பொதுவான எல்லாவற்றிலுமிருந்து வித்தியாசமானவரான, வேறுபட்டவரான பரிசுத்தராகிய தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்படுவதும், தேவனைக்கொண்டுப் பூரிதமாக்கப்படுவதுமாகும். நாம் சுபாவத்தில் தேவனாக ஆவதற்காக, பரிசுத்தமாக இருக்கும்படி உலகத்தின் அஸ்திபாரத்திற்குமுன்பே கிறிஸ்துவில் தேவன் நம்மைத் தெரிந்தெடுத்தார் (வ. 4-5); தேவன் மட்டுமே பரிசுத்தமானவர்; நாம் பரிசுத்தமாக இருப்பதற்குத் தேவன் தம் பரிசுத்த சுபாவத்தில் நமக்குள் பகிர்ந்தளிக்கப்படுவது நமக்குத் தேவை. இந்தப் பரிசுத்த சுபாவமே பரிசுத்த ஆவியானவர் எதைக்கொண்டு நம்மைப் பரிசுத்தமாக்குகிறாரோ அந்தப் பரிசுத்த மூலக்கூறாக ஆகிறது.
நாம் தேவனுடைய குமாரர்களாக்கப்படும் குறிக்கோளுக்காக தேவன் நம்மைப் பரிசுத்தமாக இருக்கும்படி தெரிந்தெடுத்தார் என்று வெளிப்படுத்துகிறது; பரிசுத்தமாக்கப்படுவது என்பது ஒரு வழிமுறை, செயல்முறை; அப்படியிருக்க, தேவனுடைய குமாரர்களாக இருப்பது என்பது, நம் சரீரம் உட்பட (ரோ. 8:23), நம் முழு ஆள்தத்துவமும் தேவனால் “குமாரமயமாக்கப்படும்படியான” குறியும், இலக்குமாகும்.
ஆவிக்குரிய பாரம்
புதிய எருசலேமை முழுநிறைவாக்க கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக, தேவத்துவத்திலன்று மாறாக ஜீவனிலும், சுபாவத்திலும் மனிதன் தேவனாகுமாறு தேவன் கிறிஸ்துவில் மனிதனாகியுள்ளார் என்ற வெளிப்பாடு வேதாகமம் என்னும் பெட்டியில் இருக்கும் “வைரம்”.
தெய்வீகப் பரிசுத்தமாக்குதலே, நாம் தேவனுடைய வெளியாக்கமாக இருக்குமாறு நாம் தேவனுடைய (தேவத்துவத்திலன்று மாறாக அவருடைய ஜீவனிலும் அவருடைய சுபாவத்திலும் அவர் இருக்கும்வண்ணமாகவே ஆகும்படி நம்மைத் தேவனுடைய குமாரர்களாக்குவதன்மூலம் நம்மைத் தெய்வீகரீதியில் குமாரமயமாக்குவதற்கான தெய்வீகப் பொருளாட்சியைச் செயல்படுத்துவதில் உள்ள ஆதாரக் கோடாகும்; எனவே, தேவனுடைய பரிசுத்தமாக்குதலே தெய்வீகக் குமாரமயமாக்குதலாகும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
தேவத்துவத்திலன்று மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் நாம் தேவனாவது, கடந்த நித்தியத்தில் பிதாவாகிய தேவனால், அவர் நம்மைப் பரிசுத்தமாயிருக்கும்படி தெரிந்தெடுத்து, குமாரத்துவத்திற்கென்று நம்மை முன்குறித்ததின்மூலம் துவக்கப்பட்டது; தெய்வீகக் குமாரத்துவத்திற்கான தெய்வீகப் பரிசுத்தமாக்குதலே தெய்வீகப் பொருளாட்சியின் மையமும், புதிய ஏற்பாட்டிலுள்ள வெளிப்பாட்டின் மைய எண்ணமும் ஆகும்.
தெய்வீகப் பரிசுத்தமாக்குதலே, நாம் தேவனுடைய வெளியாக்கமாக இருக்குமாறு நாம் தேவனுடைய (தேவத்துவத்திலன்று மாறாக அவருடைய) ஜீவனிலும் அவருடைய சுபாவத்திலும் அவர் இருக்கும்வண்ணமாகவே ஆகும்படி நம்மைத் தேவனுடைய குமாரர்களாக்குவதன்மூலம் நம்மைத் தெய்வீகரீதியில் குமாரமயமாக்குவதற்கான தெய்வீகப் பொருளாட்சியைச் செயல்படுத்துவதில் உள்ள ஆதாரக் கோடாகும்; எனவே, தேவனுடைய பரிசுத்தமாக்குதலே தெய்வீகக் குமாரமயமாக்குதலாகும்:
தெய்வீகக் குமாரத்துவத்திற்கான நம் பரிசுத்தமாக்கப்படுதல், உச்சநிலையாக, பரிசுத்த நகரமும் (வெளி. 21:2, 10), தெய்வீகக் குமாரத்துவத்தின் முழுமொத்தமுமான (வ. 7) புதிய எருசலேமில் முழுநிறைவடைகிறது; இதுவே, மூவொரு தேவனின் கூட்டு வெளியாக்கத்திற்கான, அதாவது அவருடைய மகிமைக்கான (வவ. 11,23) ஒரு கூட்டு, மாபெரும் தேவ-மனிதனை ஆதாயப்படுத்த (வவ. 3, 22) மனிதன் ஆவியானவரில் தேவனாகக் கூடுமாறு தேவன் மாம்சத்தில் ஒரு மனிதனாக ஆவதன் உச்சநிலை முழுநிறைவேற்றம்.
ஜீவனின் அனுபவம்
கர்த்தருடைய பிரசன்னம் அவருடைய பேசுதலுடன் ஒன்றாயிருக்கிறது; அவர் பேசுகிறபோதெல்லாம், நாம் அவருடைய பிரசன்னத்தை நமக்குள் உணர்ந்தறிகிறோம்; கிறிஸ்துவின் பேசுதலே ஜீவன்தரும் ஆவியின் சாட்சாத்துப் பிரசன்னமாகும். நமக்குள் ஜீவன்-தரும் ஆவியாக இருக்கும் உள்வசிக்கும் கிறிஸ்துவின் பேசுதல், நம் சுபாவத்திலும் பிறவிக்குணத்திலும் உள்ள பழைய மூலக்கூறை இடமாற்ற ஒரு புதிய மூலக்கூறை நமக்குள் வைக்கும் சுத்திகரிக்கும் தண்ணீராகும்; இந்த வளர்சிதைரீதியான சுத்திகரித்தல் ஜீவனில் ஓர் உண்மையான மற்றும் உள்ளான மாற்றத்தை உண்டுபண்ணுகிறது, இதுவே குணரீதியான பரிசுத்தமாகுதல் மற்றும் மறுசாயலாகுதலின் நிஜம்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நம்முடைய ஜெபங்களின் மையக் குறிப்பு, கர்த்தருடைய பேசுதலுக்கான நம் ஏக்கமாக இருக்க வேண்டும், இது, அவர் தம் தெய்வீகக் குமாரத்துவத்தைப் பெறுவதற்கான அவருடைய இருதய வாஞ்சையின்படியான அவருடைய நித்தியப் பொருளாட்சியின் இலக்கை நிறைவேற்ற நமக்குத் திறனளிக்கிறது.
தேவ-மனிதர்களாக, நாம், சகலத்தையும்-உள்ளடக்கிய ஆவியானவர் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கவோ, எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளவோ சந்திக்கவோ கூடாது; இன்று நாம் எடுக்க வேண்டிய வழி, ஆவியானவரின் நகர்வில் நகர்ந்து, நம் நகர்வில் ஆவியானவர் நகரும்படிச் செய்யும் வழியாகும்
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 வெளிப்பாடு என்பது வேதாகமம் என்னும் “பெட்டியில்” இருக்கும் “வைரம்” (யோவான் 1:14; 12:24)
(இந்த வெளிப்பாடு என்பது என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனின் உச்சநிலையான வாஞ்சை, சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் ஜீவனாக இருக்க அவனுக்குள் நுழைவதாகும் (யோவான் 1:12, 14)
(நாம் நல்ல மனிதர்களாகவோ, ஆவிக்குரிய மனிதர்களாகவோ, பரிசுத்த மனிதர்களாகவோ இருந்தால் மட்டும் போதாது. நாம் தேவ மனிதர்களாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை எடுத்துரையுங்கள்
நாள் 2
த1 தேவனுடைய நகர்வின் ஒரு பதிவாகிய புதிய ஏற்பாடு (யோவான் 1:1, 14)
(புதிய ஏற்பாட்டின் ஆரம்பத்தில், தேவன் மனிதனுக்குள் நகர்ந்தார், மனிதனை ஆதாயப்படுத்தினார், ஒரு மனிதனாக ஆனார் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய நகர்வில் நாம் நகர்கிறோம், நம் நகர்வில் தேவன் நகர்கிறார் (அப். 16:6-7, 10)
(தேவனுடைய நகர்வில் மனிதன் நகர்ந்தான். தேவனும் மனிதனும் ஒன்றுசேர்ந்து நகர்ந்தனர் என்பதை அப் 16:6-7, 10 நமக்குக் காண்பிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்.)
நாள் 3
த1 தெய்வீகப் பரிசுத்தமாக்கப்படுதல் என்பது தெய்வீகப் பொருளாட்சியின் மையமும், புதிய ஏற்பாட்டில் உள்ள வெளிப்பாட்டின் மைய எண்ணமும் ஆகும் (எபே. 1:4-5)
(தெய்வீகக் குமாரத்துவத்திற்கென்று (குமாரத்துவத்திற்கான) தெய்வீகப் பரிசுத்தமாக்கப்படுதல் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இன்று நாம் ஆவியானவரின்படி, ஆவியானவரோடு, ஆவியானவரால் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் (ரோ. 8:4; எபே. 1:3)
(பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் குமாரத்துவம் ஆகிய இரண்டும் எப்போதும் ஆவியானவரால் நிறைவேற்றப்படுகின்றன என்பதை எடுத்துரையுங்கள்.)
நாள் 4
த1 பரிசுத்தமாக்குதல் என்பது தெய்வீகப் பொருளாட்சியை நிறைவேற்றுவதில் உள்ள ஆதாரக் கோடாகும் (1 தெச. 5:23)
(தெய்வீகப் பரிசுத்தமாக்குதல், நம் மனந்திரும்புதலிலிருந்து நம் மகிமைப்படுத்தப்படுதல் வரையுள்ள நம் ஆவிக்குரிய அனுபவங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்பதை எடுத்துரைங்கள்)
த2 தேவன் தம் பொருளாட்சியில் பல மகன்களை பெற முடிவு செய்தார் (எபி. 2:10; ரோ. 12:2)
(தேடும் பரிசுத்தமாக்குதல், மீட்கும் பரிசுத்தமாக்குதல், மறுபடிஜெநிப்பிக்கும் பரிசுத்தமாக்குதல், அனுதின பரிசுத்தமாக்குதல், ஒத்தசாயலாகும் பரிசுத்தமாகுதல் என்றால் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 தண்ணீரின் கழுவுதல், கிறிஸ்துவின் மீட்கும் இரத்தத்தின் கழுவுதலிலிருந்து வித்தியாசமானது. (எபே. 5:26; 1 யோவான் 1:7)
(தண்ணீரின் கழுவுதல், கிறிஸ்துவின் மீட்கும் இரத்தத்தின் கழுவுதலிலிருந்து எவ்வாறு வித்தியாசமானது என்பதை எடுத்துரையுங்கள்.)
த2 இன்று நாம் சுத்திகரிக்கப்பட வேண்டும் (எபே. 5:26; யோவான் 6:63)
(ஜீவத் தண்ணீரின் கழுவுதலால் நடக்கும் சுத்திகரிப்பு வார்த்தையில் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 ரேமா, இது உடனடி வார்த்தையைக் குறிக்கிறது, அதாவது, கர்த்தர் தற்போது நம்மிடம் பேசுகிற வார்த்தையைக் குறிக்கிறது.
(எபே. 5:26; வெளி. 2:7)
(எவ்வாறு “லோகோஸ்” மற்றும் “ரேமா” ஆகியன வேறுபட்டவை என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இந்த ஆவியானவரே நம்மைக் கழுவுகிற தண்ணீராக இருக்கிறார் (வெளி. 2:7)
(நமக்குள் இருக்கும் ஜீவன் தரும் ஆவியானவரின் இந்தப் பேசுதலே நம் உள்ளான ஆள்தத்துவத்தைச் சுத்திகரிக்கிற தண்ணீராக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)