சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 9
சபையின் செயல்பாடு (2)மாம்சத்தில் தேவனுடைய கூட்டு வெளியரங்கம்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
1 தீமோ 3:16 மேலும் ஒத்துக்கொள்ளப்படுகிறபடியே, தேவத்தன்மையின் பரமஇரகசியம் மகா பெரியது; அவர், மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்பட்டார், ஆவியானவரில் நீதிமான் என்று தீர்க்கப்பட்டார், தூதர்களால் காணப்பட்டார், தேசங்களிடையே பிரசங்கிக்கப்பட்டார், உலகத்தில் விசுவாசிக்கப்பட்டார், மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
யோவா. 1:14 வார்த்தையானவர் மாம்சமாகி..நம் மத்தியில் வாசஸ்தலமிட்டார் (நாங்கள் அவருடைய மகிமையைத் தரிசித்தோம், அந்த மகிமை, பிதாவிடமிருந்து வந்த ஒரே பேறானவருடைய மகிமையைப்போலவே இருந்தது)
பசிதூண்டும் வார்த்தை
மாம்சமாகுதலின் கோட்பாடு என்ன?
மனிதனைத் தம்முடன் ஒன்றாக்கும்படி தேவன் மனிதனுக்குள் பிரவேசித்து, தம்மையே மனிதனுடன் கலந்திணைக்கிறார் என்பதே மாம்சமாகுதலின் கோட்பாடு; இவ்வாறு, தேவன் மனிதனில் இருக்கிறார், மனிதன் தேவனில் இருக்கிறான். தெய்வீகம் மனுஷீகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, மனுஷீகத்துடன் சேர்ந்து வேலைசெய்கிறது என்பதே மாம்சமாகுதலின் கோட்பாட்டின் அர்த்தம். நமக்கும் தேவனுக்கும் ஒரே ஜீவனும் ஒரே வாழ்க்கையும் இருக்குமாறு கிறிஸ்துவிலும் கிறிஸ்துவின் மூலமும் தெய்வீக ஜீவனும் சுபாவமும் மனித ஜீவனோடும் சுபாவத்தோடும் கலந்திணைக்கப்படுகின்றன என்பதே புதிய ஏற்பாட்டு மாம்சமாகுதலின் கோட்பாடு.
ஆவிக்குரிய பாரம்
தேவனுடைய வீடும் கிறிஸ்துவின் சரீரமுமாகிய சபையில், தேவன் மாம்சத்தில் பெரிதாக்கப்பட்ட கூட்டு வெளியாக்கமாக வெளியரங்கமாக்கப்படுகிறார்.
தேவத்தன்மையின் மாபெரும் பரமஇரகசியமானது மாம்சத்தில் தேவனுடைய வெளியரங்கத்திற்காக ஒரு கூட்டு தேவ- மனிதனை உற்பத்திசெய்ய தேவத்துவத்தில் அல்ல, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதன் தேவனாகுமாறு தேவன் மனிதனாவதாகும். உச்சநிலையாக, புதிய வானம் புதிய பூமியில், பதனிடப்பட்டு முழு நிறைவடைந்த மூவொரு தேவனின் முழுநிறைவடைந்த கூட்டு வெளியாக்கமாக தேவன் புதிய எருசலேமில் வெளியரங்கமாக்கப்படுவார்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
தேவனுடைய வெளியரங்கம் முதலாவது மாம்சத்தில் தனிநபரின் வெளியாக்கமாகக் கிறிஸ்துவில் இருந்தது. குமாரனாகிய தேவன் மட்டுமல்லாமல், முழு தேவனும் மாம்சமானார்; எனவே, கிறிஸ்து தம் மாம்சமாகுதலில் மாம்சத்தில் வெளியரங்கமான முழு தேவனாக இருந்தார்.
ஒன்று தீமோத்தேயு 3:15-16, தலையாகக் கிறிஸ்துதாமே மாம்சத்தில் தேவனுடைய வெளியரங்கம் என்பதை மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் சரீரமாகவும் தேவனுடைய வீடாகவும் சபையும்கூட மாம்சத்தில் தேவனுடைய வெளியரங்கம் – தேவத்தன்மையின் பரமஇரகசியம் – என்று சுட்டிக்காட்டுகிறது.
ஜீவனின் அனுபவம்
சபை மாம்சத்தில் தேவனின் வெளியரங்கமாக இருப்பதற்கு, நாம் நம் சுயத்தால் வாழாமல், தேவனால் வாழ வேண்டும். நாம் தேவனால் வாழ்ந்து, தேவனை நம் வாழ்க்கையாகவும், நம் நபராகவும் எடுத்துக்கொண்டால், நாம் ஒன்றாகக் கூடிவரும்போது, அது மாம்சத்தில் தேவனின் வெளியரங்கமாக இருக்கும்.
சபை நேர்த்தியான விதத்தில் ஒன்றாக கூடிவரும்போதெல்லாம், தேவனுடைய பிரசன்னம் அறியப்படுகிறது. நாம் இன்னும் மாம்சமாக இருக்கிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் நம் ஆவியில் வாழ்கிற தேவன் நம் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்படுவார், வெளிக்காட்டப்படுவார்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
தேவத்தன்மைக்கேதுவாக நம்மையே பயிற்றுவிப்பதென்றால், தேவன் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்பட்டார் என்ற தேவத்தன்மையின் பரமஇரகசியத்தை நாம் வெளிக்காட்டுமாறு நம் ஆவியைப் பயிற்சிசெய்வதாகும். எல்லாவற்றிலும் தேவத்தன்மைக்கேதுவாக நம்மை நாம் பயிற்சிசெய்ய வேண்டும். பேசுவதற்கு முன்பு நம் ஆவியை நாம் தேவ தன்மைக்கேதுவாக பயிற்சி செய்ய வேண்டும். எனவே நாம் வாழ்வது, நடப்பது, நம் அன்றாட வாழ்க்கையை கொண்டிருப்பது நம் முழு ஆள்தத்துவத்தையும் நம் ஆவியின்படி கொண்டிருக்க வேண்டும்
“கர்த்தாவே, நான் பலவீனமாக இருக்கிறேன், ஆனால் நீர் எனக்குள் இருக்கிறீர். கர்த்தாவே, எனக்கு உதவிசெய்யும், என்னைப் பலப்படுத்தும், என்னுடன் நில்லும், எல்லாவற்றிலும் தேவத்தன்மைக்கேதுவாக என்னையே பயிற்சிசெய்ய எனக்கு வல்லமையூட்டும்”.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 ஒத்துக்கொள்ளப்படுகிறபடியே, தேவத்தன்மையின் பரமஇரகசியம் மகா பெரியது ( 1 தீமோ. 3:16)
(“தேவத்தன்மை” என்ற வார்த்தையின் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்.)
த2 தேவனுடைய வெளியரங்கம் முதலாவது மாம்சத்தில் தனிநபரின் வெளியாக்கமாகக் கிறிஸ்துவில் இருந்தது (1 தீமோ. 3:16; கொலோ. 2:9)
(கிறிஸ்து மாம்சத்தில் தேவனின் வெளியாக்கமாக என்பதின் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்.)
நாள் 2
த1 தேவத்துவத்தின் நிறைவு சரீரபிரகாரமாக அவருக்குள் குடியிருக்கிறது (கொலோ. 2:9)
(“கிறிஸ்து தேவத்துவத்தின் நிறைவின் ஊனுருவாக இருக்கிறார்” என்பதின் உள்ளார்ந்த உட்கருத்தை எடுத்துரையுங்கள்)
த2 தேவன் மாம்சத்தில் வெளியரங்கமாக்கப்படுதல் என்பது தேவன் ஒரு மனித வாழ்க்கையை வாழ்வதாகும். (மத். 14:14)
(கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்தபோது, அவரது நற்பண்புகள் மாம்சத்தில் தேவனின் வெளியரங்கமாக இருந்தது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 தேவத்தன்மை என்பது தேவன் வெளிக்காட்டப்படுவதைக் குறிக்கிறது
(1 தீமோ. 3:16; 1 கொரி. 14:25)
(சபை வாழ்க்கையில் நாம் கிறிஸ்துவை வெளியாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவத்தன்மையின் பரமஇரகசியம் என்பது வெறும் ஒரு காரியம் மட்டுமல்ல, அது ஒரு நபர் (1 தீமோ. 3:16; எபே. 1:23)
(இந்த நபர் சரீரமாகிய சபைக்கு தலையாகிய கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 “மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்ற சொற்றொடரோடு பவுல் 1 தீமோத்தேயு 3:16ஐ முடிக்கிறான். (1 தீமோத்தேயு 3:16)
(பிரசங்கிக்கப்படுதலுக்குப் பிறகு மட்டுமல்ல, உலகத்தில் விசுவாசிக்கப்படுதலுக்கு பிறகும் பவுல் ஏன் இதைக் கடைசியாகக் குறிப்பிடுகிறான் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சபை என்பது மீட்கப்பட்டு, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, தேவனால் வாழ்கிற ஒரு கூட்ட மக்கள் (எபே. 2:19)
(சபை மாம்சத்தில் தேவனின் வெளியரங்கமாக இருப்பதற்கு, நாம் நம் சுயத்தால் வாழாமல், தேவனால் வாழ வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 5
த1 கிறிஸ்துவும் சபையும் மாம்சத்தில் தேவனை வெளிக்காட்டும் தேவத்தன்மையின் பரமஇரகசியம் (1 தீமோ. 3:16; எபே. 5:32)
(மாம்சமாகுதலின் கோட்பாடு என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய வெளியரங்கத்திற்கான திறவுகோல் நமக்குள் இருக்கும் நம் ஆவியே
(1 கொரி. 6:17; 1 தீமோ. 4:7)
(தேவத்தன்மைக்கு ஏதுவாக நம்மை பயிற்சிசெய்வதென்றால், நம் ஆவியைப் பயிற்சிசெய்வதாகும் எனவே, தெய்வத்தன்மையின் பரமஇரகசியத்தை வெளிக்காட்ட முடியும் )
நாள் 6
த1 தேவத்தன்மைக்கேதுவாகப் பயிற்சிசெய்வது எல்லாவற்றிற்கும் இலாபகரமானது. (1 தீமோ. 4:7-8)
(வார்த்தையை வாசித்து, ஜெபிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய மகிழ்ச்சியைப் பெறுவதைப் பயிற்சிசெய்வது ஆவிக்குரியரீதியிலும், பௌதிகரீதியிலும் ஆரோக்கியமாக இருக்க நமக்கு உதவும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்து, மாம்சத்தில் தேவனின் வெளியரங்கமாக இருக்கிறார், சபையும் அவ்வாறே இருக்கிறது (1 கொரி. 14:23-25)
(நாம் ஆவியானவரில் ஒன்றாகக் கூடிவரும்போது, தேவன் நம் மத்தியில் வெளியரங்கமாக்கப்படுகிறார்; இதுவே மாம்சத்தில் தேவனின் வெளியரங்கமாகுதல் என்பதை எடுத்துரையுங்கள்)