சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 8
சபையின் செயல்பாடு (1)
ஜீவிக்கும் தேவனுடைய வீடு மற்றும் சத்தியத் தூணும் அடித்தளமும்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
1 தீமோ. 3:15 ஆனால் தாமதிப்பேனாகில், ஒருவன் தேவனுடைய வீட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறியும்படி எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவிக்கும் தேவனுடைய சபை, அது சத்தியத் தூணும் அடித்தளமுமாயிருக்கிறது.
எபே. 2:21 அவரில் கட்டிடம் முழுவதும், ஒன்றாகப் பொருத்தப்பட்டு, கர்த்தரில் பரிசுத்த ஆலயமாக வளர்ந்துவருகிறது.
1 தீமோ. 2.3 எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற பூரண அறிவை வந்தடையவும் வாஞ்சிக்கிற.
பசிதூண்டும் வார்த்தை
1 தீமோத்தேயுவில் விளக்கப்பட்டுள்ள சபை என்ன?
தேவனுடைய வீடு என்பது சபைக்கு அடைமொழியாக இருக்கிறது, சத்தியத் தூணும் அடித்தளமும் என்பதும் சபைக்கு அடைமொழி. தேவனுடைய சபை, ஜீவிக்கும் தேவனுடைய வீடாகும். தேவன் ஜீவிக்கிறதால், சபையும் அவரிலும், அவராலும், அவரைக்கொண்டும் ஜீவிக்கிறது. சபை சத்தியத்தின் ஆதரிக்கும் தூணும், தாங்கிப்பிடிக்கும் அடித்தளமுமாயிருக்கிறது. சத்தியத்தைச் சுமக்கிறத் தூணாகவும், தூணைத் தாங்கிப்பிடிக்கிற அடித்தளமாகவும் சபை, தேவனுடைய பரமஇரகசியமான கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் பரமஇரகசியமான சபையையும் பற்றிய நிஜத்தை, அதாவது, சத்தியத்தைச் சாட்சிபகர்கிறது.
ஆவிக்குரிய பாரம்
தம் சபை தம்மைச் சத்தியமாக அறியவும், தம்மை ஜீவனாகப் பெற்று அனுபவித்துமகிழவும் கர்த்தர் விரும்புகிறார். சபையின் உள்ளடக்கம், சத்தியமாகவும் ஜீவனாகவும் நம்மில் கிறிஸ்துவின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். சத்தியத்தின் தரம், கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் உள்ள எல்லா சபைகளிலும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு சகோரனும் சகோதரியும் ஜீவனாலும் சத்தியத்தாலும் நிறைந்திருக்கும்போது, ஜீவிக்கும் தேவனுடைய வீடாக, சத்தியத் தூணும் அடித்தளமுமாக சபை பலமாயிருக்கும்; இதுவே இன்று கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் தேவை.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
தேவனுடைய வீடு என்பது சபைக்கு அடைமொழியாக இருக்கிறது. சத்தியத் தூணும் அடித்தளமும் என்பதும் சபைக்கு அடைமொழியாக இருக்கிறது; தேவனுடைய வீடும், சத்தியத் தூணும் அடித்தளமும் ஆகியவை சபை என்னவாக இருக்கிறது என்பதை விவரிக்கின்றன.
சபை தேவனுடைய வீடு. தேவனுடைய சபை, ஜீவிக்கும் தேவனுடைய வீடாகும்.
தம் சபை தம்மைச் சத்தியமாக அறியவும், தம்மை ஜீவனாகப் பெற்று அனுபவித்துமகிழவும் கர்த்தர் விரும்புகிறார்.
சபை சத்தியத்தின் ஆதரிக்கும் தூணும், தாங்கிப்பிடிக்கும் அடித்தளமுமாயிருக்கிறது.
ஜீவனின் அனுபவம்
சபையில் வாழ்கிறவரான, ஜீவிக்கும் தேவன் வெறுமனே புறம்சார்ந்தவராக அல்லாமல், சபைக்கு அகம்சார்ந்தவராக இருக்க வேண்டும். தேவன் ஜீவிக்கிறதால், சபையும் அவரிலும், அவராலும், அவரைக்கொண்டும் ஜீவிக்கிறது. ஜீவிக்கும் தேவனும், ஜீவிக்கும் சபையும் சேர்ந்து ஜீவிக்கின்றனர். நகர்கின்றனர், வேலைசெய்கின்றனர். ஜீவிக்கும் சபை ஜீவிக்கும் தேவனுடைய வீடாக இருக்கிறது. ஆகவே, நம் கூட்டங்களிலும், சேவையிலும், ஊழியத்திலும், ஜீவனுள்ள தேவன் நம்மிடையே வாழ்கிறார், நகர்கிறார், பேசுகிறார், செயல்படுகிறார் என்ற தோற்றத்தை மக்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
சபை சத்தியத்திற்கு தூண் மற்றும் ஆதரவுமாய் இருக்கிறது என்பது சபையில் உள்ள அனைத்து அவயவங்களும் சத்தியத்தை அறிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. சத்தியத்தை அறிவதற்கு நாம் தீர்மானம் எடுக்க வேண்டும்.
நிஜத்தைப் பார்க்க, நாம் முதலில் வேதாகமத்தின் உபதேசங்களைக் கொண்டு போஷிக்கப்படவும், பரிச்சயமடையவும் வார்த்தையில் நேரம் செலவிட வேண்டும். பிரகாசிப்பித்தலுக்கான அடிப்படை, உபதேசங்களைப் பற்றிய நம் அறிவே. பின்னர் நாம் பிரகாசிப்பித்தலுக்காக கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, அவரில் அனுதினமும் நடக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 கொரிந்துவிலுள்ள தேவனுடைய சபை (1 கொரி.1:2)
(“கொரிந்துவிலுள்ள தேவனுடைய சபை” என்பதின் ஆவிக்குரிய உட்கருத்தை எடுத்துரையுங்கள்.)
த2 சபை தேவனுடைய வீடாக இருக்கிறது (1 பேது. 2:5)
(ஒய்கோஸ் என்ற வார்த்தைக்கு, வீடு, வாசஸ்தலம் என்ற அர்த்தம் மட்டுமல்ல, வீட்டார் என்ற அர்த்தமும் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 தேவனின் புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின்படி தேவனுடைய வீடு அவரது குடும்பமாக இருக்கிறது (எபி. 3:6)
(பழைய ஏற்பாட்டுக் காலங்களில் தேவனுடைய வீடு என்பது இஸ்ரயேலின் வீடாகும். இன்று தேவனுடைய வீடு சபை ஆகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 சபைக்கு ஓர் இரு மடங்கு செயல்பாடு உள்ளது (1 தீமோ. 3:15; 1 பேது. 4:17)
(கிறிஸ்துவுக்கு சபை சரீரமாக இருக்கிறது; தேவனுக்கு சபை வீடாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள் ).
நாள் 3
த1 தேவனுடைய வீடாக, சபை தேவனுடைய குடியிருப்பாகவும் இருக்கிறது (எபே. 2:21; 1 பேது. 2:5)
(பூமியில் தேவனின் குடியிருப்பாக இருக்கும் சபை, தேவன் தம் இளைப்பாறுதலை பெறக் கூடியதும், தம் நம்பிக்கையை வைக்கக்கூடியதுமான இடமாகும் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 தேவனின் குடியிருப்பு விசுவாசிகளின் ஆவியில் உள்ளது (எபே. 2:22; 1 பேது. 2:5)
(தேவனுடைய குடியிருப்பு நம் இருதயத்திலோ, நம் மனதிலோ அல்ல, நம் ஆவியில் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 சபையானது எந்தத் துர்உபதேசத்திற்கும் எதிராக என்றென்றும் நிலைநிற்கிற தேவனுடைய உறுதியான அஸ்திபாரமாக இருக்கிறது (2 தீமோ. 2:19)
(இங்குள்ள அஸ்திபாரம், சபையின் அஸ்திபாரமாகிய கிறிஸ்துவைக் குறிக்கவில்லை, மாறாக, சத்தியத்தின் அஸ்திபாரமாகிய சபையைக் குறிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தருடைய மீட்டுத்திருப்புகளிலுள்ள நான்கு தூண்கள் (யோவான் 14:6; 17:17)
(கர்த்தருடைய மீட்டுத் திருப்புதலின் மீது பிரதானமாக நிறுவப்பட்டுள்ள நான்கு தூண்களை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 கிறிஸ்துவும் சபையும். அதாவது தலையும் சரீரமுமே, தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியினுடைய நிஜத்தின் உள்ளடக்கங்கள். (கொரி. 2:2; எபே.3:4)
( “சத்தியத்திற்கு தூண் மற்றும் ஆதாரமான”சபையின் உள்ளார்ந்த உட்கருத்தை எடுத்துரையுங்கள்)
த2 சத்தியம் என்பது வெறுமனே ஒரு திடமான நிஜம் அல்ல, மாறாக இந்த நிஜத்தின் வெளியாக்கமாகவும் இருக்கிறது. (1 தீமோ.3:15-16)
( சபையால் ஏந்திவரப்பட்ட நிஜம் என்ன என்பதை எடுத்துரையுங்கள் )
நாள் 6
த1 நிஜம் வேதாகமத்தின் அறிவு கூட்டல் பரலோகப் பிரகாசிப்பித்தல் மற்றும் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து வருகிறது (தீத்து 1:1; 1 தீமோ. 2:4)
(நிஜத்தைப் பார்க்க, நாம் முதலில் வேதாகமத்தின் உபதேசங்களைக் கொண்டு போஷிக்கப்படவும், பரிச்சயமடையவும் வார்த்தையில் நேரம் செலவிட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 பரிசுத்தவான்களில் அநேகருக்கு தாங்கள் சத்தியத்தைச் சுமப்பதற்கு பொறுப்புள்ளவர்கள் என்ற ஓர் ஆழமான உணர்வு இருக்கிறது(தீத்து.1:1, 3; 1 தீமோ. 2:4)
(சத்தியத்தைத்ச் சுமப்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள, கலாத்தியர் 211 16-இல் உள்ள பவுலின் உதாரணத்தை நாம் பரிசீலிக்கலாம் என்பதை எடுத்துரையுங்கள்)