கர்த்தருடைய வருகைக்காக நம்மை
ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்
செய்தி 1
கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூருவதன் மூலமும் தற்போதைய யுகத்தை அன்புகூராமல் இருப்பதன் மூலமும் கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுதல்
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்
2 தீமோ. 4:8 இதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது; அதை அந்நாளிலே நீதியான நியாயாதிபதியாகிய கர்த்தர் எனக்குக் கைம்மாறாகத் தருவார், எனக்கு மட்டுமல்லாமல், அவருடைய பிரசன்னமாகுதலை அன்புகூரும் எல்லாருக்கும் தருவார்.
1 யோவான் 2:15 உலகத்திடமோ உலகத்தில் உள்ளவற்றிடமோ அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்திடம் அன்புகூர்ந்தால், பிதாவுக்கான அன்பு அவனில் இல்லை.
பசிதூண்டும் வார்த்தை
கர்த்தருடைய வருகைக்காக, நம்மை நாம் எவ்வாறு ஆயத்தமாக்கிக்கொள்ள முடியும்?
தேவனுடைய பிரசன்னமாகுதலை அன்புகூருவதன் மூலம் மற்றும் தற்போதைய யுகத்தை அன்பு கூறாமலிருப்பதன் மூலம் கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ளுதல். கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுமாறு , கர்த்தராகிய இயேசுவை அன்புகூர்ந்து, அவரை நம் ஜீவனாக எடுத்துக்கொண்டு, அவரை வாழ்ந்து, அவரைப் பெரிதாக்கிக் காட்டுகிறவர்களாக, நாம் அவருடைய வருகைக்காக காத்திருக்கவும், அவரது பிரசன்னமாகுதலை அன்புகூரவும் வேண்டும். இது நம் இருதய வாஞ்சையாகவும் நம் வாழ்க்கையாகவும் இருக்க வேண்டும்.
“உலகத்திடமோ உலகத்தில் உள்ளவற்றிடமோ அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்திடம் அன்புகூர்ந்தால், பிதாவுக்கான அன்பு அவனில் இல்லை”. நாம் இந்தத் தற்போதைய யுகத்தை அன்புகூர்ந்தால், உலகத்தின் பட்சத்தில் நிற்போம்; நாம் கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூர்ந்தால், அவர் பட்சத்தில் நின்று, அவரது ஆவல்களுக்காக அவருடன் சேர்ந்து யுத்தம்செய்வோம்
ஆவிக்குரிய பாரம்
கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுமாறு , கர்த்தராகிய இயேசுவை அன்புகூர்ந்து, அவரை நம் ஜீவனாக எடுத்துக்கொண்டு, அவரை வாழ்ந்து, அவரைப் பெரிதாக்கிக் காட்டுகிறவர்களாக, நாம் அவருடைய வருகைக்காக காத்திருக்கவும், அவரது பிரசன்னமாகுதலை அன்புகூரவும் வேண்டும். இது நம் இருதய வாஞ்சையாகவும் நம் வாழ்க்கையாகவும் இருக்க வேண்டும்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
கர்த்தரின் இரண்டாம் வருகை நமக்கு விலையேறப்பெற்றதாக இருந்தால், நாம் அவரது பிரசன்னமாகுதலை அன்புகூருவோம்.
“உலகத்திடமோ உலகத்தில் உள்ளவற்றிடமோ அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்திடம் அன்புகூர்ந்தால், பிதாவுக்கான அன்பு அவனில் இல்லை”
கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூருவது தற்போதைய யுகத்தை அன்புகூருவதற்கு முரணாக உள்ளது.
கர்த்தரை அன்புகூர்ந்து, அவருடைய வருகைக்காகக் காத்திருந்து, அவரது பிரசன்னமாகுதலை அன்புகூர்பவர்கள் ஜெயங்கொள்வார்கள்.
ஜீவனின் அனுபவம்
தேவன் சிருஷ்டித்த மனிதனை அபகரிக்க அவரது எதிரியான சாத்தானோ, கலாச்சாரம், கல்வி, தொழில்துறை, வர்த்தகம், பொழுதுபோக்கு, மதம், ஆகியவற்றைக் கொண்டு மனிதர்களை முறைப்படுத்தி, இந்தப் பூமியில் தேவனுக்கு எதிரான ஓர் உலக அமைப்பை உருவாக்கினான். உலகம் பிதாவாகிய தேவனுக்கு விரோதமானது. உலகில் உள்ள காரியங்கள் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமானவை, உலகத்தை அன்புகூருகிறவர்கள் தேவனுடைய எதிரிகளாக இருக்கின்றனர்.
தற்போதைய யுகம் என்பது நம்மைச் சுற்றியுள்ள, கவர்ந்திழுக்கிற மற்றும் துண்டுகிற உலகத்தைக் குறிக்கிறது. நாம் இந்தத் தற்போதைய யுகத்தை அன்புகூர்ந்தால், உலகத்தின் பட்சத்தில் நிற்போம்; நாம் கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூர்ந்தால், அவர் பட்சத்தில் நின்று, அவரது ஆவல்களுக்காக அவருடன் சேர்ந்து யுத்தம்செய்வோம்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் வாழ வேண்டுமென்றால், தற்போதைய யுகத்தைப் பின்பற்றவோ, இந்த யுகத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கவோ, அதற்கு ஒத்துப்போகவோ கூடாது. கர்த்தரின் பிரசன்னமாகுதலை அன்புகூருகிற ஒரு வாழ்க்கை நாம் வாழ வேண்டும்; இது நம்மை ஊக்கமிழக்காதபடி செய்து, முடிவுவரை நம்பகமானவர்களாக நிலைத்திருக்கச் செய்கிறது.
கர்த்தருடைய வருகைக்காக நம்மை ஆயத்தமாக்கிக்கொள்ளுமாறு , கர்த்தராகிய இயேசுவை அன்புகூர்ந்து, அவரை நம் ஜீவனாக எடுத்துக்கொண்டு, அவரை வாழ்ந்து, அவரைப் பெரிதாக்கிக் காட்டுகிறவர்களாக, நாம் அவருடைய வருகைக்காக காத்திருக்கவும், அவரது பிரசன்னமாகுதலை அன்புகூரவும் வேண்டும். இது நம் இருதய வாஞ்சையாகவும் நம் வாழ்க்கையாகவும் இருக்க வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூர்தல், கர்த்தரையே அன்புகூர்தல் ஆகியவை பிரிக்கமுடியாதவை (2 தீமோ. 4:8)
(நாம் கர்த்தரை உண்மையாகவே அன்புகூர்ந்தால், நாம் அவரது பிரசன்னமாகுதலை அன்புகூர்ந்தாக வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கிரீடம், கர்த்தருடைய இரட்சிப்புக்கு கூடுதலாக, பந்தயத்தில் வெற்றிகரமாக ஓடுபவருக்கு ஒரு பரிசாகத் தரப்படுகிறது (1 கொரி . 9:25; எபே. 2:8-9)
(இந்தப் பரிசு கிருபையினாலோ விசுவாசத்தினாலோ ஆனதல்ல. மாறாக கிரியைகள் மூலம் நீதியாலானது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 பவுல், கர்த்தரின் திரும்பிவருதலுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தான் (பிலி. 3:20; வெளி. 22:20)
(1 தெசலோனிக்கேயரின் ஒவ்வொரு அதிகாரமும் கர்த்தரின் திரும்பி வருதலோடு முடிகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தரின் திரும்பிவருதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், நாம் அவருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ள வேண்டும் (லூக். 12:20; பிலி. 3:20)
(இந்தப் பூமியில் நமக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை நம் வாழ்க்கை சுட்டிக்காட்ட வேண்டும். நம்முடைய நம்பிக்கை வருகின்ற கர்த்தரில் உள்ளது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 3
த1 உலகம் என்பது சாத்தானால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தீய அமைப்பு (யோவான் 12:31)
(சிலுவையில் கர்த்தருடைய மரணம் சாத்தானிய உலகத்தை நியாயந்தீர்த்து, உலகத்தின் அதிபதியான சாத்தானை வெளியே தள்ளியது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 உலகத்தை அன்புகூராதிருப்பதே அந்த பொல்லாங்கனை ஜெயம் கொள்வதற்கான தளம்
(மத். 25:34; யோவான் 3:16; 1 பேது. 3:3; 1 யோவான் 2:15)
(கிரேக்க வார்த்தையில் “உலகம்” என்பதின் அர்த்தங்கள் என்ன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 முழு உலகமும் பொல்லாங்கனில் கிடக்கிறது (1 யோவான் 5:19)
(விசுவாசிகள் தேவனுடைய ஜீவனால் வாழ்ந்துகொண்டும், துடிப்பாக நகர்ந்துகொண்டும் இருக்கையில், முழு உலகமும் பொல்லாங்கனான சாத்தானின் அபகரிக்கிற மற்றும் சூழ்ச்சியுடன் கையாளுகிற கரத்தின்கீழ் செயலற்றுக் கிடக்கிறார்கள் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இறுதியில் எல்லாவற்றையும் அந்திக் கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தில் தன் தலைமைக்குக் கீழ்ப்படுத்த, சாத்தான் பொருள்ரீதியான உலகத்தையும், உலகத்தின் மனிதர்களையும், உலகத்திலுள்ள காரியங்களையும் பயன்படுத்திக்கொள்கிறான் (1 யோவான் 2:18, 22)
(நீங்கள் எங்கு சென்றாலும் கிறிஸ்தவர்கள் மத்தியில்கூட, உலகத்தைப் பற்றிய காரியங்களை உரையாடலின் தலைப்புகளாக இருக்கின்றன என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 5
த1 “யுகம்” மற்றும் “உலகம்” ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு (1 யோவான் 2:15; ரோ. 12:2)
(உலகம் என்பது மனிதனை அபகரிக்கிற சாத்தானால் பயன்படுத்தப்படும் முழு அமைப்பாகும். அதே நேரத்தில் ஒரு யுகம் என்பது அமைப்பின் ஒரு பகுதியாக உலகத்தின் ஒரு பிரிவாக இருக்கிறது என்பதை எடுத்து உரையுங்கள்)
த2 கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூர்வது தற்போதைய யுகத்தை அன்புகூர்வதற்கு முரணாக உள்ளது (2 தீமோ. 4:8, 10)
(நாம் கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூர்ந்தால், அவர் பட்சத்தில் நின்று, அவரது ஆவல்களுக்காக அவருடன் சேர்ந்து யுத்தம்செய்வோம். நாம் இந்தத் தற்போதைய யுகத்தை அன்புகூர்ந்தால், உலகத்தின் பட்சத்தில் நிற்போம் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 கர்த்தரை அன்புகூர்ந்து, அவருக்காக எல்லாவற்றையும் கைவிட்டவர்கள் அவரது வெகுமதியைப் பெறுமாறு, அவரது பிரசன்னமாகுதலையும் அன்புகூருகிறார்கள்
(2 தீமோ. 4:8; வெளி. 22:12)
(கர்த்தரை அன்புகூராமல், உலகத்தை அன்புகூருகிறவர்கள் அல்லது பாவத்தை நேசிப்பவர்கள் கர்த்தருடைய வருகையைக் குறித்துப் பயப்படுகிறார்கள் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)
த2 கர்த்தருடைய வருகையை அன்புகூர்வது என்பது கர்த்தருடைய பிரசன்னமாகுதலை அன்புகூர்வதாகும் (மத். 24:3; 1 கொரி. 16:22)
(நாம் கர்த்தரை அன்பு கூர்கிறோம் என்று நாம் பறைசாற்றும்போது நாம் அவரது வருகையை அன்புகூர்கிறோம் என்றும் அர்த்தம் என்பதை எடுத்துரையுங்கள்)