Tamil – Prophesying Outline ICSC Week 02

கர்த்தருடைய வருகைக்காக நம்மை
ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்

செய்தி 2

முதிர்ச்சிக்கென்று ஜீவனில் வளர்வதன் மூலம் கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பிலுள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

எபி. 6:1-2 நாம் கிறிஸ்துவின் ஆரம்ப வார்த்தையைவிட்டு… முதிர்ச்சியை நோக்கிக் கொண்டுவரப்படுவோமாக

கொலோ. 1:28-29 எந்த மனிதனையும் கிறிஸ்துவில் முழுவளர்ச்சியடைந்தவனாக வழங்கும்படி, சகல ஞானத்திலும் எந்த மனிதனுக்கும் அறிவுறுத்தி, எந்த மனிதனுக்கும் போதித்து, அவரை அறிவிக்கிறோம். அதற்காகவே நான், என்னில் வல்லமையாய்க் கிரியைசெய்யும் அவருடைய கிரியைசெய்தலின்படியே போராடி உழைக்கிறேன்.

 

பசிதூண்டும் வார்த்தை

முதிர்ச்சிக்கென்று ஜீவனின் வளர்தல் என்பதன் அர்த்தம் என்ன?

முதிர்ச்சிக்கென்று வளர்வதென்றால், கிறிஸ்து நம் ஜீவனாக நம்மில் வாழ்கிறார் என்றும் அவர் நம்மில் உருவாக்கப்படுகிற அளவிற்கு அவர் தொடர்ச்சியாக நம்மில் வளர்கிறார் என்றும் அர்த்தம். கிறிஸ்து நம்மில் முழுமையாக உருவாக்கப்படும்போது நாம் அவரது ஜீவனில் முதிர்ச்சியடைவோம்


ஆவிக்குரிய பாரம்

எடுத்துக்கொள்ளப்படுவதற்கு ஆயத்தமாக இருப்பதற்கு, நமக்கு ஜீவனின் முதிர்ச்சி தேவை. முதிர்ச்சியடைதல் ஒரே இரவில் நிகழும் காரியமல்ல; கர்த்தருடைய பிரசன்னமாகுதலில் எடுத்துக்கொள்ளப்படும்படி நாம் முதிர்ச்சியடையுமாறு, நாம் நம்மையே ஆயத்தப்படுத்தவும், அவரை அன்புகூரவும், அவரில் வளரவும் வேண்டும்.

நாம் ஒருபோதும் நம்மில் நாமே மனநிறைவடைந்துவிடாமல், கிறிஸ்துவின் ஜீவனில் வளர்ந்து, முதிர்ச்சியடைவதை ஆசையாய்ப் பின்தொடரவேண்டும்: நாம் பின்னானவற்றை மறந்து முன்னானவற்றை நாடி, ஆயிர வருட இராஜ்ஜியத்திலுள்ள கிறிஸ்துவின் முற்றும் முழுமையான அனுபவமகிழ்ச்சிக்காகக் கிறிஸ்துவை முழுக்க முழுக்க அனுபவித்துமகிழ்வதையும் அவரை ஆதாயம்பண்ணுவதையும் ஆசையாய்த் தேடி, முதிர்ச்சிக்கு முன்செல்லவேண்டும், முதிர்ச்சிக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.


தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

யாக்கோபு தன் நிருபத்தில், பூமியின் மதிப்புவாய்ந்த பலனுக்காக நீடிய பொறுமையுடன் காத்திருக்கும் விவசாயியின் உதாரணத்தைப் பயன்படுத்துகிறான்.

முதிர்ச்சியடைவதென்றால் கிறிஸ்து நம்மில் உருவாக்கப்படுவதாகும்.

ஒரே புதிய மனிதனுக்காக எந்த மனிதனையும் கிறிஸ்துவில் முதிர்ச்சியடைந்த, முழுவளர்ச்சியடைந்த மனிதனாக வழங்குவதே பவுலினுடைய ஊழியத்தின் இலக்கு.

எடுத்துக்கொள்ளப்படுவதற்கு ஆயத்தமாக இருப்பதற்கு, நமக்கு ஜீவனில் முதிர்ச்சி தேவை.

 

ஜீவனின் அனுபவம்

நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசித்தபோது அவர் நம்மில் பிறந்தார் (யோவா. 3:6, 15-16), நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் அவர் நம்மில் வாழ்கிறார் (கலா. 2:20), நம் முதிர்ச்சியில் அவர் நம்மில் உருவாக்கப்படுவார் (4:19)

நாம் தேவனைக்கொண்டு நிரப்பப்படுவதற்கான அதிகரிக்கப்பட்ட கொள்திறனை உடையவர்களாய் இருக்குமாறு, நம்மை நிரப்பியிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம்மை வெறுமையாக்கவும், ஒவ்வொரு முன்ஆக்கிரமிப்பையும் அப்புறப்படுத்தவும் தேவன் நபர்களையும், காரியங்களையும், நிகழ்வுகளையும் இறையாண்மையுடன் பயன்படுத்துவார்.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

நாம் ஒருபோதும் நம்மில் நாமே மனநிறைவடைந்துவிடாமல், கிறிஸ்துவின் ஜீவனில் வளர்ந்து, முதிர்ச்சியடைவதை ஆசையாய்ப் பின்தொடரவேண்டும்: நாம் பின்னானவற்றை மறந்து முன்னானவற்றை நாடி, ஆயிரவருட இராஜ்ஜியத்திலுள்ள கிறிஸ்துவின் முற்றும் முழுமையான அனுபவமகிழ்ச்சிக்காகக் கிறிஸ்துவை முழுக்க முழுக்க அனுபவித்துமகிழ்வதையும் அவரை ஆதாயம்பண்ணுவதையும் ஆசையாய்த் தேடி, முதிர்ச்சிக்கு முன்செல்லவேண்டும், முதிர்ச்சிக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

நாம் பெற்றிருக்கும் தெய்வீக ஜீவனின் கோரிக்கையின் காரணமாகவும், கர்த்தர் மீதான நம் அன்பின் தீவிரத்தின் காரணமாகவும், நாம் கர்த்தரின் வருகைக்குக் காத்திருக்கும் ஒரு வாழ்க்கையை ஆவலாய்ப் பின்தொடர வாஞ்சிக்கிறோம். கர்த்தருடைய பிரசன்னமாகுதலில் எடுத்துக்கொள்ளப்படும்படி நாம் முதிர்ச்சியடையுமாறு, நாம் நம்மையே ஆயத்தப்படுத்தவும், அவரை அன்புகூரவும், அவரில் வளரவும் வேண்டும்.

 

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1

த1 கர்த்தருடைய வருகைக்கு நம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் தேவை (வெளி.14:4; யாக். 5:7)

(எப்படி ஒரு விவசாயினால் தன் பயிர்கள் விளையும்வரை அவற்றை அறுவடைசெய்ய முடியாதோ, அதுபோல கர்த்தராகிய இயேசுவும் ஒரு கணிசமான எண்ணிக்கையிலான தம் விசுவாசிகள் முதிர்ச்சியடையும்வரை திரும்பிவரமாட்டார் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பூமியின் மதிப்புவாய்ந்த பலனுக்காக நீடிய பொறுமையுடன் காத்திருக்கும் விவசாயி (வெளி. 14:4; யாக். 5:7)

(நாம் அவருடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், கர்த்தர் நிஜமான விவசாயியாக நம் முதிர்ச்சிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2
த1 முதிர்ச்சி என்பதற்கு ஜீவனின் நிறைவு என்று அர்த்தம் (எபி. 6:1; யோவா.1:10)

(நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பின்னர் நாம் தெய்வீக ஜீவனின் பூரணத்திற்கென்று வளர்ந்து முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 மறுசாயலாகுதல் என்பது நம் இயற்கை ஜீவனின் மாற்றமாகும் (ரோம. 12:2; 2 கொரி. 3:18; யோவா. 1:10)

(முதிர்ச்சி என்பது நாம் ஜீவனின் நிறைவை அடையும்வரை, தெய்வீக ஜீவன் மீண்டும் மீண்டும் நமக்குள் உட்பகிரப்படுகிற ஒரு காரியமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)


நாள் 3

த1 முதிர்ச்சியடைதல் என்பது கொள்திறனின் பெரிதாக்கத்தைப் பற்றிய காரியமாகும் (எபி. 12:10-11)

(ஜீவனில் முதிர்ச்சியடைதல், யாக்கோபின் பாடுகளின் அனுபவங்களோடு, பரிசுத்த ஆவியின் ஒழுங்குபடுத்துதலைப் பெற்றுக்கொள்வதன் கூட்டுமொத்தமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நமக்கு நிகழும் யாவும் நம் மறுசாயலாகுதல் மற்றும் முதிர்ச்சிக்கான தேவனின் இறையாண்மையின்கீழ் உள்ளன (ஆதி.32:25; 45:26)

(யாக்கோபின் அனுபவத்திலிருந்து நாம் எதைப் பார்க்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 முதிர்ச்சி அடைவதென்றால் கர்த்தர் நம்மில் முழுமையாக உருவாக்கப்படுவதாகும் (கலா. 4:19; ரோம. 8:29)
(நாம் தேவனுடைய சாயலைப் பெறுமாறு, நம்மில் வேலைசெய்வதே தேவனுடைய இரட்சிப்பின் குறிக்கோள் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 விசுவாசிகள் ஜீவனில் வளர்ந்து, இறுதியாக அவர்கள் கிறிஸ்துவைப்போல் இருக்கும்வரை முதிர்ச்சியடைவதே தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு (எபே. 4:13)

(இந்த வகையான இரட்சிப்பை தேவன் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 5

த1 கிறிஸ்துவினுடைய ஜீவனின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை நாடுதல் (பிலி. 3:13-15)

(பிலிப்பியர் 3: 12-15இன்படி, அப்போஸ்தலனாகிய பவுல் தான் கிறிஸ்துவின் ஜீவனில் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் எவ்வாறு நாடினான் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பரலோக பிதா ஜீவனில் பூரணமாய் இருக்கிறதுபோல் நாமும் பூரணமாய் இருக்கும்படி கர்த்தர் நமக்கு கட்டளையிடுகிறார் (மத். 5:48)

(பிதாவானவர் மற்றும் தெய்வீக ஜீவனால் அவரைப் போன்று ஜீவனில் நம்மை பூரணப்படுத்த முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 மற்றவர்களின் முழு வளர்ச்சிக்கென்று, கிறிஸ்துவில் முதிர்ச்சி அடையும்படியாக கிறிஸ்துவை அவர்களுக்கு உட்பகிர்தல் (கொலோ.1:28-29)

(நாம் சுவிசேஷம் பிரசங்கிக்கும்போது கிறிஸ்துவை மற்றவர்களுக்குள் உட்பகிரத் தவறினால், நம் சுவிசேஷப் பிரசங்கம் தேவனின் தரத்திலிருந்து குறைவாகவே இருக்கும் என்பதை எடுத்துரைங்கள்)

த2 நாம் கிறிஸ்துவை பரிசுத்தவான்களின் பங்காக அதிகமாக அனுபவமாக்க வேண்டும் (கொலோ. 1:12, 15)

(கிறிஸ்துவால் வாழ்வதை நாம் அனுபவமாக்காவிட்டால், கிறிஸ்துவால் வாழ வேறு யாருக்கும் நாம் உதவ முடியாது என்பதை எடுத்துரையுங்கள்)