சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 2
பேரானந்தமுள்ள தேவனுடைய மகிமையின் சுவிசேஷம்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப-வாசிப்பு செய்தல்
1 தீமோ 1:11 என்னிடம் ஒப்புவிக்கப்பட்டதாகிய, பேரானந்தமுள்ள தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தின்படி…
2 கொரி. 4:4 அவர்களிலே இந்த யுகத்தின் தேவனானவன், தேவனுடைய சாயலாகிய கிறிஸ்துவினுடைய மகிமையின் சுவிசேஷத்தின் ஒளிருதல் அவிசுவாசிகளின் சிந்தனைகள்மீது பிரகாசிக்காதபடி அவற்றைக் குருடாக்கியிருக்கிறான்.
6 ஏனெனில், இருளிலிருந்து ஒளி பிரகாசிப்பதாக என்று சொன்ன தேவனே, இயேசு கிறிஸ்துவினுடைய முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் அறிவை ஒளிரப்பண்ணுவதற்காக எங்கள் இருதயங்களில் பிரகாசித்தவர்.
பசிதூண்டும் வார்த்தை
இந்தச் சுவிசேஷம் பாவ மன்னிப்பு மற்றும் விசுவாசத்தால் நீதிப்படுத்தப்படுதல் பற்றிய நற்செய்தியை மட்டும் கொண்டுவருவதில்லை; இந்த மகிமையின் சுவிசேஷம் தேவனுடைய பொருளாட்சியின் சுவிசேஷமாகவும் இருக்கிறது. வெளிக்காட்டப்படுகிற தேவனே மகிமை. இவ்வாறு, மகிமையின் சுவிசேஷம் வெளிக்காட்டப்பட்ட தேவனின் சுவிசேஷமாகும்; இது தேவனுடைய மகிமையை வெளிக்காட்டுகிற ஒரு சுவிசேஷம். பேரானந்தமுள்ள தேவனுடைய மகிமையின் சுவிசேஷம் என்பது ஒரு மேன்மையான சொற்றொடராகும். இது வசனம் 3இல் குறிப்பிடப்படும் தேவனுடைய பொருளாட்சியைக் குறிக்கிறது. கிறிஸ்துவில் தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் பகிர்ந்தளிப்பதன்மூலம், இந்தச் சுவிசேஷம் தேவனுடைய மகிமையைப் பிரகாசிக்கிறது, இதில் தேவன் தம் மக்கள் மத்தியில் பெற்ற பேரானந்தப்படுகிறார். இதுவே அப்போஸ்தலன் கர்த்தரிடமிருந்து ஆணையும், ஊழியமுமாகும் (வ. 12). இது, ஓர் உள்ளூர் சபையில் பொதுவாகப் போதிக்கப்படவும், பிரசங்கிக்கப்படவும் வேண்டும்.
ஆவிக்குரிய பாரம்
கிறிஸ்து தேவனுடைய சாயலும், அவரது மகிமையின் சுடரொளியுமாக இருக்கிறார்; எனவே, கிறிஸ்துவின் சுவிசேஷமானது ஒளிர்கிறதும் பிரகாசிக்கிறதுமான அவரது மகிமையின் சுவிசேஷமாகும். கிறிஸ்துவின் மகிமையின் சுவிசேஷம் பேரானந்தமுள்ள தேவனுடைய மகிமையின் சுவிசேஷமாகும் . பேரானந்தமுள்ள தேவனுடைய மகிமையின் சுவிசேஷம் என்ற பதம் 1 தீமோத்தேயு 1:4இலுள்ள தேவனுடைய பொருளாட்சியைக் குறித்துக்காட்டுகிறது.
நம் சுவிசேஷப் பிரசங்கித்தலில், ஓர் ஒளிருதல் இருக்க வேண்டும்; நாம் கிறிஸ்துவின் மகிமையின் சுவிசேஷத்தை நமக்குள்ளிருந்து பிரகாசித்துக்காட்ட வேண்டும். கிறிஸ்துவினுடைய மகிமையின் சுவிசேஷத்தைப் பறைசாற்றுவதில், நாம் நம்மை அல்ல, மாறாக சுவிசேஷத்தின் உள்ளடக்கமாகிய கிறிஸ்து இயேசுவை கர்த்தராகப் பிரசங்கிக்க வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
மகிமை தேவனுடைய ஒரு குணாம்சம்; மகிமை தேவனுடைய வெளியாக்கமாகும், தேவன் மாட்சிமையில் வெளிக்காட்டப்படுவதாகும்.
தேவனுடைய மகிமை உள்ளார்ந்தரீதியில் தேவனுடைய பொருளாட்சியுடன் தொடர்புடையது.
தேவனுடைய மகிமையானது கிறிஸ்துவின் மாம்சமாகுதல்,மனித வாழ்க்கை, சிலுவைமரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், மீண்டும் வருதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
கிறிஸ்து தேவனுடைய சாயலும், அவரது மகிமையின் சுடரொளியுமாக இருக்கிறார்; எனவே, கிறிஸ்துவின் சுவிசேஷமானது ஒளிர்கிறதும் பிரகாசிக்கிறதுமான அவரது மகிமையின் சுவிசேஷமாகும்.
ஜீவனின் அனுபவம்
தேவன் நம்மை, மகிமைக்கென்று ஆயத்தப்படுத்தப்பட்ட, கனத்திற்கான பாத்திரங்களாக சிருஷ்டித்தார்; மகிமையில் அவர் என்னவாக இருக்கிறாரோ அதை வெளிக்காட்ட அவரது பாத்திரங்களாக இருக்கும்படி அவரது இறையாண்மையில் நாம் முன்குறிக்கப்பட்டோம்.
சுவிசேஷம் என்பது நம் இருதயங்களில் ஒளிர்கிற, கதிர்வீசுகிற. பிரகாசிக்கிற கிறிஸ்துவின் மகிமையின் சுவிசேஷமாகும். நம் இருதயங்களில் தேவன் பிரகாசித்தல், இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் அறிவின் ஒளிர்தலை, அதாவது, கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் தேவனுடைய மகிமையை நாம் அறியும்படிச் செய்கிற பிரகாசிப்பித்தலை விளைவிக்கிறது. நாம் நம் கருத்துக்களைக் கைவிட்டு, நம் இருதயத்தைக் கர்த்தரிடம் திருப்பினால், முக்காடுகள் நீக்கப்படும், இந்த யுகத்தின் தேவனுக்கு நம் ஆள்தத்துவத்தில் எந்தத் தளமும் இருக்காது. தேவனுடைய மகிமையின் சுவிசேஷம் நம் இருதயங்களில் பிரகாசிக்கும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் அறிவை, அதாவது, தேவனை வெளிக்காட்டி, அறிவிக்கிற கிறிஸ்துவின் அறிவைப் பெறும்படி நாம் அவர்கள்மீது பிரகாசிக்குமாறு தேவன் நம் இருதயங்களில் பிரகாசிக்கிறார்.
நம் சுவிசேஷப் பிரசங்கித்தலில், ஓர் ஒளிருதல் இருக்க வேண்டும்;
நாம் கிறிஸ்துவின் மகிமையின் சுவிசேஷத்தை நமக்குள்ளிருந்து பிரகாசித்துக்காட்ட வேண்டும். கிறிஸ்துவினுடைய மகிமையின் சுவிசேஷத்தைப் பறைசாற்றுவதில், நாம் நம்மை அல்ல, மாறாக சுவிசேஷத்தின் உள்ளடக்கமாகிய கிறிஸ்து இயேசுவை கர்த்தராகப் பிரசங்கிக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 மகிமையின் தேவன் ஆபிரகாமை அழைத்தார், ஆபிரகாம் அந்த மகிமையால் கவரப்பட்டான், பிடிக்கப்பட்டான் (அப். 7:2; 1 தீமோ. 1:11)
(ஒரு நாள் மகிமையின் தேவன் சுவிசேஷப் பிரசங்கித்தல் மூலம் நம்மிடம் வந்தார், அப்போது நாம் கவர்ந்திழுக்கப்பட்டு, நம்பவைக்கப்பட்டு, அவரைப் பாராட்ட ஆரம்பித்தோம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய பொருளாட்சி “பேரானந்தமுள்ள தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தின்படி” இருக்கிறது (1 தீமோ. 1:11-12)
(கிறிஸ்துவில் தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் பகிர்ந்தளிப்பதன் மூலம், இந்தச் சுவிசேஷம் தேவனுடைய மகிமையைப் பிரகாசிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 இந்த யுகத்தின் தேவன், இந்த தற்போதைய யுகத்தின் அதிபதியாகிய வஞ்சகனாகிய சாத்தானே இவன் இன்றைய உலகத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி, மனிதனின் மனதையும், அவனது எண்ணங்களையும் குருடாக்கி, மனிதனின் ஆராதனைக்காக வேட்டையாடித் தேடுகிறான் (2 கொரி. 4:3-4)
(நாகரிகமற்றவரோ அல்லது கலாச்சாரமுடையவரோ, இன்று எல்லா மக்களும் இந்த யுகத்தின் தேவனால் குருடாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 வெளிப்பாடு நம்மிடம் வர முடியக்கூடிய ஒரே வழி நாம் நம் கருத்துக்களைக் கைவிடுவது மட்டுமே (2 கொரி. 3:16)
(நீங்கள் எவ்வளவாய் உங்கள் இருதயத்தைக் அல்லது கர்த்தரிடம் திருப்புகிறீர்களோ, இந்த யுகத்தின் தேவனுக்கு உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் ஆள்தத்துவத்திலும் அவ்வளவு குறைவான தளம் இருக்கும். அப்போது நீங்கள் பரலோக ஒளியின் பிரகாசத்தின்கீழ் இருப்பீர்கள், இந்த ஜீவிக்கிற நபரை பற்றிய வெளிப்பாட்டையும் பெறுவீர்கள் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 மூவொரு தேவனின் இரண்டாமவராக கிறிஸ்து கடந்த நித்தியத்திலிருந்து தெய்வீக மகிமையை உடையவர் (யோவான் 1:1, 14)
(யோவான் 1:1இன்படி தெய்வீக மகிமை என்றால் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவன் என்றமுறையில், கிறிஸ்து தாமே மகிமையாக இருந்தார், ஆனால் இந்த மகிமை அவரது மனுஷீகம் என்னும் ஓட்டில் மறைக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தெய்வீக மகிமையைக் காண முடியவில்லை. (யோவான் 12:24)
(அவருடைய மாம்சமாகுதல் அவருடைய தெய்வீக மகிமையை அவரது மாம்சத்தில் மறைத்துவைக்கும்படிச் செய்தது, ஆனால் அவரது மரணத்தின் மூலம் அவரது மகிமை அவரது உயிர்த்தெழுதலில் பல மணிகளை உற்பத்திசெய்வதற்காக விடுவிக்கப்பட்டது, இது அவரது மகிமையின் வெளியாக்கமாகிய அவரது அதிகரிப்பாக மாறியது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 கிறிஸ்துவின் சுவிசேஷம், ஒளிரச்செய்கின்ற மற்றும் பிரகாசம் வீசுகிற அவருடைய மகிமையின் சுவிசேஷமாகும். (எபி. 1:3; 2 கொரி. 3:18)
(கிறிஸ்துவினுடைய மகிமையின் சுவிசேஷத்தினுடைய ஒளிவீசுதல் அவிசுவாசிகளின் இருதயங்களுக்குள் பிரகாசிக்காதபடி இந்த யுகத்தின் தேவனாகிய சாத்தான் அவர்களின் சிந்தனைகளையும், மனங்களையும் குருடாக்கியிருக்கிறான் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 மனிதனின் இருதயம் எதையும்கொண்டு திரையிடப்படாவிட்டால் அல்லது இந்த யுகத்தின் தேவனாகிய சாத்தானால் குருடாக்கப்படாவிட்டால், மனிதன் சுவிசேஷத்தின் ஒளிருதலைப் பார்க்க முடியும் (2 கொரி. 4:4, 6)
(சுவிசேஷத்தின் சாட்சாத்து உள்ளடக்கம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 தேவன், சாயல், கிறிஸ்து, மகிமை, சுவிசேஷம், ஒளிருதல் ஆகிய சொற்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கின்றன என்பதை இரண்டு கொரிந்தியர் 4:4 சுட்டிக்காட்டுகிறது (2 கொரி. 4:4)
(தேவனே சாயல், இந்தச் சாயல் கிறிஸ்துவே, கிறிஸ்துவே மகிமை, இந்த மகிமையே சுவிசேஷம், இந்தச் சுவிசேஷமே ஜீவிக்கும் ஒளிருதலாகும் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 கிறிஸ்துவே முழுப் பிரபஞ்சத்திலும் அதிமேன்மையானவர் (எபி. 1:3; 1 கொரி. 12:3)
(நாம் அதிமேன்மையானவரான மற்றும் மிக அழகானவரான கிறிஸ்துவைப் பொக்கிஷமாக பெற்றிருப்பதால், நாம் உலகத்தை நேசிப்பதில்லை என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கிறிஸ்துவினுடைய மகிமையின் சுவிசேஷம் முதலில் நமக்குள் பிரகாசிக்கிறது. அதன்பின் அது நமக்குள் இருந்து பிரகாசிக்கிறது.
(பிலி. 2:15-16)
(இப்படிப்பட்ட பிரகாசித்தல் போதனையின்மூலம் உண்டாக முடியாது இது, கிறிஸ்துவை அனுபவிப்பதின்மூலமாக மட்டுமே உண்டாக முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய பிரகாசித்தலை அனுபவிப்பதற்கு, நாம் கிறிஸ்துவுடன் நேரடியான, தனிப்பட்ட, அந்நியோன்யமான தொடர்பைப் பெற வேண்டும் (2 கொரி. 3:18; 4:7)
(நாம் ஒரு பிரியமான அந்நியோன்யமான விதத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம், நாம் அவரது முகத்திற்கு முன்பாக இருக்கிறோம், தேவனின் பிரகாசித்தல் நம் இருதயத்தில் இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)