நீதியின் கிரீடமாகக் கிறிஸ்துவை வெகுமதியாய்ப் பெற்றுக்கொள்ள நல்ல போராட்டத்தைப் போராடுதலும், ஓட்டத்தை முடித்தலும், விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுதலும், கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூர்தலும்.
செய்தி 1
நல்ல போராட்டத்தைப் போராடுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
2 தீமோ 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
1 தீமோ. 1:18-19. என் பிள்ளையாகிய தீமோத்தேயுவே, முன்னதாக உன்னைக் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின்படியே நான் உனக்கு இந்தக் கட்டளையை ஒப்புவிக்கிறேன்; அந்தத் தீர்க்கதரிசனங்களினால் நீ நல்யுத்தத்திலே யுத்தம்செய்யும்படி உனக்கு இதை ஒப்புவிக்கிறேன்.
1 தீமோ. 6:12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு; நித்திய ஜீவனைப் பற்றிக்கொள், இதற்கே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சியாளர்களுக்கு முன்பாக நல்ல அறிக்கையும் பண்ணியிருக்கிறாய்.
பசிதூண்டும் வார்த்தை
ஏன் பவுல் தீமோத்தேயுவை நல்ல போராட்டத்தை போராட வலியுறுத்துகிறான்?
பவுலின் முதல் சிறையிருப்பின்போது, சபைகள் அநேக சோதனைகளை சந்தித்தன, அது சரிவு மற்றும் சீரழிவின் தொடக்கத்தை வெளிப்படுத்தியது. இந்த சரிவானது முற்றுமுடிய ஊழியத்திலிருந்து வேறுபடுகின்ற போதனைகளான, வேற்றுமையான போதனைகளால் ஆனது. பவுல் தீமோத்தேயுவை நல்ல போராட்டத்தை போராட கட்டளையிட்டதற்கு இதுவே காரணமாக இருக்கிறது.
விசுவாசத்தைவிட்டு திசைதிரும்புவதற்கு எதிராகப் போராடும்படி, அதாவது, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடும்படி பவுல் தீமோத்தேயுவுக்குக் கட்டளையிட்டான். விசுவாசத்திற்காகப் போராடுவதென்றால், தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சிக்காகப் போராடுவதாகும். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவதென்றால், தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின்படி முழுமையான சுவிசேஷத்தின் உள்ளடக்கங்களுக்காகப் போராடுவதாகும்.
ஆவிக்குரிய பாரம்
இரண்டு தீமோத்தேயு 4:7இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, ஒரு நேர்த்தியான கிறிஸ்தவ வாழ்க்கை மும்மடங்கானது; இது நல்ல போராட்டத்தைப் போராடுவதையும், ஓட்டத்தை ஓடி முடிப்பதையும், விசுவாசத்தைக் காத்துக்கொள்வதையும் உள்ளடக்குகிறது.
கிறிஸ்துவையும் சபையையும் பற்றிய தேவனுடைய பொருளாட்சியைப் போதிப்பதும் பிரசங்கிப்பதுமே நல்யுத்தம் செய்வதாகும். கிறிஸ்தவ வாழ்க்கையில் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடுவதற்கு, நாம் நம் மனித ஜீவனில் நம்பிக்கை வைக்காமல், இந்தத் தெய்வீக ஜீவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
இரண்டு தீமோத்தேயு 4:7இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, ஒரு நேர்த்தியான கிறிஸ்தவ வாழ்க்கை மும்மடங்கானது; இது நல்ல போராட்டத்தைப் போராடுவதையும், ஓட்டத்தை ஓடி முடிப்பதையும், விசுவாசத்தைக் காத்துக்கொள்வதையும் உள்ளடக்குகிறது.
“நல்ல போராட்டத்தை போராடினேன்”; விசுவாசத்தைவிட்டு திசைதிரும்புவற்கு எதிராகப் போராடும்படி, அதாவது, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடும்படி பவுல் தீமோத்தேயுவுக்குக் கட்டளையிட்டான். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவதென்றால், தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின்படி முழுமையான சுவிசேஷத்தின் உள்ளடக்கங்களுக்காகப் போராடுவதாகும்.
ஜீவனின் அனுபவம்
1 தீமோத்தேயு 6:12இல் பவுல், “நித்திய ஜீவனைப் பற்றிக்கொள், இதற்கே நீ அழைக்கப்பட்டாய்” என்று கூறுகிறான். நித்திய ஜீவன் என்பது இறுதி நிறைவேற்றம் மற்றும் வழிமுறையினுடாக மூவொரு தேவன் நம் ஜீவனாக மாறுவதாகும்.
தேவனுடைய நித்திய ஜீவன், கிறிஸ்துவில் எல்லா விசுவாசிகளுக்கும் தரப்படுகிறது (1 தீமோ. 1:16), அது, நமக்குத் தரப்பட்ட தெய்வீகக் கிருபையின் பிரதான மூலக்கூறாகவும் இருக்கிறது (ரோ. 5:17, 21). இந்த ஜீவன் மரணத்தை வென்றுவிட்டது (அப். 2:24), மேலும் மரணத்தை விழுங்கிவிடும் (2 கொரி 5:4)
பயிற்சி மற்றும் பிரயோகம்
கிறிஸ்தவ வாழ்க்கையில் விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடுவதற்கு, நாம் நம் மனித ஜீவனில் நம்பிக்கை வைக்காமல், இந்தத் தெய்வீக ஜீவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
நாம் தேவனுடைய சத்தியத்தைக் கனம்பண்ண வேண்டும், சத்தியத்தின் வழியை எடுக்க வேண்டும், எவ்விதத்திலும் சத்தியத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது. சத்தியம் நமக்குள் வந்து, நம் ஆள்தத்துவத்திற்குள் கட்டியமைக்கப்பட நாம் அனுமதிக்க வேண்டும். நாம் இருக்கும் இடத்தைவிட உயர்வான காரியங்களைப் போதிக்கவும் பிரசங்கிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 விசுவாசத்தில் தேவனுடைய பொருளாட்சி (1 தீமோ. 1:3-4, எபே. 1:10)
(விசுவாசத்தில் தேவனுடைய பொருளாட்சி எவ்வாறு தேவனின் வீட்டு நிர்வாகமாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தேவனுடைய பொருளாட்சி மற்றும் வேற்றுமையான போதனைகள் (1 தீமோ. 1:3-4)
(“தேவனுடைய பொருளாட்சி விசுவாசத்தில் இருக்கிறது” என்பதின் அர்த்தம் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 அப்போஸ்தலர்களின் ஊழியத்தின் மையத்துவம் (அப். 2:42)
(எவ்வாறு சபையின் சீரழிவு மற்றும் சரிவுக்கு ஒரே வேர் உள்ளது என்பதை எடுத்துரையுங்கள்: அப்போஸ்தலர்களின் ஊழியத்திலிருந்து வேறுபடும் போதனைகள்)
த2 சபையின் சரிவுக்கான விதையாக வேற்றுமையான போதனைகள் (அப். 2:42, 1 தீமோ. 1:18)
(எவ்வாறு கிறிஸ்துவையும் சபையையும் பற்றிய தேவனுடைய பொருளாட்சியை போதிப்பதும் பிரசங்கிப்பதும் ஒரு நல் யுத்தம் செய்வதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 விசுவாசத்திற்காகப் போராடுவது (1 தீமோ. 6:12, 19)
(விசுவாசத்தில் நல்ல போராட்டத்தை போராட, தேவனுடைய ஜீவனைப் பற்றிக்கொள்ள எவ்வாறு கோருகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நித்திய ஜீவனால் ஒரு மனித வாழ்க்கை வாழ்தல் (1 தீமோ. 6:12, 19)
(மக்களை நித்திய ஜீவனிலிருந்து விலக்கிவைப்பதன் மூலம், எதிரியின் தந்திரம் அவர்களை எவ்வாறு விசுவாசத்திலிருந்து திசைதிருப்புகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 சுற்றுச்சூழல் எவ்வாறு மாறினாலும் நித்தியஜீவன் அப்படியே நிலைத்திருக்கிறது (2 தீமோ. 1:1, 10)
(இரண்டு தீமோத்தேயு 1:1இல் குறிப்பிடப்பட்டுள்ள ஜீவனில் எந்தெந்த பாதுகாக்கும் எட்டு அடிப்படை மூலக்கூறுகள் உள்ளடங்கியுள்ளன என்பதை எடுத்துரையுங்கள்.)
த2 தேவனுடைய நித்திய ஜீவன் கிறிஸ்துவில் எல்லா விசுவாசிகளுக்கும் தரப்படுகிறது (1 தீமோ. 1:16)
(சபையின் சீரழிவில் மரணம் மற்றும் குழப்பத்தை எதிர்கொள்ள, 2 தீமோத்தேயுவில் அப்போஸ்தலன் எந்த மூன்று காரியங்களை வலியுறுத்துகிறான் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 நல்ல போர்வீரர்களாக இருத்தல், நல்ல போராட்டத்தைப் போராடுதல் (2 தீமோ. 2:3, 1 தீமோ. 6:12)
(தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின்படி விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவது என்பது, எவ்வாறு முழுமையான சுவிசேஷத்தின் உள்ளடக்கங்களுக்காகப் போராடுவதாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 நாம் வெளிச்சத்தில் நடக்கும்போது நிஜத்திற்கு அடுத்த நிஜத்தை நாம் பார்க்கிறோம் (1 யோவான் 1:6)
(நாம் இருளில் இருக்கும்போது எவ்வாறு எதுவும் நமக்கு நிஜமல்ல என்பதை எடுத்துரையுங்கள்.)
நாள் 6
த1 நிஜம் என்பது பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும், ஆவியானவராகிய தேவனும், தெய்வீக வார்த்தையுமாகும் (யோவான் 17:17).
(கர்த்தருடைய வேலையை செய்கின்ற ஒவ்வொருவரும் சத்தியத்தின் கலப்பற்ற தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்.)
த2 சத்தியமே முற்றுமுழுமையானது (யோவான் 17:17)
(வேதாகமத்தில் உள்ள அனைத்து சத்தியமும் எவ்வாறு மனிதனின் சுதந்திரமாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)