Tamil – Prophesying Outline DST22 Week 5

1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு

செய்தி 5

ஓர் ஆசாரிய, வேதபாரகனாக எஸ்றாவும், எஸ்றாக்களுக்கான- அதாவது, தேவனுடைய வார்த்தையில் கைதேர்ந்தவர்களுக்கான- தேவையும்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை


அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய பகுதிகளை வாசித்தல்
எஸ்றா 7:6 இந்த எஸ்றா இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

கொலோ. 3:16. கிறிஸ்துவின் வார்த்தை சகல ஞானத்திலும் உங்களில் ஐசுவரியமாய்க் குடியிருக்கட்டும், எப்படியெனில் சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஆவிக்குரிய பாடல்களினாலும் நீங்கள் ஒருவருக்கொருவர் போதித்து அறிவுறுத்தி….

 

பசிதூண்டும் வார்த்தை

எஸ்றா ஏன் ஓர் ஆசாரிய வேதபாரகனாக இருக்கிறான்?

எஸ்றா ஓர் ஆசாரியன், அவன் ஒரு வேதபாரகனும்கூட; இவ்வாறு, அவன் ஓர் எழுத்தின்படியான-வேதபாரகனாக அல்லாமல், ஓர் ஆசாரிய வேதபாரகனாக இருந்தான். ஆசாரியன் என்பவன், கர்த்தருடன் கலந்திணைந்து, கர்த்தரைக் கொண்டு பூரிதமாக்கப்பட்டவன்; எஸ்றா இவ்விதமான நபராக இருந்தான். எஸ்றா, தேவனில் நம்பிக்கைவைத்து, தேவனுடன் ஒன்றாயிருந்து, தேவனுடைய வார்த்தையில் கைதேர்ந்தவனாயிருந்து, தேவனுடைய இருதயத்தையும், தேவனுடைய வாஞ்சையையும் தேவனுடைய பொருளாட்சியையும் அறிந்த ஒரு மனிதனாக இருந்தான். ஓர் ஆசாரிய வேதபாரகனாக, எஸ்றா கர்த்தரைத் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு, அவருடன் ஒன்றாயிருந்தான். எஸ்றா புதிதான எதையும் பேசவில்லை, அவன் பேசியது ஏற்கெனவே மோசேயால் பேசப்பட்டிருந்தது. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைப் பற்றிய உட்பார்வையைப் பெறுவதற்காக ஆசாரியரும் லேவியரும் வேதபாரகனாகிய எஸ்றாவிடம் கூடிவந்தனர்; நெகேமியா 8:13இல், உட்பார்வை என்பது உள்ளார்ந்த உட்கருத்தை அறிந்துணருவதைக் குறிக்கிறது.

 

ஆவிக்குரிய பாரம்
எஸ்றா பரலோக சத்தியங்களைக் கொண்டு இஸ்ரவேல் மக்களை மறுபடிகட்டியமைத்தான். கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில், தேவனைத் தொடர்புகொள்கிற, தேவனைக் கொண்டு பூரிதமாக்கப்படுகிற, தேவனுடன் ஒன்றாயிருக்கிற, தேவனைக்கொண்டு நிரப்பப்படுகிற, தேவனுடைய வார்த்தையில் கைதேர்ந்தவர்களாய் இருக்கிற ஆசாரியப் போதகர்களான எஸ்றாக்கள் நமக்குத் தேவை: இந்த நபரே மீட்டுத்திருப்புதலில் ஒரு போதகராக இருக்கத் தகுதியுடையவர்.

 

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

எஸ்றா ஓர் ஆசாரியன், அவன் ஒரு வேதபாரகரும்கூட; இவ்வாறு, அவன் ஓர் எழுத்தின்படியான -வேதபாரகனாக அல்லாமல், ஓர் ஆசாரிய வேதபாரகனாக இருந்தான்.

இஸ்ரயேல் தேவனுடைய சாட்சியாக ஆகக்கூடுமாறு, எஸ்றா இஸ்ரயேல் மக்களுக்குப் பரலோக சத்தியங்களைக் கற்பிப்பதன்மூலம் அவர்களை மறுபடி கட்டியமைத்தான்.

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் தேவனைத் தொடர்புகொள்கிற, தேவனைக்கொண்டு பூரிதமாக்கப்படுகிற, தேவனுடன் ஒன்றாயிருக்கிற, தேவனோடு கலந்திணைக்கப்படுகிற, தேவனைக்கொண்டு நிரப்பப்படுகிற, தேவனுடைய வார்த்தையில் கைதேர்ந்தவர்களாய் இருக்கிற ஆசாரியப் போதகர்களான எஸ்றாக்கள் நமக்குத் தேவை; இவ்விதமான நபரே மீட்டுத்திருப்புதலில் ஒரு போதகராக இருக்கத் தகுதியுடையவர்.

 

ஜீவனின் அனுபவம்

தேவனுடைய வார்த்தை நம்முள் வேலைசெய்யும்போது, தேவனாகவே இருக்கிற தேவனுடைய ஆவியானவர் அந்த வார்த்தையின்மூலம் தேவனுடைய மூலக்கூறுடன் தேவனுடைய சுபாவத்தைப் புறத்தூண்டுதலின்றி நம் ஆள்தத்துவத்தினுள் பகிர்ந்தளிக்கிறார்; இவ்விதத்தில் நாம் கட்டியமைக்கப்படுகிறோம்.

திரும்பிவந்த சிறைக்கைதிகள் தேவனுடைய சாட்சியாகும்படி தனிநபர்ரீதியிலும், கூட்டானரீதியிலும் மறுபடிகட்டியமைக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய எண்ணத்தைக்கொண்டும், தேவனுடைய பரிசீலனைகளைக்கொண்டும், தேவன் என்னவாக இருக்கிறாரோ அவை யாவற்றைக்கொண்டும் உட்செலுத்தப்பட்டனர்; இது அவர்களை தேவனுடைய மறுஉற்பத்தியாக்கியது.

 

பயிற்சி மற்றும் பிரயோகம்

சபை கூடுகையில் நாம் ஒன்றைப் பேசும்போது, நம் பேசுதல் திரையை அகற்றுவதாக இருக்க வேண்டும்; இதன் பொருள் நம் போதனை ஒரு வெளிப்பாட்டை வழங்க வேண்டும். தேவனுடைய மக்கள் பூமியில் தேவனுடைய கூட்டு வெளியாக்கமாகிய அவரது சாட்சியாக இருக்குமாறு, தெய்வீக சத்தியங்களைக்கொண்டு அவர்களுக்குக் கற்பித்து அவர்களைக் கட்டியமைக்க இன்றைய எஸ்றாக்கள் பிரயாசப்பட்டு உழைக்க வேண்டும்.


தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்

ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 எஸ்றா ஓர் ஆசாரியன். அவன் ஒரு வேதபாரகனாகவும் இருந்தான் (எஸ்றா 7:6; நெகே. 8:13)

(போதகரிலிருந்து தீர்க்கதரிசி எவ்வாறு வேறுபட்டவன் என்பதை எடுத்துரையுங்கள் )

த2 எஸ்றா ஓர் எழுத்தின்படியான வேதபாரகனாக அல்லாமல் ஓர் ஆசாரிய வேதபாரதனாக இருந்தான் (நெகே. 8:13)

(ஓர் ஆசாரியன் என்பவன் கர்த்தருடன் கலந்திணைந்தவன், கர்த்தரால் பூரிதமாக்கப்பட்டவன், கர்த்தரைப் புசிப்பவன், நாள் முழுவதும் அவரை சுவாசிப்பவன் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 2
த1 தேவன் தம் வார்த்தையின்மூலம் நம்மை மறுபடிகட்டியமைப்பதற்கு வல்லவர் (நெகே. 8:2-3, 6, 8)
(மறுபடி கட்டியமைக்கப்படுவதற்கு, தேவனுடைய வார்த்தையிடம் திரும்பிவருவதன் மூலம், நாம் தேவனிடம் திரும்பிவர வேண்டும் என்பதை எடுத்துரைங்கள் )

த2 தேவனுடைய மக்கள் அவரது சாட்சியாக இருப்பதற்கு, அவர்கள் தேவனுடைய வார்த்தையைக்கொண்டு மறுபடிகட்டியமைக்கப்பட வேண்டியிருந்தது (கொலோ. 3:16)

(பாபிலோன் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு திரும்பிவந்தவர்கள் ஏன் மறுபடிகட்டிமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 3

த1 செருபாபேலின் திறன் மற்றும் தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் கைதேர்ந்தவனாக இருந்த எஸ்றா.(கொலோ. 3:16; 2 தீமோ. 3:16-17)

(சிறையிருப்பிலிருந்து திரும்பியதில் செருபாபேலும், எஸ்றாவும் ஏன் முக்கியமானவர்கள் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 பரிசுத்தவான்களை சத்தியங்களைக் கொண்டு போதிப்பதற்கு (1தீமோ. 3:2; 5:17-18)

(இன்று பரலோக சத்தியங்களைக்கொண்டு மக்களுக்குப் போதிக்கவும், அவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்களைக் கட்டியமைக்கவும் எஸ்றாக்கள் தேவை என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 4

த1 திரும்பிவந்த சிறைக்கைதிகள் தேவனுடைய சாட்சியாகும்படி தனிநபர்ரீதியிலும், கூட்டானரீதியிலும் மறுபடிகட்டியமைக்கப்பட்டனர்
(ஏசா. 49:6; 1 பேது. 2:9)

(மறுபடி கட்டியமைக்கப்பட்டதன் விளைவாக, இஸ்ரயேல் ஒரு குறிப்பிட்ட தேசமானது அதாவது தேவனுகென்று பரிசுத்தமாக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டு, தேவனை வெளிக்காட்டுகிற ஒரு தேசமானது என்பதை எடுத்துரையுங்கள்)


த2 அடிமை இரட்சகரின் போதித்தல் மாபெரும் பிரகாசிப்பிக்கும் ஒளியாக இருந்தது (ஏசா. 49:6; அப். 26:18)

(அடிமை-இரட்சகராகத் தம் சேவையில் செய்த இரண்டாவது காரியம் மக்களைச் சாத்தானிய இருளிலிருந்து தெய்வீக ஒளியினுள் கொண்டுவரும்படி இப்படிப்பட்ட போதனையைச் செயல்படுத்துவதாக இருந்தது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 5
த1 போதித்தல் வெளிப்பாட்டிற்கு சமம், இது ஒரு திரையை விலக்கப்படுவதாகும் (எபே. 3:3, 9)

(சபை கூடுகையில் நீங்கள் ஏதேனும் பேசும்போது, உங்கள் பேச்சு திரையை சுருட்டி அகற்றுவதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நம்முடைய வேதவாக்கியங்களின் வாசிப்பில் நாம் ஒரு வெளிப்பாட்டை பெறும்போது, அந்த வெளிப்பாடு நம்மை உணர்த்துவிக்கும் (2 தீமோ. 3:16; அப்.26:18)
(போதனை நம்மை கடிந்துணர்த்துகிறது, கடிந்துணர்த்துதல் சீர்திருத்தலை உற்பத்தி செய்கிறது. நாம் சீர்திருத்தப்பட்ட பிறகு நாம் நேர்த்தியான படிப்பித்தலை பெறுவோம் என்பதை எடுத்துரையுங்கள்)

 

நாள் 6

த1 அடிக்குறிப்புகளோடுகூடிய மீட்டுத்திருப்புதல் மொழிபெயர்ப்பின் வசனங்களையும் ஜீவ-ஆய்வு செய்திகளையும் ஒரு பாடப்புத்தகமாக கருதுங்கள்.
(1 தீமோ. 2:2-4)

(எவ்வாறு சத்தியத்தின் ஒரு சேகரிப்பை நாம் பெற முடியும் என்பதை அனுபவங்களோடு எடுத்துரையுங்கள்)

த2 பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவனுடைய பொருளாட்சி மற்றும் தேவனுடைய பரமஇரகசியங்கள் தொடர்பான வேதாகமத்தில் உள்ள வெளிப்பாடு பற்றி முற்றிலும் அறியாதவர்கள். (1 தீமோ. 2:2, 15)

(ஜீவ ஆய்வு செய்திகளின் உதவியுடன் வேதாகமத்தைப் படிக்க ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்கள் செலவிட நாங்கள் ஏன் அனைத்து பரிசுத்தவான்களை ஊக்குவிக்கிறோம் என்பதை எடுத்துரையுங்கள்)