சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 4
நேர்த்தியான சபை வாழ்க்கைக்கான நேர்த்தியான ஜெப வாழ்க்கை
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
1 தீமோ. 2.1-2 ஆகையால், முதலாவதாக, நாம் எல்லா தேவத்தன்மையிலும் கண்ணியத்திலும் அமைதியான கலக்கமில்லாத வாழ்க்கை வாழும்படி, எல்லா மனிதர்களுக்காகவும், ராஜாக்களுக்காகவும் உயர் பதவியில் இருக்கும் எல்லாருக்காவும் விண்ணப்பங்களும் ஜெபங்களும் பரிந்துபேசுதல்களும் நன்றிசெலுத்துதல்களும் செய்யப்படும்படி புத்திசொல்கிறேன்.
கொலோ. 4:2. ஜெபத்தில் தளரா உறுதியோடு தரித்திருங்கள், நீங்கள் நன்றி செலுத்துதலோடு அதிலே விழிப்பாயிருந்து,
யாத். 28:29-30 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரயேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்க வேண்டும்
பசிதூண்டும் வார்த்தை
இன்று தேவனுடைய மீட்டுத்திருப்புதலில் நேர்த்தியான சபை வாழ்க்கையை பெறுவதற்கான முன்நிபந்தனை என்ன?
இன்று கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் ஒரு நேர்த்தியான சபை வாழ்க்கையைக் கொண்டிருப்பதற்கான ஒரு முன்நிபந்தனை ஒரு ஜெப வாழ்க்கையைக் கொண்டிருப்பதே, ஒரு நேர்த்தியான சபை ஒரு ஜெபிக்கும் சபை; கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் உள்ள யாவரும் ஜெபிக்கிறவர்களாக இருந்து, ஜெபமின்மை என்பதிற்கு எதிராக நிற்க வேண்டும்.
ஒரு ஜெப வாழ்க்கை வாழ நாம் நம்மைப் பயிற்சிசெய்தால், சபை ஜீவிக்கிறதாகவும் உயர்த்தப்பட்டும் இருக்கும். இவ்வளவு அதிகமாகப் பேசுவதற்குப் பதிலாக, இவ்வளவு அதிகமாக வேலை செய்வதற்கும்கூட பதிலாக, நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும்; ஒரு காரியத்திற்காக நாம் முழுமையாக ஜெபித்த பிறகு மட்டுமே, நாம் அதைக் குறித்து, நம்மால் சுயாதீனமாக அல்ல, மாறாக கர்த்தருடனான ஒருமையிலும், அவரது நடத்துதலின்படியும், ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
ஆவிக்குரிய பாரம்
ஓர் உள்ளூர் சபையை நிர்வகிப்பதற்கும், மேய்த்துப்பேணுவதற்கும் ஒரு ஜெப ஊழியமே முன்நிபந்தனை. ஒரு நேர்த்தியான சபை ஒரு ஜெபிக்கும் சபை; கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் உள்ள யாவரும் ஜெபிக்கிறவர்களாக இருந்து, ஜெபமின்மை என்ற பாவத்திற்கு எதிராக நிற்க வேண்டும்.
மார்ப்பதக்கம் என்பது சரீர வாழ்க்கையின் கட்டியெழுப்புதலாகவும், தேவனுடைய மக்களைக் குறித்த அவரது சித்தத்தை நாம் அறிவதற்கான வழிவகையாகவும் உள்ளது; அதிக மற்றும் முழுமையான ஜெபத்தின் மூலம், நாம் மார்ப்பதக்கத்தின் நிஜத்தை அனுபவமாக்க முடியும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
ஆகையால், முதலாவதாக, நாம் எல்லா தேவத்தன்மையிலும் கண்ணியத்திலும் அமைதியான, கலகமில்லாத வாழ்க்கை வாழும்படி, எல்லா மனிதர்களுக்காகவும், ராஜாக்களுக்காகவும் உயர் பதவியில் இருக்கும் எல்லாருக்காகவும் விண்ணப்பங்களும், ஜெபங்களும், பரிந்துபேசுதல்களும், நன்றிசெலுத்துதல்களும் செய்யப்படும்படி புத்திசொல்கிறேன். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய பார்வையில் இதுவே நன்மையும் ஏற்கத்தக்கதுமாய் இருக்கிறது”.
பழைய ஏற்பாட்டிலுள்ள பிரதான ஆசாரியன் தேவனின் பிரசன்னத்தில் ஊரீம் தும்மீம் ஆகியவற்றைக் கொண்ட மார்ப்பதக்கத்திலுள்ள கற்களை வாசித்தது போலவே, சபையைக் கவனித்துக்கொள்வதற்காக தேவனின் அறிவுறுத்துதலைக் கொண்டு உட்செலுத்தப்படுவதற்கு, மூப்பர்கள் “பரிசுத்தவான்களை வாசிப்பதின்” நிஜத்திற்குள் நுழையக்கூடுமாறு, அவர்களிடம் அதிக மற்றும் முழுமையான ஜெபம் இருக்க வேண்டும் .
ஜீவனின் அனுபவம்
கர்த்தருடைய உள்வசிக்கும் பிரசன்னத்தின் ஒளியின் பிரகாசத்தின்கீழ் நம் ஜெபத்தில் நாம் முழுவதும் ஆக்கினைத்தீர்க்கப்படும்போதுதான், சூழ்நிலையைக் குறித்தும், மக்களைக் குறித்தும், சபையைக் குறித்தும் நாம் கர்த்தரின் ஞானத்தையும், நிஜமான புரிந்துகொள்ளுதலையும் பெறுகிறோம். எல்லா சபைகளிலும் உள்ள எல்லாப் பரிசுத்தவான்களும் ஜெபத்தில் விடாப்பிடியாக இருந்தால், மீட்டுத்திருப்புதல் பெரிதும் செறிவூட்டப்பட்டு, உயர்த்தப்படும்; மேலும், பரிசுத்தவான்கள் கர்த்தரையும், அவரது பிரசன்னத்தையும், அவரது உடனடி மற்றும் நிலையான அபிஷேகத்தையும் அனுபவித்துமகிழ்வார்கள்; நாள் முழுவதும் அவர்கள் கர்த்தருடைய முகத்தின் புன்னகையை அனுபவித்துமகிழ்வார்கள், கிறிஸ்துவின் ஜீவிக்கும் நபர் அவர்களின் அனுபவமாகவும் அனுபவமகிழ்ச்சியாகவும் மாறுவார்
பயிற்சி மற்றும் பிரயோகம்
வழிநடத்துகிறவர்கள், அதாவது சபையில் வார்த்தையை ஊழியஞ்செய்கிறவர்கள், ஒரு ஜெப வாழ்க்கை வாழ முன்னணி எடுக்க வேண்டும். அவர்கள் “ஜெபத்தில் தளரா உறுதியோடு தரித்திருந்து, நன்றிசெலுத்துதலோடு அதிலே விழிப்பாயிருக்க” வேண்டும்.
ஒரு ஜெப வாழ்க்கையைக் கொண்டிருப்பதற்கும், இடைவிடாமல் ஜெபிப்பதற்கும், நம் உணர்ச்சியும் மனமும் ஓர் இயல்பான நிலைமையில், அதாவது, நம் ஆவியிலுள்ள ஆவியானவரின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்படி ஒழுங்குபடுத்தப்பட்டாக வேண்டும்.
இவ்வளவு அதிகமாகப் பேசுவதற்குப் பதிலாக, இவ்வளவு அதிகமாக வேலை செய்வதற்கும்கூட பதிலாக, நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும்; ஒரு காரியத்திற்காக நாம் முழுமையாக ஜெபித்த பிறகு மட்டுமே, நாம் அதைக் குறித்து, நம்மால் சுயாதீனமாக அல்ல, மாறாக கர்த்தருடனான ஒருமையிலும், அவரது நடத்துதலின்படியும் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.