Tamil – Prophesying Outline ITEROS23 Week 03

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்

செய்தி 3

ஒரே புதிய மனிதனாக சபைக்காக கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொள்ளுதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்
யோவான் 14:10 நான் உங்களுக்குச் சொல்கிற வார்த்தைகளை நான் என்னிலிருந்து பேசவில்லை, மாறாக என்னில் வசிக்கிற பிதாவே தம் வேலைகளைச் செய்கிறார்

கலா. 2:20 கிறிஸ்துவுடனே நான் சிலுவையில் அறையப்பட்டுவிட்டேன், வாழ்வது இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்…

எபே. 4:24 நிஜத்தின் நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனின்படி சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனிதனைத் தரித்துக்கொள்ளவும் வேண்டுமென்று.

 

பசிதூண்டும் வார்த்தை

ஒரே புதிய மனிதனாக சபைக்காக கிறிஸ்துவை எவ்வாறு நம் நபராக எடுத்துக்கொள்ள வேண்டும்?

நாம் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொள்ள விரும்பினால், இனி நம் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்ட ஆவி வெறுமனே நாம் தேவனைத் தொடர்புகொள்வதற்கான ஓர் உறுப்பு மட்டுமல்ல, மாறாக அது நம் நபர் என்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் நம் முந்தைய நபரான நம் ஆத்துமாவை மறுதலிக்க வேண்டும், நம் ஆவியிலுள்ள கிறிஸ்துவை நம் புதிய நபராக எடுத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்து நம் இருதயத்தில் தம் வீட்டை அமைக்க அவரை அனுமதிப்பதன்மூலம் நாம் அவரை நம் நபராக எடுத்துக்கொள்கிறோம். கிறிஸ்து நம் இருதயத்தில் தம் வீட்டை அமைக்கும்போது, நாம் போதிய விதத்தில் அவரை நம் நபராக எடுத்துக்கொள்வோம்; அவரது மனம் நம் மனமாக ஆகும், அவரது உணர்ச்சி நம் உணர்ச்சியாக ஆகும். அவரது சித்தம் நம் சித்தமாக ஆகும்.


ஆவிக்குரிய பாரம்.

ஒரே புதிய மனிதனாக சபைக்காக நாம் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபை, தேவனின் நித்தியக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான ஒரே புதிய மனிதனாக இருக்கிறது. ஒரே புதிய மனிதனில் இயற்கை மனிதனுக்கு எந்த இடமுமில்லை; புதிய மனிதனில் நம் அனைவருக்கும் எந்த இடமுமில்லை, ஏனெனில் இங்கே கிறிஸ்து எல்லாராகவும் எல்லாரிலும் இருக்கிறார்.

ஒரே புதிய மனிதனின் நடைமுறை இருந்தலுக்காக, பழைய மனிதனின் மொத்த நபரும் அகற்றப்பட வேண்டும். அதன்பின் நாம் நம் புதிய நபரான கிறிஸ்துவால் வாழ வேண்டும். நம் அன்றாட வாழ்க்கையை, விசேஷமாக முடிவெடுப்பதில், நாம் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொண்டு வாழும்போது, நம் வாழ்க்கை புதிய மனிதனின் வாழ்க்கையாக இருக்கும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை


சத்தியத்தினுடைய வெளிப்பாடு

நாம் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொள்ள வேண்டும்; இதுவே கிறிஸ்துவை அனுபவிக்கும் அதிஉயர்ந்ததும் ஐசுவரியமுமான அனுபவமாகும். நம் ஜீவனாக மட்டுமல்லாமல் நம் நபராகவும் தம்மையே நமக்குள் அடித்துருவாக்குவதே தம் பொருளாட்சியில் தேவனுடைய நோக்கம்.

ஒரே புதிய மனிதனாக சபைக்காக நாம் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரே புதிய மனிதனின் நடைமுறை இருத்தலுக்காக, பழைய மனிதனின் மொத்த நபரும் அகற்றப்பட வேண்டும், அதன்பின் நாம் நம் புதிய நபரான கிறிஸ்துவால் வாழ வேண்டும்.

 

ஜீவனின் அனுபவம்

கிறிஸ்து நம் இருதயத்தில் தம் வீட்டை அமைக்க அவரை அனுமதிப்பதன்மூலம் நாம் அவரை நம் நபராக எடுத்துக்கொள்கிறோம். கிறிஸ்து நம் இருதயத்தில் தம் வீட்டை அமைக்கும்போது, நாம் போதிய விதத்தில் அவரை நம் நபராக எடுத்துக்கொள்வோம்; அவரது மனம் நம் மனமாக ஆகும். அவரது உணர்ச்சி நம் உணர்ச்சியாக ஆகும் அவரது சித்தம் நம் சித்தமாக ஆகும்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

நாம் நம் முந்தைய நபரான நம் ஆத்துமாவை மறுதலிக்க வேண்டும். நம் ஆவியிலுள்ள கிறிஸ்துவை நம் புதிய நபராக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாம் நம் உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்படுவதற்கு, நாம் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிட்டு, நம் பாவங்களை அறிக்கையிட்டு, நம் தோல்விகளை நமக்கு மன்னித்து, அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தால் நம்மைச் சுத்திகரிக்கும்படி அவரிடம் கேட்க வேண்டும்


நம் அன்றாட வாழ்க்கையை, விசேஷமாக முடிவெடுப்பதில், நாம் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொண்டு வாழும்போது, நம் வாழ்க்கை புதிய மனிதனின் வாழ்க்கையாக இருக்கும்

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 கர்த்தர் பிதாவைத் தம் நபராக எடுத்துக்கொண்டு பிதாவின் நிமித்தம் வாழ்ந்தது போல, நாமும் கர்த்தரை நம் நபராக எடுத்துக்கொண்டு அவர் நிமித்தம் வாழ வேண்டும்.
(யோவான் 5:13, 19)

(காத்தர் பூமியில் இருந்தபோது, அவர் தம் சொந்த நபரைக் கொண்டு வாழவில்லை, மாறாக எப்போதும் பிதாவைத் தம் நபராக எடுத்துக்கொண்டார் என்பதை வேதத்தோடு எடுத்துரையுங்கள்)

த2 மெய்யான ஆவிக்குரியத்தன்மை, ஜீவக்கிற நபராகிய, கிறிஸ்துவே (யோவான் 6:57; 14:10)

(நாம் ஆவிக்குரியவர்களாக இருப்பதற்கு, நாம் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 மனிதனின் சிருஷ்டிக்கப்பட்ட நிலையில் அவனுக்கு இரண்டு உறுப்புகள் உள்ளன: ஒரு சரீரம் மற்றும் ஒரு ஆவி. (ஆதி. 2:7; ரோ. 8:4)

(மனிதனின் சிருஷ்டிக்கப்பட்ட நிலையில் அவனுக்கு தன் புறம்பான உறுப்பாக ஒரு சரீரமும், தன் உள்ளான உறுப்பாக ஓர் ஆவியும், தன் நபராக ஓர் ஆத்துமாவும் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நம் ஆத்துமாவால் வாழக்கூடாது, மாறாக நம் ஆவியால் வாழ வேண்டும் (2 கொரி. 4:16; 1 பேது. 3:4)

(இரட்சிக்கப்பட்ட பிறகு, நம்மில் இரண்டு மனிதர்கள் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 கிறிஸ்து நம் இருதயங்களில் தம் வீட்டை அமைக்க வாஞ்சிக்கிறார் (எபே. 3:17; பிலி. 2:5)

(அவர் நம் ஆவியில் இருந்தாலும்கூட, ஏன் அவரால் நம் இருதயத்தில் தம் வீட்டை உருவாக்க முடியாது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்து நம்மில் குடியேற அனுமதிப்பதற்கு நாம் நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியாகிய உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்பட வேண்டும் (எபே. 3:17; 1 யோவான் 1:7)

(நாம் நம் உள்ளான மனிதனுக்குள்ளாக பலப்படுத்தப்படுவதற்கு, நாம் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிட்டு, நம் பாவங்களை அறிக்கையிட்டு, நம் தோல்விகளை நமக்கு மன்னித்து, அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தால் நம்மைச் சுத்திகரிக்கும்படி அவரிடம் கேட்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 நம் அன்றாட நடையில் உள்ள எல்லாக் காரியங்களிலும், அது பெரியதோ, சிறியதோ, நாம் கிறிஸ்துவிடம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் (கொலோ.3:4)

(நாம் நம் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவை நம் நபராக எடுத்துக் கொண்டு எவ்வாறு பயிற்சி செய்ய முடியும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

த2 சபை கிறிஸ்துவின் சரீரம் மட்டுமல்ல, புதிய மனிதனாகவும் இருக்கிறது. (கொலோ. 3:10-11)

(புதிய மனிதனாகிய சபை கிறிஸ்துவை தம் ஜீவனாக மட்டுமல்லாமல், தம் நபராகவும் தேவை என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 சரீரம் ஜீவனைப் பற்றிய ஒரு காரியம், புதிய மனிதன் நபரைப் பற்றிய ஒரு காரியம் (எபே. 4:24)

(சரீரம் நகர்வதற்காக இருக்கிறது மற்றும் புதிய மனிதன் வாழ்வதற்காக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நம் நகர்வில் கிறிஸ்துவை நம் ஜீவனாகவும் நம் வாழ்வில் கிறிஸ்துவை நம் நபராகவும் நாம் எடுத்துக் கொள்கிறோம் (எபே. 4:24)

(புதிய மனிதனின் வாழ்க்கைக்கு இரண்டு குணாதிசயங்கள் உள்ளன; ஒன்று நீதி மற்றொன்று பரிசுத்தம் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 தேவனுடைய குறிக்கோள், தம்மை வெளிக்காட்டுவதற்கும் தம் ஆட்சியுரிமையைப் பயிற்சிசெய்வதற்கும் ஒரு மனிதனைப் பெறுவதே ஆகும் (எபே. 4:24, 13)

(பழைய மனிதன் தேவனைத் தோல்வியுறச் செய்துவிட்டான், ஆனால் தேவன் பழைய மனினை இடமாற்றம் செய்ய ஒரு புதிய மனிதனை எழுப்பியிருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 இன்று கர்த்தர் பூமியில் ஒரே புதிய மனிதனை ஆதாயப்படுத்த விரும்புகிறார் (எபே. 4:23-24)

(இன்று பூமியில் கர்த்தர் எவ்வாறு ஒரு புதிய மனிதனைக் கொண்டிருக்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)