மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்
செய்தி 8
மெய்யான சபை வாழ்க்கைக்காக தேவனுடைய ஒப்புயர்வற்ற விலையேறப்பெற்றதன்மையாக மகிமையும் மேன்மையுமான கிறிஸ்துவின் தரிசனமும், அனுபவமும், அனுபவமகிழ்ச்சியும்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்
தானி.10:5-6 என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப் போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
வெளி.1:12-13 (நான்) ஏழு பொன் விளக்குத்தண்டுகளையும், அந்த விளக்குத்தண்டுகளின் மத்தியிலே மனுஷகுமாரனுக்கு ஒப்பான ஒருவரையும் கண்டேன், அவர் பாதம்வரை நீண்டிருக்கம் ஆடையணிந்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்தார்.
பசிதூண்டும் வார்த்தை
எவ்வாறு நாம் மகிமையான சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட கிறிஸ்துவின் தரிசனத்தை பார்க்க முடியும்?
மகிமையான சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட கிறிஸ்துவின் தரிசனத்தைப் பார்ப்பதற்கு, நாம் நம் குருட்டுத்தனத்திலிருந்தும் சுகவீனத்திலிருந்தும் கர்த்தருடைய உள்ளார்ந்த குணமாக்குதலைப் பெறுமாறு கர்த்தர் நம் உள்ளான கண்களைத் திறக்கும்படியும், நம் இருதயத்தை மென்மையாக்கும்படியும், நம் இருதயத்தை அவரிடம் திருப்பப்பட்டதாகக் காத்துக்கொள்ளும்படியும் ஜெபிக்க நம் ஆவியைப் பயிற்சிசெய்து, ஏசாயாவின் எச்சரிப்பின் வார்த்தைக்கு (ஏசா. 6:9-10) நாம் செவிகொடுக்க வேண்டும்
ஆவிக்குரிய பாரம்
நாம் தேவனுடைய மகிமைக்காக ஓர் அற்புதமான பொக்கிஷத்தின் கட்டமைப்பாகிய புதிய எருசலேமாகும்படி அவருடைய தனிப்பட்ட பொக்கிஷமாகிய விலையேறப்பெற்றத்தன்மை நிறைந்த மனிதர்களாக, விலையேறப்பெற்றத்தன்மையாகவேகூட இருக்கும்படி நாம் அவரைக் கொண்டு கட்டியமைக்கப்படுமாறு தேவனுடைய ஒப்புயர்வற்ற விலையேறப்பெற்றத்தன்மையாக கிறிஸ்துவை அனுபவித்துமகிழும்படி நாம் காலத்தை மீட்டுக்கொள்ள வேண்டும்.
நாம் கிறிஸ்துவை நம் பங்காக அனுபவித்துமகிழ்ந்து, அவருடைய விலையேறப்பெற்ற, தற்போதைய பிரசன்னத்தில் வாழ்கையில், அவர் நம்மைத் தம் பொக்கிஷமாக அனுபவித்துமகிழ்கையில்கூட அவர் தம் இருதய வாஞ்சையின் நிறைவேற்றத்திற்காக நம்மைத் தம் ஆவிக்குரிய வீடாகவும், தம் பரிசுத்த, இராஜரீக ஆசாரியத்துவமாகவும் ஆக்கும்படி அவர் தம்மையே நமக்குள் கட்டுகிறார்.
தீர்க்கதரிசனகூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
மகிமையில் கிறிஸ்துவின் தரிசனம் தன் மனச்சோர்வில் ஏசாயாவால் பார்க்கப்பட்டது.
தம் ஒப்புயர்வற்ற விலையேறப்பெற்றத்தன்மையில் ஒரு மனிதனாக தானியேலுக்குத் தோன்றிய மேன்மையான கிறிஸ்துவைப் பற்றிய தரிசனம் தானியேலின் பாராட்டுதல், ஆறுதல், ஊக்கம், உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக இருந்தது.
பொன் விளக்குத்தண்டுகள் மத்தியில் பிரதான ஆசாரியராக உலாவுகிற மகிமையான கிறிஸ்துவைப் பற்றிய தரிசனமானது (வெளி. 1:9-2:1), மனுஷ குமாரனாகிய பரமேறிய கிறிஸ்துவைப் “பாதம்வரை நீண்டிருக்கும் ஆடையணிந்து மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்தவராக” யோவான் காண்பதற்காக அவனுடைய ஆவியில் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
பேதுரு தன் நிருபங்களில் ஒப்புயர்வற்ற ரீதியில் விலையேறப்பெற்றக் கிறிஸ்துவையும் ஜீவாதாரமாக அவருடன் தொடர்புடைய காரியங்களையும் பேசுகிறான்.
ஜீவனின் அனுபவம்
தேவனைப் பார்ப்பது நம்மை மறுசாயலாக்குகிறது, ஏனெனில், தேவனைப் பார்ப்பதில், நாம் தேவனை ஆதாயப்படுத்துகிறோம். நாம் அவரது மூலக்கூறை நம்முள் பெற்றுக்கொள்கிறோம், நம் பழைய மூலக்கூறு வெளியேற்றப்படுகிறது; இந்த வளர்சிதை வழிமுறையே மறுசாயலாகுதல். நாம் எவ்வளவாய் தேவனைப் பார்த்து, தேவனை அறிந்து, தேவனிடம் அன்புகூருகிறோமோ அவ்வளவாய் நாம் நம்மை அருவருக்கிறோம், அவ்வளவாய் நாம் நம்மை மறுதலிக்கிறோம்.
தேவனைக் காண்பது, தேவனால் சுத்திகரிக்கப்படுவதையும் சுத்தமாக்கப்படுவதையும் விளைவிக்கிறது; தேவனால் சுத்தமாக்கப்படுவது, தேவனுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் அவருடைய மகிமையில் அவரை வெளிக்காட்டுமாறும், அவருடைய பரிசுத்தத்தைக் கொண்டு பூரிதமாக்கப்படுமாறும், அவருடைய நீதியில் வாழுமாறும் கிறிஸ்துவை வாழ்கின்ற நிலைக்குள் அவர்களைக் கொண்டுவரும்படி தேவனால் அனுப்பப்படுவதை விளைவிக்கிறது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
மகிமையான சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட கிறிஸ்துவின் தரிசனத்தைப் பார்ப்பதற்கு, நாம் நம் குருட்டுத்தனத்திலிருந்தும் சுகவீனத்திலிருந்தும் கர்த்தருடைய உள்ளார்ந்த குணமாக்குதலைப் பெறுமாறு கர்த்தர் நம் உள்ளான கண்களைத் திறக்கும்படியும், நம் இருதயத்தை மென்மையாக்கும்படியும், நம் இருதயத்தை அவரிடம் திருப்பப்பட்டதாகக் காத்துக்கொள்ளும்படியும் ஜெபிக்க நம் ஆவியைப் பயிற்சிசெய்து, ஏசாயாவின் எச்சரிப்பின் வார்த்தைக்கு (ஏசா. 6:9-10) நாம் செவிகொடுக்க வேண்டும்.
கிறிஸ்துவையும், அவர் என்னவாக இருக்கிறாரோ அவையெல்லாவற்றையும் நம் மிகுந்த மேன்மையான பங்காக நாம் தொடர்ச்சியாகத் தெரிந்தெடுக்குமாறு, மதிப்பைப் பற்றிய நம் கருத்தில் ஒரு முழுமையான மாற்றங்கொள்ள நமக்கு வெளிச்சத்தைத் தரும்படி நாம் கர்த்தரிடம் கேட்க வேண்டும்.
பூமிக்குரிய எல்லா ஐசுவரியங்களையும்விட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் அதிக பொக்கிஷமாகக் கருத வேண்டும்; அப்போது, தேவனுடைய பல்வேறு கிருபையாகக் கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய-முடியாத ஐசுவரியங்களை அவருடைய மக்களுக்குள் பகிர்ந்தளிக்க நாம் தேவனுடைய வாக்குகளைப் பேச முடியும்
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 மகிமையில் கிறிஸ்துவின் தரிசனம் தன் மனச்சோர்வில் ஏசாயாவால் பார்க்கப்பட்டது
(ஏசா.6:1, 5)
(ஏசாயா 6இல் (கிறிஸ்து)தெய்வீக மகிமையையும் மனித நற்பண்புகளையும் கொண்ட தேவ-மனிதனாக இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 தன் பரிசுத்தத்தில் தெய்வீக மகிமையாலும் மனித நற்பண்புகளாலும் நிறைந்த கிறிஸ்துவால் அவன் அனுப்பப்பட்டான் (ஏசா. 6:8-10)
(ஒவ்வொரு அனுப்பப்பட்டவரும் ஒரே காரியத்தைச் செய்யும்படி கர்த்தரால் அனுப்பப்படுகிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 பூமியிலுள்ள சூழ்நிலை என்னவாக இருந்தாலும், கிறிஸ்து இன்னும் தம் மகிமையில் சிங்காசனத்தில் இருக்கிறார் (ஏசா. 6:1-4)
(சபை வாழ்க்கையில், சூழ்நிலையைக் கீழ்நோக்கிப் பார்க்காமல், கிறிஸ்துவை மேல்நோக்கிப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த 2 கர்த்தருடைய தரிசனத்தை மெய்யாகவே பார்க்கிற அனைவரும் பிரகாசிப்பிக்கப்படுகிறார்கள் (ஏசா. 6:5-7)
(நம்மைக் குறித்து நாம் எவ்வளவு அதிகமாக உணர்ந்தறிகிறோம் என்பது கர்த்தரை நாம் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 தானியேல் 10:4-9இல், தானியேல் ஒரு குறிப்பிட்ட தரிசனத்தைப் பார்த்தான்(தானியேல் 10:4-9)
(இவர் ஒரு மனிதனாகிய கர்த்தர் என்பதை அவரைப் பார்த்த தானியேல் புரிந்து கொண்டான் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 கிறிஸ்துவின் தரிசனம் பௌதிகமாக இல்லாமல் ஆவிக்குரியதாக இருந்தது (தானி. 1:5-7)
(தானியேல் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டான்; அவனோடிருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 4
த1 வெளிப்படுத்தல் 1இல் காணப்படுகிறபடி சீராட்டுவதற்கும் போஷிப்பதற்கும் கிறிஸ்துவே மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்(வெளி. 1:12-13)
(இப்போது கிறிஸ்து, தம் அரைகளில் உள்ள கச்சையால் அல்ல, மாறாக அன்பை அடையாளப்படுத்தும் தம் மார்புகளில் உள்ள கச்சையால் சபைகளைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை எடுத்துரைங்கள்)
த2 அவர் எல்லா நேரமும் நம்மை சீராட்டி நம்மைப் பொறுப்பெடுத்துக்கொள்கிற தம் மனுஷீகத்திலுள்ள பிரதான ஆசாரியராக இருக்கிறார் (எபி. 4:15; வெளி. 1:13)
(கிறிஸ்து எவ்வாறு விளக்குத்தண்டுகளாகிய சபைகளைச் சீராட்டுவதற்கு தம் மனுஷீகத்தில் மனுஷகுமாரனாக அவற்றைக் கவனித்துக்கொள்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 கிறிஸ்துவின் கண்களின் இந்த வெவ்வேறு அம்சங்கள் அனைத்தையும் அனுபவமாக்குதல்
(வெளி . 1:14)
(அவரது கண்கள், அவர் என்னவாக இருக்கிறாரோ அவை யாவற்றையும் நமக்கு உட்செலுத்துகின்றன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நாம் யாருக்கு சொந்தமானவர்களோ நாம் யாரை சேவிக்கிறோமோ அந்த தேவன், ஜீவிக்கும் தேவனாய் இருக்கிறார் (வெளி. 1:18)
(கர்த்தரை என்றும் என்றென்றும் வாழ்பவரான தேவனாக அறிந்தவர்கள், எந்நேரமும் நம் ஆவியில் அவரது பிரசன்னத்தைக் குறித்து நாம் உறுதியாயிருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகளோடு எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கிறிஸ்தவனுக்கு ஏற்படும் மதிப்பீட்டில் உள்ள ஒரு வகையான மாற்றம். (எரே. 15:19; பிலி. 3:7-8)
( பவுலுக்கு இலாபமாயிருந்த காரியங்களை ஏன் நிராகரிக்க முடிந்தது? அவன் ஏன் அவற்றை இழப்பாக கருத முடிந்தது? என்பதை எடுத்துரையுங்கள்.)
த2 புதிய எருசலேமுடைய வடிவமைப்பின் அடிப்படை மூலக்கூறுகள் பொன், முத்துக்கள், விலையேறப்பெற்றக் கற்கள். (வெளி. 21:18, 21)
(தங்கம், முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றின் அடையாள அர்த்தங்கள் (அல்லது) உருவக அர்த்தங்கள் என்ன? என்பதை எடுத்துரையுங்கள்)