1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு
செய்தி 6
திரும்பிவந்த சிறைக்கைதிகள்
தூய்மையாக்கப்படுவதின் உள்ளார்ந்த உட்கருத்து
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்.
எஸ்றா 10:10-11. அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி… இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்
நெகே. 13:30. இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து…
2 தீமோ. 1:4 என் முற்பிதாக்கள் முதற்கொண்டு, நான் சுத்த மனச்சாட்சியில் சேவித்துவரும் தேவனுக்கு நன்றிசொல்கிறேன்.
பசிதூண்டும் வார்த்தை
திரும்பிவந்த சிறைக்கைதிகள் தூய்மையாக்கப்படுவதின் உள்ளார்ந்த உட்கருத்து என்ன?
எஸ்றா வருவதற்கு முன்பு, இஸ்ரயேலர்களில் சிலர் புறவின மனைவிகளைத் திருமணம்செய்திருந்தனர், அதோடு இந்தக் கலப்படத்திலிருந்து பிறந்த பிள்ளைகளும் அவர்களுக்கு இருந்தனர் என்பதால், அங்கே கலப்படம் இருந்தது; இது, எழுத்தின்படி அல்லாமல், ஆவிக்குரியரீதியில் பிரயோகிக்கப்பட வேண்டிய ஒரு மாதிரி.
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில், புறச்சமயத்தாருடைய எந்தக் காரியத்திலிருந்தும் “பரிசுத்த வித்தை” பிரிக்கத் தூய்மையாக்குதல் தேவை. வீட்டைக் கட்டியெழுப்பிய பிறகு, (எஸ்றாவின் தலைமையின்கீழ் காணப்படும்) தூய்மையாக்குதல் நமக்குத் தேவை, நகரம் கட்டியெழுப்பப்பட்ட பிறகு, (நெகேமியாவின் முற்றும்முடிவான தன்மையுடன் காணப்படும் விதத்தில்) நாம் மீண்டும் தூய்மையாக்கப்பட வேண்டும்.
ஆவிக்குரிய பாரம்
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் ஒப்பற்றது, அது எந்தவிதக் கலப்படமும் இல்லாமல், முற்றிலும் தூய்மையாகவும், ஒற்றையாகவும், பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும்; இவ்வாறு, ஒரு தூய்மையாக்கும் வேலையைச் செய்ய நமக்கு எஸ்றாக்களும், நெகேமியாக்களும் தேவை; கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் எல்லாப் படிகளிலும், தூய்மையாக்கப்படுதலுக்கான தேவை உள்ளது.
நாம் நிஜமான சபை வாழ்க்கையைப் பெற விரும்பினால், சபைதானே சுத்தப் பொன்னாக, அதாவது, முற்றிலும் தெய்வீக சுபாவத்தை உடையதாக இருக்க வேண்டும்; இங்கு நம்மைச் சுத்திகரிக்கவும், நம்மைத் தூய்மையாக்கவும் நமக்கு சிலுவையின் வேலை தேவை.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் ஒப்பற்றது, அது எந்தவிதக் கலப்படமும் இல்லாமல், முற்றிலும் தூய்மையாகவும், ஒற்றையாகவும், பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும்; இவ்வாறு, ஒரு தூய்மையாக்கும் வேலையைச் செய்ய நமக்கு எஸ்றாக்களும், நெகேமியாக்களும் தேவை; கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் எல்லாப் படிகளிலும், தூய்மையாக்கப்படுதலுக்கான தேவை உள்ளது. பாபிலோன், விக்கிரகங்களின் காரியங்களோடு தேவனுடைய காரியங்களின் கலப்படமாகும், பாபிலோனின் கோட்பாடு தேவனுடைய வார்த்தையுடன் மனிதனுடைய காரியங்களையும், ஆவியானவரின் காரியங்களுடன் மாம்சத்தின் காரியங்களையும் கலப்படம் செய்யும் கோட்பாடாகும்.
நடபடிகள் 21இலும் யாக்கோபின் புத்தகத்திலும், கலப்படம் உள்ளது; யாக்கோபு பழைய ஏற்பாட்டைப் புதிய ஏற்பாட்டுடனும், புதிய காலக்கட்டத்தைப் பழைய காலகட்டத்துடனும், தேவனுடைய புதிய மக்களை பழைய மக்களுடனும், புதிய மனிதனைப் பழைய மனிதனுடனும் கலப்படம் செய்தான்.
தேவனுடைய பிள்ளைகளிடையே உள்ள ஒரு மாபெரும் பிரச்சனை, ஆவியுடன் சுயத்தின் கலப்படமாகும். நாம் இருதயத்திலும், மனச்சாட்சியிலும், ஆவியிலும் தூய்மையாக இருக்க வேண்டும். புதிய எருசலேம் நகரம் தெளிவான கண்ணாடியைப் போன்று சுத்தப் பொன்னாக இருக்கிறது, நகரத்தின் ஒளிஊடுருவத்தக்க கண்ணாடியைப் போன்று சுத்தப் பொன்னாக இருக்கிறது.
ஜீவனின் அனுபவம்
தேவனைப் பார்ப்பது, தேவனை ஆதாயப்படுத்துவதற்குச் சமம்; தேவனை ஆதாயப்படுத்துவதென்றால் தேவனைக் கொண்டு கட்டியமைக்கப்படுமாறு, அவருடைய மூலக்கூறிலும் ஜீவனிலும் சுபாவத்திலும் தேவனைப் பெற்றுக்கொள்வதாகும்; தேவனைப் பார்ப்பது நம்மை மறுசாயலாக்குகிறது, ஏனென்றால், தேவனைப் பார்ப்பதில், நாம் அவரது மூலக்கூறை நம்முள் பெற்றுக்கொள்கிறோம். நம் பழைய மூலக்கூறு வெளியேற்றப்படுகிறது.
நாம் தேவனுடைய சுபாவத்தை நம் ஒப்பற்ற வழியாக எடுத்துக் கொண்டால், நாம் எந்தக் கலப்படமும் இல்லாமல், தூய்மையாகவும், எந்த ஒளிப்புகாததன்மையும் இல்லாமல், ஒளிஊடுருவத்தக்கதாகவும் இருப்போம். நாம் ஜீவன் தரும் ஆவியானவரைக் கொண்டு உட்செலுத்தப்பட்டு, பூரிதமாக்கப்பட்டால், நம் உள்ளான ஆள்தத்துவம் ஒளிஊடுருவத்தக்கதாகவும், படிகத்தெளிவாகவும் ஆகிவிடும்.
பயிற்சி மற்றும் பிரயோகம்
உள்ளூர் சபைகளில் நாம் எல்லாக் கலப்படத்திலிருந்தும் முற்றிலுமாகத் தூய்மையாக்கப்பட வேண்டும்; பொதுவான எதுவும், கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் பரலோக சுபாவத்திற்கு முரண்பாடான எதுவும், வெளியேற்றப்பட வேண்டும்.
நம் ஆவி விடுவிக்கப்படும்போது, அது மற்றவர்களுக்கு ஆபத்தாகவோ தொந்தரவு ஏற்படுத்துவதாகவோ இருக்காதவாறு, நம் ஆவியில் உள்ள எல்லாக் கலப்படத்துடனும் நாம் முழுமையாக இடைபட வேண்டும். நாம் தேவனால் பயன்படுத்தப்பட விரும்பினால், நம் ஆவி விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும், நம் ஆவி தூய்மையாக இருந்தாக வேண்டும்.
நாம் நிஜமான சபை வாழ்க்கையைப் பெற விரும்பினால், சபைதானே சுத்தப் பொன்னாக, அதாவது, முற்றிலும் தெய்வீக சுபாவத்தை உடையதாக இருக்க வேண்டும்; இங்கு நம்மைச் சுத்திகரிக்கவும், நம்மைத் தூய்மையாக்கவும் நமக்கு சிலுவையின் வேலை தேவை.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்
ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல் எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் முற்றிலும் தூய்மையாகவும் ஒற்றையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும் (எஸ்றா 1:10-11; நெகே. 13:30)
(உள்ளூர் சபைகளில் நாம் எந்தக் கலப்படமும் இல்லாமல் மிகவும் தூய்மையாக மிகவும் எளிமையாக இருந்தாக வேண்டும் என்பதை எடுத்துரைங்கள்)
த2 மீட்டுத்திருப்புதல் பரிசுத்தமாக இருக்கும்போது நாம் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பார்ப்போம்
(எசேக். 34:26; 2 தீமோ. 2:21)
(சில இடங்களில் ஆசீர்வாதம் தவறிப் போனதற்கு காரணம் பின்னணியில் ஏற்பட்ட கலப்படமாகும் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 2
த1 ஆவியோடு இடைபடுதல் என்றால், இருதயத்தின் குறிக்கோள் உள்எண்ணம், இலக்கு, உள்நோக்கம் முதலியவற்றுடன் இடைபடுவதாகும் (2 கொரி. 7:1; எபி. 4:12)
(ஆவியோடு இடைபடுதல் என்றால், ஆவியோடுதானே அல்ல, மாறாக ஆவியின் வழிப்பாதையுடன் இடைபடுவதாகும் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 ஆவியுடன் இடைப்படுதல் மற்றும் மனசாட்சியுடன் இடைப்படுதல் ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடு (மத். 5:8; 2 தீமோ. 1:3)
(ஆவியுடன் இடைபடுவதற்கான நடைமுறை வழி என்ன என்பதை எடுத்துரைங்கள்)
நாள் 3
த1 இலட்சியமும் திறமையும் இருந்தும், நம்மிடம் தூய உள்நோக்கம் இல்லாவிட்டால் நாம் பிரச்சினையாகிவிடுவோம். (மத். 5:8; 2 கொரி. 3:18)
(நம்முடைய உள்நோக்கம் தூய்மையாக இருக்கும்போது, நம்மிடம் இலட்சியமும் திறமையும் இருக்கும்போது மட்டுமே, நாம் கர்த்தருடைய கரத்தில் பயனுள்ளவர்களாக ஆகமுடியும் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இருதயத்தில் தூய்மையாக இருப்பதென்றால் (மத். 5.8), குறிக்கோளில் ஒற்றையாக இருப்பதாகும், அதாவது, தேவனின் மகிமைக்காக தேவனின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கைக் கொண்டிருப்பதாகும்
(மத். 5:8, யோபு. 42:5)
(தேவனைக் காணுதல் இருதயத்திலுள்ள தூய்மைக்கு கிடைக்கும் ஒரு வெகுமதியாகும், என்பதை எடுத்துரைக்க, யோபுவை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துங்கள்)
நாள் 4
த1 தூய மனசாட்சி என்றால் நாம் தேவனையும் அவருடைய சித்தத்தையும் மட்டுமே தேடுகிறோம் என்று அர்த்தம் (அப். 24:16; 2 தீமோ. 1:3)
(நம்மிடம் நல்ல மனச்சாட்சி இருக்கலாம், ஆனால் அது தூய்மையாக இல்லாதிருக்கலாம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தூய்மையாக இருப்பது என்றால் கர்த்தருக்கென்று ஒற்றையாக இருப்பது என்று பொருள். வேறு வார்த்தைகளில், கூறுவதானால் நம் மனம் கர்த்தரைத் தவிர வேறு எதையும் கருதவில்லை
(மத். 5:8; யோபு 42:5)
(தூய்மையான மற்றும் ஒற்றையான இருதயம் மட்டுமே பல இடைபடுதல்கள்மூலம், மனசாட்சியைத் தூய்மையாக மற்றும் ஒற்றையாக மாற்ற முடியும் என்பதை எடுத்துரைங்கள்)
நாள் 5
த1 தேவனுடைய பிள்ளைகளின் மத்தியிலுள்ள பிரச்சனை ஆவியுடன் ஆத்துமாவின் கலப்படமாகும் (2 கொரி.6:4-8; 1 தீமோ. 3:9)
(வேலையில் உள்ள முதல் தகுதி வல்லமையின் அளவல்ல, மாறாக ஆவியின் தூய்மை என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தூய்மையே நம் சேவையின் ஓர் அடிப்படை நிபந்தனை (2 கொரி. 6:4-8; 1 தீமோ. 3:9)
(தூய்மை ஒரு அடிப்படையான காரணியாகும். இது அனைத்து கிருமிகளையும் கொல்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 6
த1 ஒரு நீதிமான் என்பது சிறிய காரியங்களிலும் பெரிய காரியங்களிலும் சரியாக இருப்பவராகவும் தேவனுடனும் மற்றவர்களுடனும் தன்னுடனும் சரியாக இருப்பவரே ஆகும் (2 கொரி. 5:21; வெளி.22:1)
(ஆவியானவர் நம்முள் வாழ்வதையும், வேலை செய்வதையும் அனுபவமாக்குவதன் விளைவாக, நாம் நீதிமான்களாகிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)
த2 தூய்மை மற்றும் சுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு (வெளி. 1:20; 22:1)
(வெறுமனே சுத்தமாக இருப்பது மட்டும் போதாது. சிலுவையில் கர்த்தர் அடைந்த மரணத்தின்மூலம் நாம் தூய்மையாக்கப்பட வேண்டுமென்பதை எடுத்துரையுங்கள்)