Tamil – Prophesying Outline ITEROS23 Week 02

மெய்யான சபை வாழ்க்கைக்காக சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவை அறிதலும், அனுபவமாக்குதலும், வாழ்தலும்

செய்தி 2

முப்பகுதி மனிதனுடன் மூவொரு தேவனின் கலந்திணைதலின் உச்சநிலை முழுநிறைவேற்றமாக மாபெரும் போஜன பலியாகப் புதிய எருசலேமில் முழுநிறைவடையும் போஜன-பலி கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும், போஜன-பலி சபை வாழ்க்கை வாழவும் போஜன பலியின் நிஜமாகக் கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்தல்.

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

லேவி: 2:1 ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக, அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,

2:11 நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.

யோவான் 6.57. ஜீவிக்கிற பிதா என்னை அனுப்பியிருக்கிறார், நான் பிதாவின் நிமித்தம் ஜீவிக்கிறேன், அதுபோலவே என்னைப் புசிக்கிறவனும் என் நிமித்தம் ஜீவிப்பான்

 

பசி தூண்டும் வார்த்தை.

எவ்வாறு போஜனபலி கிறிஸ்துவ வாழ்க்கை மற்றும் போஜனபலி சபை வாழ்க்கையை நாம் வாழ முடியும்

போஜன-பலி கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும் போஜன -பலி சபை வாழ்க்கை வாழவும் போஜன-பலியின் நிஜமாக கிறிஸ்துவை அனுபவித்தல்; கிறிஸ்து பூமியில் வாழ்ந்த வாழ்க்கை புளிப்பும் தேனும் இல்லாத ஒரு வாழ்க்கையாக இருந்தது, இன்று நாம் அதே வகையான வாழ்க்கையை வாழ வேண்டும். நாம் இந்த நான்கு நேர்மறையான மூலக்கூறுகளையும் மெல்லிய மாவு, எண்ணெய், தூபவர்க்கம், உப்பு ஆகியவற்றைச பெற்றிருக்க வேண்டும் ஆனால் இந்த இரண்டு எதிர்மறையான மூலக்கூறுகளையும் புளிப்பு மற்றும் தேன்- பெற்றிருக்கக்கூடாது இதுவே நம் சூழ்நிலையாக இருந்தால், நாம், புளிப்பு மற்றும் தேன் இல்லாமல், கிறிஸ்துவின் மரணத்தின்மூலம் உயிர்த்தெழுதலில் தெய்வீகத்தைக் கொண்டு எண்ணெய்பூசப்பட்ட மனுஷீகத்தைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு பலியாகிய, ஒரு நேர்த்தியான போஜன பலியாக இருப்போம். இந்த வகையான வாழ்க்கை தேவனைத் திருப்திப்படுத்தவும், தேவனைச் சேவிக்கிறவர்களாகிய நம்மைப் போஷிப்பதற்குமான உணவாகும்.


ஆவிக்குரிய பாரம்

தெய்வீகமான ரீதியில் செறிவூட்டப்பட்ட தம் மனுஷீகத்தில் கிறிஸ்து நம் மூலம் பூமியில் மீண்டும் வாழக்கூடுமாறு. நாம் நம் ஆசாரிய உணவுமுறைக்காகக் கிறிஸ்துவை அனுதினமும் நம் போஜன பலியாக அனுபவித்துமகிழ வேண்டும்; நாம் கிறிஸ்துவைப் போஜனபலியாக புசித்தால், நாம் எதைப் புசிக்கிறோமோ அதுவாகவே ஆகி, அதனாலேயே வாழ்வோம்.

ஒவ்வொரு உள்ளூர் சபையும் தேவனைத் திருப்திப்படுத்தவும் பரிசுத்தவான்களுக்கு நாளுக்கு நாள் முழு நிரப்பீடளிக்கவும் ஒரு போஜன பலியாக இருக்க வேண்டும் என்று தேவன் வாஞ்சிக்கிறார்; நாம் நம் சபை வாழ்க்கையைப் புசிப்போம் என்பதே இதன் அர்த்தம், ஏனெனில் சபை வாழ்க்கையே நம் அனுதின நிரப்பீடாக இருக்கும்.


தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

போஜனபலி தம் தேவ-மனித வாழ்க்கையில் கிறிஸ்துவை மாதிரியாகக் காட்டுகிறது.

போஜன பலி, கிறிஸ்துவின் தேவ-மனித வாழ்க்கையின் ஒரு நகலாக நம் கிறிஸ்தவ வாழ்க்கையை மாதிரியாகக் காட்டுகிறது.

கிறிஸ்துவின் வாழ்க்கையும், நம் தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையும் ஒரு முழுமொத்தத்தை–அது ஒரு கூட்டு போஜன பலியாகிய சபை வாழ்க்கையை விளைவிக்கிறது

முப்பகுதி மனிதனுடன் மூவொரு தேவனின் கலந்திணைதலாகப் புதிய எருசலேம் ஒரு மாபெரும் போஜன பலியாக, முப்பகுதி மனிதனுடன் மூவொரு தேவனின் கலந்திணைதலின் உச்சநிலை முழுநிறைவே0ற்றமாக இருக்கும்.


ஜீவனின் அனுபவம்

வார்த்தையில் திண்மையாக்கப்பட்டுள்ள ஆவியானவரைத் தொட நம் ஆவியைப் பயிற்சி செய்வதன்மூலம் நாம் இயேசுவின் மனித ஜீவனையும் வாழ்க்கையையும் புசிக்கிறோம், நாம் இயேசுவைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறோம், இயேசுவின் மனித வாழ்க்கை, தெய்வீகமான ரீதியில் செறிவூப்பட்ட அவருடைய மனுஷீகம் நம் மனித வாழ்க்கையாகிறது

அத்தகைய வாழ்க்கை பரிசுத்த ஆவியுடன் கலந்திணைந்த மனுஷீகத்தின், தன்மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பெற்ற மனுஷீகத்தின் வாழ்க்கை, தன்னில் உப்பும் தூபவர்க்கமும் உள்ள ஒரு வாழ்க்கை, ஆனால் தன்னில் புளிப்போ தேனோ இல்லாத வாழ்க்கை; தனிப்பட்ட கிறிஸ்து மற்றும் சபை வாழ்க்கையாகிய கூட்டுக் கிறிஸ்து ஆகிய,போஜன பலியின் இரண்டு வடிவங்களும் தேவனின் திருப்திக்காகவும், நம் போஷாக்குக்குமான உணவாக இருக்கின்றன.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

தெய்வீகமான ரீதியில் செறிவூட்டப்பட்ட தம் மனுஷீகத்தில் கிறிஸ்து நம் மூலம் பூமியில் மீண்டும் வாழக்கூடுமாறு, நாம் நம் ஆசாரிய உணவுமுறைக்காகக் கிறிஸ்துவை அனுதினமும் நம் போஜன பலியாக அனுபவித்துமகிழ வேண்டும்; நாம் கிறிஸ்துவைப் போஜனபலியாக புசித்தால், நாம் எதைப் புசிக்கிறோமோ அதுவாகவே ஆகி, அதனாலேயே வாழ்வோம்.

போஜனபலி சபை வாழ்க்கையான சரீர வாழ்க்கையில் இழைத்திணைக்கப்படுவதற்கு, நாம் சிலுவையினூடாகச் செல்லவேண்டும், கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒருவருக்கொருவர் கிறிஸ்துவைப் பகிர்ந்தளித்து எல்லாவற்றையும் ஆவியானவரால் செய்ய வேண்டும்.

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 மெல்லிய மாவு போஜனபலியின் முக்கிய மூலக்கூறு.(லேவி. 2:1; யோவான் 18:38)

(இந்த மெல்லிய மாவு கிறிஸ்துவின் மனுஷீகத்தை அடையாளப்படுத்துகிறது.அது மென்மையானது, பூரணமானது, கனிவானது, சமநிலையானது, அது எந்த மிகையோ பற்றாக்குறையோ இல்லாமல் எல்லா வகையிலும் சரியானது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 போஜனபலியில் எண்ணெயுடன் மெல்லிய மாவின் கலந்திணைதல், அவருடைய மனுஷீகம் பரிசுத்த ஆவியுடன் கலந்திணைந்தது என்பதை அடையாளப்படுத்துகிறது (லேவி. 2:4-5; லூக்கா. 4:1)

(கிறிஸ்து, ஒரு மூன்றாம் சுபாவம் உற்பத்திசெய்யப்படாமல், தெய்வீக சுபாவத்தையும் மனித சுபாவத்தையும் வெவ்வேறாகக் கொண்டிருக்கிற முழுமையான தேவனும், பூரணமான மனிதனுமாக இருக்கிறார் என்பதை எடுத்து உரையுங்கள்)

 

நாள் 2

த1 போஜனபலியில் உள்ள தூபவர்க்கம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் அவரது நறுமணத்தை அடையாளப்படுத்துகிறது(மத்.11:20-30; லூக்கா 1:21)

(மெல்லிய மாவின்மீது தூபவர்க்கம் போடப்படுவது, கிறிஸ்துவின் மனுஷீகம் அவரது பாடுகளிலிருந்து வெளிப்படும் உயிர்த்தெழுதலின் வாசனை ஏந்தியிருக்கிறது என்பதை அடையாளப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 போஜனபலியில் புளித்தமாவோ தேனோ இருக்கக்கூடாது லேவி. 2:11; லூக்கா 12:1)

(எந்த நான்கு மூலக்கூறுகளை போஜன பலி உள்ளடக்கிறது. மேலும் குறிப்பாக எந்த இரண்டு மூலக்கூறுகளை விலக்குகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 கிறிஸ்து வாழ்ந்த அதே மாதிரியான வாழ்க்கை வாழ்தல் (யோவான் 6:57; பிலி. 1:21)

(நம் கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ்துவினுடைய வாழ்க்கையின் ஒரு நகலாக, ஒரு ஜெராக்ஸ் பிரதியாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துஉரையுங்கள்)

த2 போஜன பலி பிரதானமாக நமக்காக இருக்கிறது (லேவி. 2:3)

(ஓர் ஞாபகக்குறியாக உள்ள ஒரு கைப்பிடி மட்டுமே தேவனுக்காக உள்ளது; பிரதான பகுதியாகிய மீதமுள்ள அனைத்தும் ஆசாரியர்களுக்காக உள்ளது என்பதை எடுத்துரைங்கள்)

 

நாள் 4

த1 போஜன பலி, எண்ணெயால் கலந்திணைக்கப்பட்ட மாவு வடிவில் இருக்கலாம், அல்லது அது ஓர் அதிரசத்தின் வடிவில் இருக்கலாம்.(1 கொரி. 12:12; 1:17)

(மாவு போஜன பலி மற்றும் அதிரச போஜனபலி எவற்றை அடையாளப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 சபை வாழ்க்கைக்கு நாம் சாட்சாத்து மனிதனாக இருக்க வேண்டும் (1 கொரி. 12:12; 1:17)

(இந்த மனுஷீகம் பரிசுத்த ஆவியிலிருந்து பிரிந்திருக்கக்கூடாது. மாறாக, அது, பரிசுத்த ஆவியுடன் கலந்திணைக்கப்பட்டதும், அதன்மீது பொழிந்தருளப்பட்ட பரிசுத்த ஆவியைக் கொண்டதுமான ஒரு மனுஷீகமாகவும் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைங்கள்)

 

நாள் 5

த1 1 கொரிந்தியர் சபை வாழ்க்கை போஜனபலியை முன்வைக்கிறது (1).1 கொரி. 16:13; 2:4)

(1 கொரிந்தியர் புத்தகத்தில் மெய்யான மெல்லிய மாவை நாம் பார்க்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 1 கொரிந்தியர் புத்தகம் சபை வாழ்க்கை போஜனபலியை முன்வைக்கிறது (2). (1 கொரி. 15:58; 2:2)

(1 கொரிந்தியரில் நமக்கு தூபம் வர்க்கமும் அதோடு கூட உப்பும் உள்ளது, அது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் சிலுவையில் அறைந்த கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 புதிய எருசலேம், மூவொரு தேவன் மனிதனுடன் கலந்திணைவதின் உச்சநிலை முழுநிறைவேற்றமாக இருக்கும்.(லேவி2:4; 2 கொரி.13:14)

(முழு புதிய எருசலேமும் எண்ணெயுடன் கலந்திணைக்கப்பட்ட மெல்லியமாவாக இருக்கும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பன்னிரண்டு என்பது, தேவனின் நிர்வாகத்தில் முற்றிலுமான பரிபூரணம் மற்றும் நித்திய முழுமையின் எண் (வெளி. 21:12, 14)

(ஏன் பன்னிரண்டுபுதிய எருசலேமின் எண்ணாக இருக்கிறது?)