சபையைக் குறித்த தேவனுடைய பொருளாட்சியின்படி வாழ்தலும் சேவித்தலும்
செய்தி 1
தேவனுடைய பொருளாட்சியின் பரலோக தரிசனத்தின்படி வாழ்தலும், சேவித்தலும்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெப வாசிப்பு செய்தல்
எபே. 5:26-27 வார்த்தையிலுள்ள தண்ணீரின் கழுவுதலால் அவளைத் தாம் சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்தும்படியும், சபை கறையோ சுருக்கமோ இப்படிப்பட்ட வேறெதுவோ இல்லாமல், பரிசுத்தமாகவும் மாசற்றும் இருக்கத்தக்கதாய் அவளை மகிமையானவளாகத் தமக்கே வழங்கிக்கொள்ளும்படியும் அவ்வாறு ஒப்புக்கொடுத்தார்
அப். 26:16-19 உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும், நியமிப்பதற்காகவே உனக்குத் தோன்றியிருக்கிறேன். நான் உன்னை அனுப்புகிறவர்களிடம் அவர்கள் பாவ மன்னிப்பையும் என்னிலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறவர்களிடையே உள்ள சுதந்தரிப்பையும் பெற்றுக்கொள்ளும்படி, அவர்களுடைய கண்களைத் திறக்க, அதாவது, இருளிலிருந்து ஒளிக்கும் சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடமும் அவர்களைத் திருப்ப உன்னை அனுப்புகிறேன் என்றார். ஆகையால்… நான் அந்தப் பரலோக தரிசனத்திற்குக் கீழ்ப்படியாதவனாக இருக்கவில்லை.
பசிதூண்டும் வார்த்தை
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் குவிமையப்படுத்தப்படவும், வலியுறுத்தப்படவும், ஊழியஞ்செய்யப்படவும் வேண்டிய ஒரே காரியம், ஒப்பற்ற காரியம் என்ன?
இது தேவனுடைய நித்தியப் பொருளாட்சியின் பரலோக தரிசனமே; வேதத்தின் மையக் கருப்பொருள் தேவனுடைய பொருளாட்சியே, முழு வேதமும் தேவனுடைய பொருளாட்சியைப் பற்றியது. புதிய எருசலேமை முழுநிறைவாக்க கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக தேவத்துவத்தில் அல்ல, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதன் தேவனாகுமாறு தேவன் மனிதனாவதே தேவனின் நித்தியப் பொருளாட்சி. தேவத்துவத்தில் அல்ல, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் நாம் தேவனாகுதல், கடந்த நித்தியத்தில் பிதாவாகிய தேவனால், நாம் பரிசுத்தமாக இருக்கும்படி அவர் நம்மைத் தெரிந்தெடுத்து, குமாரத்துவத்திற்கென்று அவர் நம்மை முன்குறிப்பதன்மூலம் துவக்கிவைக்கப்பட்டது; தெய்வீகக் குமாரத்துவத்திற்கான தெய்வீகப் பரிசுத்தமாக்குதலே தெய்வீகப் பொருளாட்சியின் மையமும், புதிய ஏற்பாட்டிலுள்ள வெளிப்பாட்டின் மைய எண்ணமுமாகும்.
ஆவிக்குரிய பாரம்
தேவத்துவத்தில் அல்ல, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் நாம் தேவனாகுதல், கடந்த நித்தியத்தில் பிதாவாகிய தேவனால், நாம் பரிசுத்தமாக இருக்கும்படி அவர் நம்மைத் தெரிந்தெடுத்து, குமாரத்துவத்திற்கென்று அவர் நம்மை முன்குறிப்பதன்மூலம் துவக்கிவைக்கப்பட்டது; தெய்வீகக் குமாரத்துவத்திற்கான தெய்வீகப் பரிசுத்தமாக்குதலே தெய்வீகப் பொருளாட்சியின் மையமும், புதிய ஏற்பாட்டிலுள்ள வெளிப்பாட்டின் மைய எண்ணமுமாகும்.
நடபடிகள் 26:18 தேவனுடைய பொருளாட்சியின் பரலோக தரிசனத்தின்படி சேவிக்க நமக்கான தெய்வீக ஆணையின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துகிறது; நாம் மற்றவர்களை இந்த அனுபவம் மற்றும் நிஜத்திற்குள் கொண்டுவருமாறு அவற்றை நம் அனுபவமாகவும் நிஜமாகவும் ஆக்குமாறு கர்த்தரிடம் கேட்டு, நாம் இந்தக் காரியங்களைக் குறித்து ஜெபிக்க வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் குவிமையப்படுத்தப்படவும், வலியுறுத்தப்படவும், ஊழியஞ்செய்யப்படவும் வேண்டிய ஒரே காரியம், ஒப்பற்ற காரியம் தேவனுடைய நித்தியப் பொருளாட்சியின் பரலோக தரிசனமே; வேதத்தின் மையக் கருப்பொருள் தேவனுடைய பொருளாட்சியே, முழு வேதமும் தேவனுடைய பொருளாட்சியைப் பற்றியது.
தேவத்துவத்தில் அல்ல, மாறாக ஜீவனிலும் சுபாவத்திலும் நாம் தேவனாகுதல், கடந்த நித்தியத்தில் பிதாவாகிய தேவனால், நாம் பரிசுத்தமாக இருக்கும்படி அவர் நம்மைத் தெரிந்தெடுத்து, குமாரத்துவத்திற்கென்று அவர் நம்மை முன்குறிப்பதன்மூலம் துவக்கிவைக்கப்பட்டது; தெய்வீகக் குமாரத்துவத்திற்கான தெய்வீகப் பரிசுத்தமாக்குதலே தெய்வீகப் பொருளாட்சியின் மையமும், புதிய ஏற்பாட்டிலுள்ள வெளிப்பாட்டின் மைய எண்ணமுமாகும்.
தெய்வீகக் குமாரத்துவத்திற்காக நாம் பரிசுத்தமாக்கப்படுதல் உச்சநிலையாக பரிசுத்த நகரமும் (வெளி 21:2, 10), தெய்வீகக் குமாரத்துவத்தின் முழுமொத்தமுமாகிய புதிய எருசலேமில் முழுநிறைவடைகிறது (வ. 7); இது மூவொரு தேவனின் கூட்டு வெளியாக்கத்திற்காக, மகிமைக்காக (வவ. 11, 23) ஒரு மாபெரும், கூட்டு தேவ-மனிதனை ஆதாயப்படுத்த மனிதன் ஆவியானவரில் தேவனாகுமாறு (வவ. 3, 22) தேவன் மாம்சத்தில் ஒரு மனிதனாக ஆகும் உச்சநிலை முழுநிறைவேற்றமாகும்.
ஜீவனின் அனுபவம்
தெய்வீகமான, குணரீதியான பரிசுத்தமாகுதல் ஜீவன்-தரும், பரிசுத்தமாக்கும், பேசும் ஆவியானவராகிய கிறிஸ்துவால் நிறைவேற்றப்படுகிறது. ஜீவன்-தரும் ஆவியாகக் கிறிஸ்து வார்த்தையிலுள்ள தண்ணீரின் கழுவுதலின்படி சபையைச் சுத்திகரிப்பதன்மூலம் சபையைப் பரிசுத்தமாக்குகிறார்; சபை பரிசுத்தமாகவும் மாசற்றதாகவும் இருக்குமாறு நாம் இப்போது இத்தகைய ஒரு கழுவும் வழிமுறையில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும், காலையும், மாலையும், நாம் வேதத்திடம் வந்து வார்த்தையிலுள்ள தண்ணீரின் கழுவுந்தொட்டியால் சுத்திகரிக்கப்பட வேண்டும்.
நாம் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுகிற ஒரு காரியம், கர்த்தர் இன்று நம்மிடம் தனிநபர்ரீதியிலும் நேரடியாகவும் பேசுகிறார் என்பதாகும்; ஜீவனில் உண்மையான வளர்ச்சி நாம் தேவனிடமிருந்து நேரடியாக வார்த்தையைப் பெறுவதைச் சார்ந்துள்ளது. அவர் பேசும்போதெல்லாம், நமக்குள் அவரது பிரசன்னத்தை நாம் உணர்ந்தறிகிறோம்; கிறிஸ்துவின் பேசுதல் ஜீவன் தரும் ஆவியின் பிரசன்னமாக இருக்கிறது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நடபடிகள் 26:18 தேவனுடைய பொருளாட்சியின் பரலோக தரிசனத்தின்படி சேவிக்க நமக்கான தெய்வீக ஆணையின் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துகிறது; நாம் மற்றவர்களை இந்த அனுபவம் மற்றும் நிஜத்திற்குள் கொண்டுவருமாறு அவற்றை நம் அனுபவமாகவும் நிஜமாகவும் ஆக்குமாறு கர்த்தரிடம் கேட்டு, நாம் இந்தக் காரியங்களைக் குறித்து ஜெபிக்க வேண்டும்.
கிறிஸ்துவையும், கிறிஸ்துவின் சரீரத்தையும், தெய்வீகப் பொருளாட்சிக்கான தெய்வீகப் பகிர்ந்தளிப்பையும் அதிகமதிகமாகப் புரிந்துகொள்ளவும், பார்க்கவும் ஞானமும் வெளிப்பாடுமுள்ள ஆவிக்காக நாம் தொடர்ச்சியாக ஜெபிக்க வேண்டும். நம் எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒரு முழுமையான மன்னிப்பைப் பெற நாம் கர்த்தரிடம் செல்ல வேண்டும்.
நாம் அனுபவித்துமகிழ்வதுபோல மக்களும் கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்ந்து, தங்கள் ஆவியைப் பயிற்சிசெய்வதன்மூலம் தேவனுடைய பரிசுத்த சுபாவத்தைக்கொண்டு குணரீதியில் பரிசுத்தமாக்கப்படுமாறு, சபை வாழ்க்கையில் நாம் அவர்களை சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின் அனுபவமகிழ்ச்சிக்குள் கொண்டுவர வேண்டும்.