Tamil – Prophesying Outline ICSC Week 05

கர்த்தருடைய வருகைக்காக நம்மை
ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்

செய்தி 5

புத்துயிரூட்டப்படும் வாழ்க்கை வாழ்தல் மற்றும் மேய்த்துப்பேணும் உழைப்பு ஆகியவற்றின்மூலம் கர்த்தரின் வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்

2 கொரி. 4:16. ஆகையால் நாங்கள் மனந்தளராதிருக்கிறோம்; மாறாக எங்கள் புறம்பான மனிதன் சிதைந்துகொண்டிருந்தாலும், எங்கள் உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டுவருகிறான்.

யோவான் 21:15-16. அப்போது அவர்கள் காலை உணவு புசித்த பிறகு, இயேசு சீமோன் பேதுருவிடம், யோவானின் குமாரனாகிய சீமோனே, இவர்களைவிட நீ என்னிடம் அதிகமாய் அன்புகூர்கிறாயா? என்றார். அவன் அவரிடம், ஆம் கர்த்தாவே, நாம் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர் என்றான், அவர் அவனிடம் என் செம்மறிக்குட்டிகளுக்கு உணவளி என்றார். மீண்டும் இரண்டாம் முறையாக அவர் அவனிடம், யோவானின் குமாரனாகிய சீமோனே, என்னிடம் அன்புகூர்கிறாயா? என்றார். அவன் அவரிடம், ஆம் கர்த்தாவே, நாம் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர் என்றான், அவர் அவனிடம், என் செம்மறிகளை மேய்த்துப்பேணு என்றார்

 

பசிதூண்டும் வார்த்தை

கர்த்தருடைய வருகைக்கு நம்மை தயார் செய்துகொள்வதன் மூலம் எவ்வாறு நாம் வெற்றியை நாம் பராமரிக்க முடியும்?

கர்த்தரின் வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ள, புத்துயிரூட்டப்படும் வாழ்க்கை, அதாவது, நாள்தோறும் புதிதாக்கப்படும் வாழ்க்கை வாழ்வதின்மூலம், நம் வெற்றியைப் பராமரிக்க வேண்டும். இந்தப் புதிதாகுதல் ஒவ்வொரு காலையிலும் பசுமையாக்கப்பட வேண்டும்

கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ள, கிறிஸ்துவின் சரீரத்தில் விளைவுறும் சபையாயிருக்கிற தேவனுடைய மந்தைக்கு அக்கறைசெலுத்தும்படி, கிறிஸ்துவின் செம்மறிக்குட்டிகளுக்கு உணவளித்து, அவரது செம்மறிகளை மேய்த்துப்பேண, நாம் அவருடைய பரலோக ஊழியத்தில் பங்குபெறுவதன்மூலம், நம் வெற்றியைப் பராமரிக்க வேண்டும்.

 

ஆவிக்குரிய பாரம்
கர்த்தரின் வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ள, நம் இரட்சகர் கிறிஸ்துவின் தேடுகின்ற மற்றும் மேய்த்துப்பேணுகின்ற ஆவியும், நம் பிதாவாகிய தேவனின் அன்புகூருகின்ற மற்றும் மன்னிக்கிற இருதயமும், மேய்த்து போபேணுகின்ற உழைப்பும் மற்றும் நாள்தோறும் புதிதாக்கப்படுகின்ற புத்துயிரூட்டப்பட்ட வாழ்க்கையும் நமக்கு வேண்டும்

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

கர்த்தரின் வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ள, புத்துயிரூட்டப்படும் வாழ்க்கை, அதாவது, நாள்தோறும் புதிதாக்கப்படும் வாழ்க்கை வாழ்வதின்மூலம், நம் வெற்றியைப் பராமரிக்க வேண்டும் 2 கொரி. 4:16-18); இந்தப் புதிதாகுதல் ஒவ்வொரு காலையிலும் பசுமையாக்கப்பட வேண்டும்

கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ள, கிறிஸ்துவின் சரீரத்தில் விளைவுறும் சபையாயிருக்கிற தேவனுடைய மந்தைக்கு அக்கறைசெலுத்தும்படி, கிறிஸ்துவின் செம்மறிக்குட்டிகளுக்கு உணவளித்து, அவரது செம்மறிகளை மேய்த்துப்பேண, நாம் அவருடைய பரலோக ஊழியத்தில் பங்குபெறுவதன்மூலம், நம் வெற்றியைப் பராமரிக்க வேண்டும்.

 

ஜீவனின் அனுபவம்

நாம் பாடுகளின் மத்தியில் இருக்கும்போது அவரது புதிதாக்குதலை அனுபவிக்குமாறு, ஒவ்வொரு காலையிலும் நாம் கர்த்தரின் புதிதான மனதுருக்கங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், நாம் எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே இருந்துவிடுவோம், நாம் கடந்துசெல்லும் பாடு வீணாகிவிடும்.

பொன் விளக்குத்தண்டுகளாகிய சபைகளுக்கு அக்கறை செலுத்துவதில் பரமேறிய கர்த்தர் “நடக்கும் கிறிஸ்துவாகவும் “பேசும் ஆவியானவராகவும்’ இருக்கிறார்; சபைகள் நடுவே அவர் நடப்பதின்மூலம், ஒவ்வொரு சபையின் நிலைமையையும் அறிந்துகொள்கிறார், அதன் பின்னர், சபையிலுள்ள எல்லா பரிசுத்தவான்களையும் தம் ஜெயங்கொள்பவர்களாக ஆக்கும் குறிஇலக்கோடு அவர்கள் வளர்ச்சிதை ரீதியிலும் ஜீவாதாரமாகவும் மறுசாயலாக்கப்படும்படி தாம் பார்த்தவற்றின் அடிப்படையில் அவர் நம்மிடம் பேசுகிறார்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

ஒவ்வொரு நாளும் புதிய துவக்கத்தை கொண்டிருப்பதற்கு அதிகாலையில் நாம் கர்த்தரை அனுபவிக்கும் மகிழ வேண்டும்.கிறிஸ்து நம் பாவ நிவாரண பலியாக இருப்பதன் அடிப்படையில், நாம் ஒவ்வொரு காலையிலும் அவரை நம் தகன பலியாகவும் சமாதான பலியாகவும் ஏறெடுக்க வேண்டும், இதன்மூலம் நாம் ஒரு புதிய ஆரம்பத்தைப் பெறலாம்; நாம் இதை ஒவ்வொரு நாளும் செய்வது மட்டுமல்ல, இனிமையோடும் ஆழமாகவும் செய்ய வேண்டும்.

தேவனுடைய மந்தைக்கு அக்கறை செலுத்த பாலூட்டும் தாயாகவும் அறிவுறுத்துகிற தகப்பனாகவும் பரிசுத்தவான்களை மேய்த்துப்பேணிய அப்போஸ்தலனாகிய பவுலின் மாதிரியின்படி நாம் மக்களை மேய்த்துப்பேணவேண்டும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 புதிதாக்கப்படும் வாழ்க்கையை பயிற்சி செய்தல் மற்றும் மேய்த்துப்பேணுதலில் உழைத்தல் (2 கொரி. 4:16-18; யோவா.21:15-17)

(கர்த்தரை நோக்கிய அன்பின் வேலையும் ஜீவனுமே நம்மை வெற்றியில் பராமரிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நாம் வெற்றி என்ற நிலையிலிருந்து யுத்தம் செய்கிறோம். நாம் வெற்றி பெற யுத்தம் செய்யவில்லை (யோவான் 14:30; 1 யோவான் 3:8)

(சாத்தான் தோற்கடிக்கப்பட்டான், நாம் கிறிஸ்துவில் ஜெயம் கொண்டிருக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2

த1 ஒவ்வொரு காலையிலும் புத்துயிரூட்டப்படவும் ஒரு புதிய தொடக்கத்தை பெறவும் நாம் சூரியனை பின்பற்ற வேண்டும் (நீதி. 4:18; மத். 13:43)

(புறம்பான செயல்களிலோ வெளியாக்கத்திலோ உள்ள புதிதாக்குதலுக்கு மாறான இன்று நமக்கு இவ்விதமான உள்ளான ஜீவனுள்ள புதிதாக்குதல் தேவை என்பதை எடுத்துரைங்கள்)

த 2 காலைதோறும் எழுப்புதலை தான் பவுல் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுதல் என்று விவரிக்கிறான்( 2 கொரி. 4:16)

(புதிய துவக்கத்தை மற்றும் புதிய புத்துயிரை பெறுவதற்கு எவ்வாறு நாம் பயிற்சி செய்ய முடியும் என்பதை எடுத்துரைங்கள்)

 

நாள் 3
த1 பலிபீடம் தேவனின் பிரசன்னமாகுதலின் அடிப்படையில் உள்ளது (ஆதி. 12:7)

(அர்ப்பணம் மனிதனின் உந்துதல் அல்லது தூண்டுவின் விளைவல்ல, மாறாக தேவனின் வெளிப்பாட்டின் விளைவு என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பலிபீடத்தின் விளைவு கூடாரத்தில் இருக்கிறது (ஆதி. 12:8)

(பலிபீடத்தின் மூலம் தேவன் நம்முடன் இடைபடுகிறார்; கூடாரத்தின் மூலம் தேவன் நம் உடைமைகளுடன் இடைபடுகிறார் என்பதை எடுத்துரைங்கள்)

 

நாள் 4

த1 புதிதாகுதலைப் பெறும்படி நமக்கு உதவ தேவனிடம் சிறந்த ஏற்பாடுகள் உள்ளன (தீத்து 3:5; எபே. 4:23)

(புதிதாகுதலைப் பெறும்படி நமக்கு உதவ தேவனிடமுள்ள நான்கு ஏற்பாடுகள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்.)


த2 நாள்தோறும் புதிதாக்கப்படும் நிஜத்திற்குள் அதிகமாக நாம் நுழைய வேண்டும் (அப். 24:16; எபே. 4:32)

( எதிர்மறையான எதுவும் பழமைக்கான ஒரு காரணமும் காரணமாக இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள். )

 

நாள் 5

த1 சுவிசேஷத்தை பிரசங்கிப்பது பாவிகளுக்குரிய உச்சகட்ட மேய்த்துப் பேணுதல் ஆகும் (லூக்கா 19:1, 5; யோவான் 4:4)

(முதல் சுவிசேஷ பிரசங்கியாரான, கிறிஸ்து, மேய்த்துப்பேணுதலின் மூலம் தம் ஊழியத்தை நிறைவேற்றினார் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்து அவருடைய மனுஷீகத்தில் நம்மை சீராட்டுகிறார். கிறிஸ்து அவருடைய தெய்வீகத்தில் நம்மை போஷிக்கிறார்

(கிறிஸ்து அவருடைய மனுஷீகத்தில் மற்றும் தெய்வீகத்தில் எவ்வாறு நம்மை சீராட்டுகிறார் போஷிக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 மக்களைச் சென்று சந்திப்பதன் மூலம் அவர்களை மேய்த்துப்பேணுவதற்கான வழி (1 கொரி . 9:22; 2 கொரி. 11:29)

(தேவனுடைய மந்தையை கவனித்துக் கொண்ட ஒரு நல்ல மேய்ப்பராகிய பவுலின் முன்மாதிரியை எடுத்துக்காட்டுகளோடு எடுத்துரையுங்கள்)

த2 வீடு வீடாக பரிசுத்தவான்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்தல் (அப்.20:20, 27, 31, 35)

(பவுல் பகிரங்கமாக பேசுவதோடு மட்டுமல்லாமல், பரிசுத்தவான்களின் வீடுகளையும் சென்று சந்தித்தான் என்பதை எடுத்துரையுங்கள்)