சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 7
அப்போஸ்தலனாகிய பவுலின் முன்மாதிரி
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
1 தீமோ. 1:16 ஆனால், இயேசு கிறிஸ்து, நித்திய ஜீவனுக்கென்று தம்மேல் விசுவாசிக்கவிருக்கிறவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் தம் சகல நீடிய பொறுமையையும் பிரதான பாவியாகிய என்னிலே காட்சியாக்கும்படியே எனக்கு இரக்கங்காட்டப்பட்டது.
1 தெச. 2:6-7 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்ற அதிகாரத்தோடு இருந்திருக்க முடியும் என்றாலும், உங்களிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ மனிதர்களிடமிருந்து வரும் மகிமையை நாடவுமில்லை. ஆனால் பாலூட்டுகிற தாய் தன் பிள்ளைகளைச் சீராட்டுவதுபோல, நாங்கள் உங்கள் மத்தியில் மென்மையானவர்களாய் இருந்தோம்.
பசிதூண்டும் வார்த்தை
விசுவாசிகளுக்கு கொடுத்த அப்போஸ்தலனாகிய பவுலின் முன்மாதிரி என்ன?
பவுல் விசுவாசிகளுக்கு, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தன் ஆவியில் ஆவியானவராகக் கிறிஸ்துவை வாழ்வதின், கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதின், மற்றும் கிறிஸ்துவை ஊழியஞ்செய்வதின் ஒரு முன்மாதிரியாக இருந்தான். பவுல் கிறிஸ்துவை எல்லாமுமாக—தன் வாழ்க்கை, முன்மாதிரி, இலக்கு, இரகசியம் ஆகியவையாக எடுத்துக்கொண்டான். பவுல் ஆத்துமாவின் வல்லமை மற்றும் ஆற்றலால் தன் ஆத்துமாவில் வாழ்ந்து சேவிக்காமல், ஜீவன் தரும் ஆவியாகிய உள்வசிக்கும் கிறிஸ்துவால் தன் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியில் தேவனை வாழ்ந்து சேவிப்பதன்மூலம் நம் முன்மாதிரியாக இருக்கிறான்; அவன் ஆவியானவரின் கனியைக் கொடுக்கும்படி ஆவியானவருக்கு விதைத்த ஓர் ஆவிக்குரிய மனிதனாக இருந்தான். பவுல் எல்லாவற்றையும் சரீரத்திலும் சரீரத்தின்மூலமும் சரீரத்திற்காகவும் செய்து, சரீர-உணர்வுள்ளவனாகவும் சரீர-மையமானவனாகவும் இருப்பதில் நம் முன்மாதிரியாக இருக்கிறான்.
ஆவிக்குரிய பாரம்
பவுல் விசுவாசிகளுக்கு, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தன் ஆவியில் ஆவியானவராகக் கிறிஸ்துவை வாழ்வதின் கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதின், மற்றும் கிறிஸ்துவை ஊழியஞ்செய்வதின் ஒரு முன்மாதிரியாக இருந்தான்.
மக்களை மேய்த்துப்பேண, அவர்களைச் சீராட்ட மற்றும் போஷிக்க அதிசிறந்த வழி, அவர்களுக்கு ஒரு நேர்த்தியான முன்மாதிரியைத் தருவதே; பவுல் தன் ஆவிக்குரிய குழந்தைகளைத் தான் கிறிஸ்துவை வாழும் தன் சொந்த வாழ்க்கையைக் கொண்டு உணவூட்டினான். சபையில் மிக முக்கியமான காரியம் நபர்; நபரே வழி, நபரே கர்த்தரின் வேலை; நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதுவே நீங்கள் செய்வது. வேலையைவிட வாழ்க்கைக்கு அதிகக் கவனஞ்செலுத்தி, நாம் அப்போஸ்தலர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
பவுல் விசுவாசிகளுக்கு, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தன் ஆவியில் ஆவியானவராகக் கிறிஸ்துவை வாழ்வதின், கிறிஸ்துவைப் பெரிதாக்கிக்காட்டுவதின், மற்றும் கிறிஸ்துவை ஊழியஞ்செய்வதின் ஒரு முன்மாதிரியாக இருந்தான்.
மக்களை மேய்த்துப்பேண, அவர்களைச் சீராட்ட மற்றும் போஷிக்க அதிசிறந்த வழி, அவர்களுக்கு ஒரு நேர்த்தியான முன்மாதிரியைத் தருவதே; பவுல் தன் ஆவிக்குரிய குழந்தைகளைத் தான் கிறிஸ்துவை வாழும் தன் சொந்த வாழ்க்கையைக் கொண்டு உணவூட்டினான்.
ஜீவனின் அனுபவம்
மனிதரிடமிருந்து வரும் மகிமையை நாடுவது ஒவ்வொரு கிறிஸ்தவ வேலையாளுக்கும் ஒரு நிஜமான சோதனை; இந்தக் காரியத்தால் அநேகர் பட்சிக்கப்பட்டு, கெடுக்கப்பட்டுவிட்டார்கள். கர்த்தரால் நாம் எவ்வளவு பயன்படுத்தப்படுவோம் என்பதும் நம் பயன்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் நாம் மனிதரிடமிருந்து வரும் மகிமையை நாடுகிறோமா என்பதைச் சார்ந்திருக்கிறது.
கிறிஸ்தவ வேலையில் அதிகாரம், கண்ணியம், அல்லது உரிமையை வற்புறுத்துவது அந்த வேலையைச் சேதப்படுத்துகிறது. நாம் இந்த முன்மாதிரியைப் பின்பற்றினால், கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு கொடிய வியாதியின் கிருமியை, பதவியை அனுமானித்துக்கொள்ளுதல் என்ற கிருமியை, கொல்வோம்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
பவுல் கீழ்க்காணும் தகுதிகளுடன் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாக இருப்பதில் நம் முன்மாதிரியாக இருக்கிறான். அவன் இனி தனக்கு வாழாமல், கர்த்தருக்கு வாழும்படி கிறிஸ்துவின் அன்பால் நெருக்கி ஏவப்பட்டான்; நாம் “கர்த்தருக்கு” வாழ்வதென்றால், நாம் கர்த்தருடைய வழிநடத்துதலின்கீழும் கட்டுப்பாட்டின்கீழும் இருக்கிறோம் என்றும் நாம் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவருடைய வாஞ்சைகளைத் திருப்திப்படுத்தவும் அவர் உத்தேசிப்பதைப் பூர்த்தியாக்கவும் விரும்புகிறோம் என்றும் அர்த்தம்.
பவுல் ஆத்துமாவின் வல்லமை மற்றும் ஆற்றலால் தன் ஆத்துமாவில் வாழ்ந்து சேவிக்காமல், ஜீவன் தரும் ஆவியாகிய உள்வசிக்கும் கிறிஸ்துவால் தன் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியில் தேவனை வாழ்ந்து சேவிப்பதன்மூலம் நம் முன்மாதிரியாக இருக்கிறான்; அவன் ஆவியானவரின் கனியைக் கொடுக்கும்படி ஆவியானவருக்கு விதைத்த ஓர் ஆவிக்குரிய மனிதனாக இருந்தான்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 பவுல் தனது கடற்பயணத்தில் கிறிஸ்துவை வாழ்ந்தான், மகிமைப்படுத்தினான். (பிலி1:21)
(அப்போஸ்தலர் 2இல் கர்த்தருடைய வாழ்க்கையை எவ்வாறு பவுல் வாழ்ந்தான் என்பதை எடுத்துரையுங்கள்.)
த2 பவுல் எவற்றில் கிறிஸ்துவை கண்டானோ அவற்றைப் பெற்றான் (அப். 26:16)
(நாம் தரிசனங்களையும் வெளிப்பாடுகளையும் மட்டுமே பார்த்து, கர்த்தரைப் பார்க்காவிட்டால், நாம் பார்ப்பது மாயை.)
நாள் 2
த1 அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் ஒரு ஸ்தானாதிபதியாக இருந்தான் (2 கொரி.5:4, 20)
(கிறிஸ்துவின் ஒரு ஸ்தானாதிபதியாக, பவுல் தனக்குள் இருந்ததெல்லாம், அவன் என்னவாக இருந்தானோ, அவனிடம் என்னவெல்லாம் இருந்ததோ அவையெல்லாம் சாவுக்கேதுவானது என்பதை உணர்ந்தறிந்தான் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கி ஏவப்படுதல் (2 கொரி. 5:14-15)
(கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகளாக இருக்கும்படி நம்மைத் தரிப்பிக்கும் இன்னொரு காரியம் கிறிஸ்துவின் நெருக்கி ஏவுகிற அன்பாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 பவுல் வாழ்ந்த விதம் அவனது ஆவிக்குரிய பிள்ளைகளை ஊட்ட பயன்படுத்தப்பட்டது (1 தெச. 2:1-3)
(தெசலோனியர்கள் மத்தியில் பவுல் ஏன் தன் வாழ்க்கையை வலியுறுத்தினான் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 அப்போஸ்தலர்கள் தேவனின் சுவிசேஷத்தை மிகுந்த போராட்டத்திலே பேசினார்கள் (1 தெச . 2:1-3)
(சுவிசேஷத்திற்கான தங்கள் போராட்டத்தில் அப்போஸ்தலர்கள் தேவனை தங்களின் தைரியமாக அனுபவித்து மகிழ்ந்தார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 தேவனின் பரீட்சித்தலிலிருந்து வரும் அங்கீகரிக்கப்படுதல் நமக்கு வரும்வரை அவர் எதனையும் நமக்கு ஒப்புவிக்க முடியாது (1 தெச. 2:4)
(ஏன் தேவன் நம்மை பரீட்சிக்கிறார்?)
த2 முகஸ்துதி பேச்சையும், பொருளாசையின் காரணமாக போலியாக காரணஞ்சொல்லுவதையும் தவிர்த்தல் (1 தெச. 2:4-5).
(நாம் முகஸ்துதி பேச்சையும், பொருளாசையின் காரணமாக போலியாக காரணஞ்சொல்லுவதையும் தவிர்க்கக் வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 மனிதரிடமிருந்து வரும் மகிமையை நாடுவது, ஒவ்வொரு கிறிஸ்தவ வேலையாளுக்கும் ஒரு நிஜமான சோதனையாகும் (1 தெச. 2:6)
(கிறிஸ்தவ வேலையில் அதிகாரம், கண்ணியம் அல்லது உரிமையை வலியுறுத்துவது, அந்த வேலையைச் சேதப்படுத்துகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 உள்ளூர் சபைகளில் எந்தப் பிரமுகர்களும் கிடையாது (1 தெச . 2:6-7)
(பிரமுகர்களாக இருப்பதற்குப் பதிலாக, நாம் ஒருவரையொருவர் சேவிக்கும் அடிமைகள் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 பவுல் தன்னையே விசுவாசிகளின் நலனுக்காக செலவுப்படுத்தினான் (2 கொரி. 12:15; 1 தெச. 2:8)
(எதற்காக அப்போஸ்தலர்கள் புதிதாய் மனம் மாறியவர்களை தேவனின் முழு இரட்சிப்புக்குள் கொண்டு வருவதற்கான வழியை திறந்தனர் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 புதிய விசுவாசிகளுக்கு நம்மை ஒரு முன்மாதிரியாக நடத்திக்கொள்ளுதல் (1 தெச. 2:8, 11-12)
(எந்தவிதமான நடை நம்மை இராஜ்ஜியத்திற்குள் வழிநடத்தும், தேவனுடைய மகிமைக்குள் கொண்டுசெல்லும் என்பதை எடுத்துரையுங்கள்)