Tamil – Prophesying Outline ITEROS23 Week 04

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்

செய்தி 4

மெய்யான சபை வாழ்க்கையில் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதற்காக அவரை நம் வாழ்க்கையாக எடுத்துக்கொள்ளுதலும் தெய்வீக மகிமையில் நம் ஒருமைக்காக சுயத்துடன் இடைப்படுதலும்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

பிலி 1:19-21 ஏனெனில், நாள் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், முழு தைரியத்தோடு எப்போதும்போலவே, இப்போதும்கூட வாழ்வினாலோ சாவினாலோ, கிறிஸ்து என் சரீரத்திலே பெரிதாக்கிக்காட்டப்படுவார் என்ற என் ஆர்வமான எதிர்பார்ப்பின்படியும் நம்பிக்கையின்படியும், உங்கள் விண்ணப்பத்தினாலும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் உதாரத்துவமான நிரப்பீட்டினாலும், இது எனக்கு இரட்சிப்புக்கேதுவாக முடியும் என்று அறிந்திருக்கிறேன். ஏனெனில் என்னைப்பொருத்தவரை, வாழ்வதென்றால் கிறிஸ்துவே. சாவது ஆதாயமே.

 

பசிதூண்டும் வார்த்தை

மெய்யான சபை வாழ்க்கையில் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதற்காக அவரை எவ்வாறு நம் வாழ்க்கையாக எடுத்துக்கொள்ளமுடியும்?

பிலிப்பியர் 1:19இலுள்ள இரட்சிப்பு என்பதற்கு, கிறிஸ்துவை வாழவும் அவரைப் பெரிதாக்கிக் காட்டவும் ஆதரித்துத் தாங்கப்படுதலும் பலப்படுத்தப்படுதலும் என்று பொருள்; இதற்கு இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் உதாரத்துவமான நிரப்பீடு தேவை. இயேசு கிறிஸ்துவின் சகலத்தையும் உள்ளடக்கியதும் உதாரத்துவமுமான நிரப்பீடளிக்கும் ஆவியானவரை நாம் அனுபவித்து அவரால் நிரப்பப்படும்போது, கிறிஸ்து பெரிதாக்கிக் காட்டப்பட்டு, நம் வெளியாக்கமாக ஆகிறார்.

 

ஆவிக்குரிய பாரம்

கிறிஸ்துவை வாழ்வதன்மூலம் அவரை வெளிக்காட்டுவதற்காக நாம் நம் சரீரத்தில் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டினால், நாம் பரிசுத்தவான்களை ஜீவனில் வளரச்செய்து கர்த்தரை அனுபவித்துமகிழச்செய்யும் பலமான காரணிகளாக, நிரப்பீட்டின் வாய்க்கால்களாக ஆவோம். ஜீவனில் பரிசுத்தவான்களின் வளர்ச்சியாகிய) பரிசுத்தவான்களின் ‘முன்னேற்றத்திற்காகவும்”, (கிறிஸ்துவை அனுபவிக்கும் அவர்களின் அனுபவமகிழ்ச்சியாகிய) அவர்களது “விசுவாசத்தின் மகிழ்ச்சிக்காகவும் நாம் அனைவரும் அவர்களுக்கு பலமான காரணிகளாக, நிரப்பீட்டின் வாய்க்கால்களாக இருக்கும்படி விரும்ப வேண்டும். பரிசுத்தவான்கள் ஜீவனில் வளர்வதற்கும், அவர்கள் கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்வதற்கும் நாம் அத்தகைய காரணிகளாக இருக்கிறோமா இல்லையா என்பது நாம் கிறிஸ்துவை வாழ்வதன்மூலம் அவரைப் பெரிதாக்கிக்காட்டுகிறோமா இல்லையா என்பதைச் சார்ந்தது.

தேவனை மகிமைப்படுத்துவதே நம் வாழ்க்கை மற்றும் நம் சேவையின் குறிக்கோளாகும்; தேவனுடைய கூட்டு வெளியாக்கத்திற்காக “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்வதே தேவனுக்கு நாம் வழங்கக்கூடிய அதிஉயர்ந்த வாழ்க்கையும் சேவையுமாகும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

அப்போஸ்தலன் தன் சரீரத்தில் அனுபவித்த அவனது பாடுகளில், கிறிஸ்து பெரிதாக்கிக்காட்டப்பட்டார்; அதாவது, அவர் (எந்த வரம்புமின்றி) பெரியவர் என்று காட்டப்பட்டார் அல்லது அறிவிக்கப்பட்டார். உயர்த்தப்பட்டார், புகழப்பட்டார்.

கிறிஸ்துவை வாழ்வதன்மூலம் அவரை வெளிக்காட்டுவதற்காக நாம் நம் சரீரத்தில் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டினால், நாம் பரிசுத்தவான்களை ஜீவனில் வளரச்செய்து கர்த்தரை அனுபவித்துமகிழச்செய்யும் பலமான காரணிகளாக, நிரப்பீட்டின் வாய்க்கால்களாக ஆவோம்.

தேவனுடைய கூட்டு வெளியாக்கமாகிய, தெய்வீக மகிமையில் உள்ள ஒருமைக்குள் விசுவாசிகள் நுழைவதற்கு, அவர்கள் சுயத்துடன் முழுமையாக இடைபட்டாக வேண்டும்.

 

ஜீவனின் அனுபவம்

நமக்கு நாம் அனுதினமும் மரிக்கையில், நம் மகிமைக்காக நாம் நம்மையே பிரசிங்கப்பதில்லை, மாறாக கர்த்தருடைய தெய்வீக மகிமைக்காக நாம் அவருக்கு வாழ்கிறோம். மேலும் நிஜமான சபை வாழ்க்கையில் அவரின் மகிமைக்காக நம் இருதயங்களில் கிறிஸ்து வீடு அமைக்கையில், நாம் மகிமையிலிருந்து மகிமைக்கு மறுசாயலாக்கப்படுகிறோம். நம் ஆவியைப் பயிற்சிசெய்வதன்மூலம், நம் சுயத்தின் அகம்-சார்ந்த சிலுவைமரணத்திற்காகக் கூட்டு ஆவியானவரில் உள்ள கிறிஸ்துவின் மரணத்தை நம்மால் பிரயோகிக்க முடியும் (சுத்தமான வெள்ளைப்போளம் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற மரணத்தை அடையாளப்படுத்துகிறது, சுகந்த கருவாப்பட்டை கிறிஸ்துவினு- டைய மரணத்தின் இனிமை மற்றும் வீரியத்தை அடையாளப்படுத்துகிறது)

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதற்காக கிறிஸ்துவை வாழ்வதற்கு ஆவியானவரின் உதாரத்துவமான நிரப்பீட்டை சரீரத்தின் நிரப்பீட்டை அனுபவிக்கும் நம் அனுபவமகிழ்ச்சியை நாம் பராமரிக்கக்கூடுமாறு, நாம் சரீர வாழ்க்கையில் இருக்கவும், சரீரத்தைக் கட்டியெழுப்பும் ஆசாரிய சேவையில் நிலைத்திருக்கவும் வேண்டும்.

நாம் (நம்) சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்தக்” கூடுமாறு (1 கொரி.6:20), நாம் “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கே செய்பவர்களாக” இருக்க வேண்டும்.

சுயத்துடன் இடைபடுவதற்கு, நம் சுயத்தை மரணத்திற்குள்ளாக்கும்படி, சிலுவை நம்மீது தொடர்ந்து வேலைசெய்ய அனுமதித்து, நாம் சிலுவை சுமப்பவர்களாக இருக்க வேண்டும். நாம், நம் சுயத்தை நாள்தோறும் சிலுவையின் முடிவுகட்டுதலின்கீழ் வைத்து, சிலுவையிலேயே தங்கியிருக்க வேண்டும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 பிலிப்பியர் 1:20இலுள்ள இரட்சிப்பு, 2:12இலுள்ள இரட்சிப்பைச் செயல்படுத்துதலாகும்(பிலி. 1:19; 2:12)

(பிலிப்பியர் 1:19-21படி , பவுல் அனுபவித்துமகிழும்படி எதிர்பார்த்த இரட்சிப்பு என்ன என்பதை எடுத்துரையுங்கள்)

த2 இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதாரத்துவமான நிரப்பீடே பவுல் அனுபவித்த இரட்சிப்பின் அனுபவத்திற்கு திறவுகோலாக இருந்தது. (பிலி.1:19-21)

(பவுலின் பாடுகள் அவனை வெட்கப்படுத்தவில்லை. மாறாக, அவன் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்ட அவனுக்கு வாய்ப்பளித்தன என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 பெரிதாக்கிக்காட்டு என்ற வார்த்தைக்கு ஒன்றை நம் பார்வைக்குப் பெரிதாக்குவது என்று பொருள். (பிலி. 1:20)

(1:19இல் கிறிஸ்து தன்னில் பெரிதாக்கிக் காட்டப்படுவார் என்ற பவுலின் கூற்றுடன் தொடர்புடைய சொற்கள் என்ன? என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பவுல் ரோம சிறையில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது, அவர் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக் காட்டினார். அவரைச் சிறைபிடித்தவர்களின் பார்வையில் கிறிஸ்துவைப் பெரியவராகத் தோன்றப்பண்ணினார் (பிலி. 4:22; 3:9)

(நம் அன்றாட வாழ்க்கையில் நாமும் மற்றவர்களின் பார்வையில் கிறிஸ்துவைப் பெரியவராக்குவதன்மூலம், அவரைப் பெரிதாக்கிக் காட்டவேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 கிறிஸ்துவைத் தரித்துக்கொள்வதென்றால், கிறிஸ்துவால் வாழ்வதும், கிறிஸ்துவை வாழ்ந்துகாட்டுவதும் ஆகும். (ரோம. 13:14; யாத். 28:2)

(நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, ஏற்கெனவே கிறிஸ்துவில் இருந்தாலும் , நாம் இன்னும் அவரைத் தரித்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பவுல் ஒரு பெரிதாக்கப்பட்ட விதத்தில் கிறிஸ்துவின் மாபெருந்தன்மையை வெளிக்காட்டினான். (பிலி. 1:21; 2:20)

(பவுல் சிறையில் தவறாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், அவரால் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,கிறிஸ்துவின் வரம்பற்ற மாபெருந்தன்மையைக் காவலர்களுக்கு காட்சியாக்க முடிந்தது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 பவுல் கிறிஸ்துவை வாழ்ந்ததால், கிறிஸ்து பவுலின் சரீரத்தில் பெரிதாக்கிக் காட்டப்பட முடியும் (பிலி. 1:21-23)

(பவுலினுடைய வேலை அவனுடைய வாழ்க்கையாக இருந்தது என்பதை எடுத்துரைங்கள்)

த2 நாம் வாழ்கிறோமா அல்லது சாகிறோமா என்பது சபைக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் (பிலி. 1:25-26)

(இது நாம் கிறிஸ்துவை வாழ்வதையும், கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதையும், கிறிஸ்துவை ஊழியஞ்செய்வதையும், கிறிஸ்துவை நம் ஆள்தத்துவத்தின் ஆழங்களிலிருந்து பரிசுத்தவான்களுக்குள் உட்கடத்துவதையும் சார்ந்துள்ளது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 குஷ்டரோகி ஓர் அச்சசலான பாவியைச் சித்தரிக்கிறான் (லேவி 13:45-46; மத்.8:2)
(குஷ்டரோகம் கலகம் மற்றும் கீழ்ப்படியாமையிலிருந்து விளைகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 சரீரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக மிகப்பெரிய முட்டுக்கட்டை மற்றும் எதிர்ப்பாக, இருப்பது சுயமே. (மத் . 16:24)

(விழுந்துபோன பாவிகளாகிய நம்மோடுள்ள பிரதானமான பிரச்சினை உண்மையில் நம் புறம்பான பாவச் செயல்கள் அல்ல, மாறாக சாத்தானின் தீய ஜீவனிலிருந்து தொற்றுகிற நம்முள் உள்ள பாவ சுபாவமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 சிலுவையின் நோக்கம் பாடுபடுதல் அல்ல, மாறாக நபரை முடிவுகட்டுவதாகும். (லூக். 14:27)

(கிறிஸ்து முதலில் சிலுவையைச் சுமந்தார், அதன்பின் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அவரிலுள்ள விசுவாசிகளோ, முதலில் சிலுவையில் அறையப்பட்டு, சிலுவையை சுமக்கின்றனர் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 முடி நம்முள் உள்ள சிரமங்களை அடையாளப்படுத்துகிறது. (லேவி. 14:9)

(முடியைச் சிரைப்பதென்றால், நம் சொந்த சுயத்தோடுள்ள சிரமங்களைக் கையாளுதல் என்று அர்த்தம் என்பதை எடுத்துரையுங்கள்)