Tamil – Prophesying Outline ITEROS23 Week 06

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்

செய்தி 6

மெய்யான சபை வாழ்க்கைக்காக கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய அனுமதித்தல், கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் ஐசுவரியமாய் குடியிருக்க அனுமதித்தல், ஜெபத்தில் தளரா உறுதியோடு தரித்திருத்தல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்.

கொலோ. 3:15 -16. தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கிறிஸ்துவின் வார்த்தை சகல ஞானத்திலும் உங்களில் ஐசுவரியமாய்க் குடியிருக்கட்டும், எப்படியெனில் சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஆவிக்குரிய பாடல்களினாலும் நீங்கள் ஒருவருக்கொருவர் போதித்து அறிவுறுத்தி, உங்கள் இருதயங்களில் கிருபையோடு தேவனுக்குப் பாடுங்கள்.

கொலோ. 4:2 ஜெபத்தில் தளரா உறுதியோடு தரித்திருங்கள்; நீங்கள் நன்றிசெலுத்துதலோடு அதிலே விழிப்பாயிருந்து,

 

பசிதூண்டும் வார்த்தை

மெய்யான சபை வாழ்க்கையைப் பெறுவதற்கு, கொலோசெயர் புத்தகத்திலுள்ள எந்த மூன்று காரியங்களை நாம் பயிற்சி செய்யலாம்?

கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய நாம் அனுமதிக்க வேண்டும். கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய நாம் அனுமதித்தால், இந்தச் சமாதானம் நம் மத்தியிலுள்ள எல்லாச் சச்சரவுகளையும் தீர்த்துவிடும்; அப்பொழுது நாம் செங்குத்தாக தேவனுடனும், கிடைமட்டமாக பரிசுத்தவான்களுடனும் சமாதானமாக இருப்போம்.

நமக்குள் கிரியைசெய்து, நம் ஆள்தத்துவத்திற்குள் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை ஊழியஞ்செய்கின்ற தேவனுடைய வார்த்தையின் செயல்பாடுகளை நாம் அனுபவமாக்குமாறு, கர்த்தருடைய வார்த்தை நம்மில் முதலிடம் வகிக்கவும், நம்மில் குடியிருக்கவும் நாம் அனுமதிக்க வேண்டும்.

நாம் ஜெபத்தில் தளரா உறுதியோடு இருக்க வேண்டும். நாம் ஜெபத்திற்குப் போதிய நேரம் கொடுக்க வேண்டும், இது சகலத்தையும் உள்ளடக்கிய தேசமாகிய கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அதிகமாக உறிஞ்சிக்கொள்ள நமக்குத் திறனளிக்கும்.

 

ஆவிக்குரிய பாரம்

ஜெபத்தில் தளரா உறுதியோடு தரித்திருப்பதன்மூலம் நாம் கிறிஸ்துவின் சமாதானத்தால் ஆளப்பட்டு, கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் குடியிருக்கையில், நாம் மெய்யான சபை வாழ்க்கை வாழ்வதற்காக, நம் இயற்கையான வேறுபாடுகள் எல்லாம் அகற்றப்படும்வரை, அவர் நம்மை ஊடுருவ வியாபித்து, தம்மைக்கொண்டு நம்மை இடமாற்றுகிறார்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய நாம் அனுமதிக்க வேண்டும். கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய நாம் அனுமதித்தால், இந்தச் சமாதானம் நம் மத்தியிலுள்ள எல்லாச் சச்சரவுகளையும் தீர்த்துவிடும்; அப்பொழுது நாம் செங்குத்தாக தேவனுடனும், கிடைமட்டமாக பரிசுத்தவான்களுடனும் சமாதானமாக இருப்போம்.

நமக்குள் கிரியைசெய்து, நம் ஆள்தத்துவத்திற்குள் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை ஊழியஞ்செய்கின்ற தேவனுடைய வார்த்தையின் செயல்பாடுகளை நாம் அனுபவமாக்குமாறு, கர்த்தருடைய வார்த்தை நம்மில் முதலிடம் வகிக்கவும், நம்மில் குடியிருக்கவும் நாம் அனுமதிக்க வேண்டும்.

நாம் ஜெபத்தில் தளரா உறுதியோடு இருக்க வேண்டும். நாம் ஜெபத்திற்குப் போதிய நேரம் கொடுக்க வேண்டும், இது சகலத்தையும் உள்ளடக்கிய தேசமாகிய கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அதிகமாக உறிஞ்சிக்கொள்ள நமக்குத் திறனளிக்கும்.

 

ஜீவனின் அனுபவம்
கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய நாம் அனுமதித்தால், இந்தச் சமாதானம் நம் மத்தியிலுள்ள எல்லாச் சச்சரவுகளையும் தீர்த்துவிடும்; அப்பொழுது நாம் செங்குத்தாக தேவனுடனும், கிடைமட்டமாக பரிசுத்தவான்களுடனும் சமாதானமாக இருப்போம். கிறிஸ்துவின் சமாதானத்தின் நடுவாண்மையின்மூலம், நமது பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன, பரிசுத்தவான்களிடையே உள்ள உராய்வு மறைந்துபோகிறது; அப்போது சபை வாழ்க்கை இனிமையில் பாதுகாக்கப்படுகிறது, புதிய மனிதன் ஒரு நடைமுறைக்குரிய வழியில் பராமரிக்கப்படுகிறான்.

கர்த்தருடைய வார்த்தையை நாம் எவ்வளவாய்ப் பாடி, சங்கீர்த்தனம்பண்ணுகிறோமோ, அவ்வளயாய் அந்த வார்த்தை நம்மில் குடியிருக்கவும், நமக்குள் மூழ்கவும், தெய்வீக மூலக்கூறைக்கொண்டு நம்மை ஊடுருவ வியாபிக்கவும் நாம் வாய்ப்பளிக்கிறோம்; அப்போது புறத்தூண்டுதலின்றி, நாம் கிறிஸ்துவை வாழ்வோம்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் ஐசுவரியமாய்க் குடியிருக்க நாம் அனுமதிக்க வேண்டும். பின்வரும் ஜீவ கோட்பாடுகளின்படி கிறிஸ்து நமக்குள் உட்செலுத்தப்படுவதற்காக ஆவியானவரின் பிரயோகிக்கப்பட்ட வார்த்தையாக அவர் நம்மிடம் தனிநபர் ரீதியில் பேசும்படியாக, தினமும் நாம் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையில் ஜீவிக்கும் வார்த்தையாகிய கிறிஸ்துவிடம் வருவதைப் பயிற்சிசெய்ய வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையைக் குறித்தும், வார்த்தையைக் கொண்டும் ஜெபிக்க நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும். அதோடு, அவருடைய வார்த்தையைப் பாடுவதற்கும், சங்கீர்த்தனம்பண்ணுவதற்கும், அசைபோடுவதற்கும் நம் முழு ஆள்தத்துவத்தையும் பயிற்சிசெய்ய வேண்டும்.

நாம் ஜெபத்தில் தளரா உறுதியோடு இருக்க வேண்டும். நாம் ஜெபத்திற்குப் போதிய நேரம் கொடுக்க வேண்டும்.இது. சகலத்தையும்உள்ளடக்கிய தேசமாகிய கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அதிகமாக உறிஞ்சிக்கொள்ள நமக்குத் திறனளிக்கும்.நாம் ஜெபத்திற்காகத் திட்டவட்டமான நேரங்களை ஒதுக்க வேண்டும்; ஜெபம் நம் மிக முக்கியமான தொழில் என்பதும், அதில் தலையிட எதுவும் அனுமதிக்கப்படக்கூடாது என்பதும் நம் மனப்பான்மையாக இருக்க வேண்டும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 கிறிஸ்துவின் சமாதானமே நம் உள்ளார்ந்த நடுவாண்மை செய்பவர் (கொலோ. 3:15)

(நம் ஆள்தத்துவத்திற்குள் உள்ள வெவ்வேறு சாரார்கள் வாதிடுவதை அல்லது சண்டையிடுவதை தீர்க்க நமக்கு ஒரு நடுவர் தேவை என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவின் சமாதானம் என்பது புதிய மனிதனின் சாட்சாத்து ஒருமையாகும் (எபே. 2:15; கொலோ. 3:15)

(கிறிஸ்துவும் சபையும் தவிர, வேறுபட்ட இனங்கள் மற்றும் தேசங்களைச் சேர்ந்தவர்களால் மெய்யாகவே ஒன்றாக இருக்க முடியாது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 கிறிஸ்துவின் சமாதானம் நமக்குள் ஆட்சிசெய்வதை அனுபவித்தல் (எபே . 2:15; 4:3)

(கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் நடுவாண்மைசெய்ய நாம் அனுமதித்தால், இந்தச் சமாதானம் நம் மத்தியிலுள்ள எல்லாச் சச்சரவுகளையும் தீர்த்துவிடும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நம்மில், கிறிஸ்து, நிரப்பீடளிக்கும் கிருபையாகவும், நடுவாண்மைசெய்யும் சமாதானமாகவும் இருக்கிறார். (எபே. 2:15; 4:3)

(நமக்குள் ஒப்பற்ற நடுவராக இருக்க கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் சிங்காசனமேற்றப்படும்போது, நாம் செங்குத்தாக தேவனுடனும், கிடைமட்டமாக பரிசுத்தவான்களுடனும் சமாதானமாக இருப்போம் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 தேவனுடைய வார்த்தையின் செயல்பாடுகளை அனுபவமாக்குதல் (1) (கொலோ . 3:6; 2 தீமோ. 3:16-17)
(தேவனுடைய வார்த்தை நம்மைப் போஷிக்கிறது நம்மைப் பலப்படுத்துகிறது. நாம் ஆவியில் மட்டுமல்லாமல், நம் ஆத்துமாவிலும் பலமாக இருப்போம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தேவனுடைய வார்த்தையின் செயல்பாடுகளை அனுபவமாக்குதல்(1) (கொலோ . 3:6; 2 தீமோ. 3:16-17)

(தேவனுடைய வார்த்தை நம்மைக் கட்டியெழுப்புகிறது. தேவனுடைய வார்த்தை முழுமையாக்குகிறது, பூரணப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4
த1 வார்த்தையை ஜெபவாசித்தல் மற்றும் தேவனுடைய வார்த்தையைப் பாடி-வாசித்தல் (சங். 119:54; கொலோ.3:16)

(நாம் வார்த்தையை பாடும்போது மற்றும் சங்கீர்த்தனம் பண்ணும்போது, நாம் அதை ஆழ்ந்து சிந்திக்கிறோம், அதன்மீது தியானிக்கிறோம், அதை அனுபவித்துமகிழ்கிறோம், அதன் மூலம் அந்த வார்த்தை நம்மைப் பூரிதமாக்குவதற்கான அதிக வாய்ப்பைக் கொடுக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் தேவனின் வார்த்தையிலிருந்து ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால், முதலில் நாம் நம் இருதயத்துடன் இடைபட வேண்டும் (2 தீமோ . 3:16; யாக். 4:6)

(நம் நிலை இயல்பானதாக இருந்தால், நாம் தேவனுடைய வார்த்தையிடம் வரும்போதெல்லாம் நாம் உதவிசெய்யப்பட்டு, மிகவும் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 தேவன் நமக்குள் வருவதன்மூலம் வளர்ச்சியைத் தருகிறார் (கொலோ. 2:6-7)

(தேவன் இவ்விதத்தில் வளர்ச்சியைக் கொடுப்பதால், அவரை உறிஞ்சிக்கொள்ள நாம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஒரு திட்டவட்டமான மற்றும் மேலோங்குகிற வழியில் கர்த்தரை தொடர்புகொள்வதை கற்றுக் கொள்ளுதல் (கொலோ. 4:2; 2:6-7)

(ஒரு கிறிஸ்தவனாக இருப்பதென்றால் ஆவியில் இருப்பது என்றும், கிறிஸ்தவ வாழ்க்கை என்பது முற்றிலும் ஆவியில் உள்ள ஒரு காரியம் என்றும் நாம் உணர்ந்தறிவோம் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 ஜெபிப்பதென்றால், விழுந்துபோன பிரபஞ்சத்திலுள்ள ஓட்டத்திற்கு, போக்கிற்கு எதிராகச் செல்வதாகும் (மத்.26:41; எபே. 6:18)

(ஜெபத்தில் தளரா உறுதியுடன் தரித்திருத்தல், ஒரு படகை நீரோட்டத்திற்கு எதிராக ஓட்டுவதைப் போன்றது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நம் ஜெப வாழ்க்கையைக் குறித்து நாம் அனைவரும் அவரிடத்தில் ஒரு பொருத்தனை பண்ண வேண்டும் (மத். 26:41; எபே. 6:18)

(நாம் ஜெபத்தைக் குறித்து கர்த்தரோடு இத்தகைய ஓர் ஒப்பந்தம் பின், நாம் ஜெபத்திற்காக திட்டவட்டமான நேரங்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)