1 மற்றும் 2 நாளாகமம், நெகேமியா, எஸ்தரின் படிகமான-ஆய்வு
செய்தி 1
தம் நித்தியப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக மனிதனின் வரலாற்றில் தேவனின் நகர்வு
தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை
அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்
செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்
வசனங்களை ஜெபவாசிப்பு செய்தல் ;
சக. 1:20-21 பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார் …அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே…யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள்…
வெளி. 19:7-8.களிகூர்ந்து மகிழ்வோம், அவருக்கே மகிமைசெலுத்துவோம்; ஏனெனில் செம்மறிக்குட்டியானவரின் கல்யாணம் வந்துவிட்டது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தப்படுத்திவிட்டாள்… பிரகாசமும் சுத்தமுமான மெல்லிய சணல்நார் ஆடை அணியும்படி அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; அந்த மெல்லிய சணல்நார் ஆடை பரிசுத்தவான்களின் நீதிகளாம்.
பசிதூண்டும் வார்த்தை
பழைய ஏற்பாட்டிலுள்ள (யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1, 2 சாமுயேல், 1, 2 இராஜாக்கள், 1, 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர் ஆகிய) பன்னிரண்டு வரலாற்றுப் புத்தகங்களின் உள்ளார்ந்த உட்கருத்து என்ன?
பழைய ஏற்பாட்டிலுள்ள (யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1, 2 சாமுயேல், 1, 2 இராஜாக்கள், 1, 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர் ஆகிய) பன்னிரண்டு வரலாற்றுப் புத்தகங்களின் உள்ளார்ந்த உட்கருத்து, மனித வரலாற்றில் தேவனின் நகர்வானது தம் உச்சநிலை வெளியாக்கத்திற்காகப் புதிய எருசலேமை முழுநிறைவாக்க கிறிஸ்துவின் ஜீவாதார சரீரமாக சபையை உற்பத்திசெய்து கட்டியெழுப்புவதற்கு (தேவத்துவத்தில் அன்று மாறாக ) ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதன் தேவனாகுமாறு தேவன் ஒரு மனிதனாக ஆவதன்மூலம் தம் நித்தியப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்கான வழியை ஆயத்தமாக்குகிறது என்ற வெளிப்பாடாகும்.
ஆவிக்குரிய பாரம்
மனித வரலாற்றில் தேவனின் நகர்வாகிய தெய்வீக வரலாற்றில் மணவாட்டியாக இருப்பதற்கு, நமக்கு தேவனுடைய அழகுபடுத்தும் வார்த்தை தேவை, மேலும் மனிதனின் வரலாற்றில் தேவனின் நகர்வாகிய தெய்வீக வரலாற்றில் போராளியாக இருப்பதற்கு நமக்கு தேவனின் கொன்றுவீழ்த்தும் வார்த்தை தேவை. தம் திருமண நாளில் கிறிஸ்து, பல ஆண்டுகளாக தேவனின் எதிரிக்கு எதிராக யுத்தஞ்செய்துவந்த ஜெயங்கொள்பவர்களாகிய தம் மணவாட்டியைத் திருமணம் செய்வார்.
மனிதனின் வரலாற்றில் தெய்வீக வரலாறாக தேவனின் நகர்வுடன், புதிய சிருஷ்டிப்பு உள்ளது—அதாவது ஒரு புதிய இருதயம், ஒரு புதிய ஆவி, ஒரு புதிய ஜீவன், ஒரு புதிய சுபாவம், ஒரு புதிய வரலாறு, மற்றும் ஒரு புதிய முழுநிறைவுடன்கூடிய புதிய மனிதன் இருக்கிறான்; நாம் கர்த்தரைத் திரும்பக் கொண்டுவர அவரது ஜெயங்கொள்ளும் மணவாட்டியாக ஆக நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ளுமாறு நம் ஜீவாதார இரட்சிப்புக்காக நாம் பரம்புதிரான, தெய்வீகக் காரியங்களை அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ்ந்துகொண்டு தெய்வீக வரலாற்றில் இருக்கிறோம் என்பதற்காய் நாம் கர்த்தரைத் துதிக்கிறோம்.
தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை
சத்தியத்தினுடைய வெளிப்பாடு
பழைய ஏற்பாட்டிலுள்ள (யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1, 2 சாமுயேல், 1, 2 இராஜாக்கள், 1, 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா, எஸ்தர் ஆகிய) பன்னிரண்டு வரலாற்றுப் புத்தகங்களின் உள்ளார்ந்த உட்கருத்து, மனித வரலாற்றில் தேவனின் நகர்வானது தம் உச்சநிலை வெளியாக்கத்திற்காகப் புதிய எருசலேமை முழுநிறைவாக்க கிறிஸ்துவின் ஜீவாதார சரீரமாக சபையை உற்பத்திசெய்து கட்டியெழுப்புவதற்கு (தேவத்துவத்தில் அன்று மாறாக ) ஜீவனிலும் சுபாவத்திலும் மனிதன் தேவனாகுமாறு தேவன் ஒரு மனிதனாக ஆவதன்மூலம் தம் நித்தியப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்கான வழியை ஆயத்தமாக்குகிறது என்ற வெளிப்பாடாகும்.
மனித வரலாற்றில் தேவனின் நகர்வின் மிகமுக்கியமான குறிப்பும், பிரதான உள்ளடக்கமும் தேவனின் கட்டிடமாகிய இயேசுவின் சாட்சிக்காகக் கிறிஸ்துவின் இரண்டு வருகைகளே என்று சகரியா புத்தகம் வெளிப்படுத்துகிறது.
சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து, தேவனின் வெளியரங்கத்திற்காக தேவனின் கட்டிடத்தை ஆதாயப்படுத்த மனித வரலாற்றில் தேவனுடைய நகர்வின் வரலாறாக இருக்கிறார்.
எபேசியர் 5ம் 6ம் சபையானது மணவாட்டி மற்றும் போராளி என்பதை வெளிப்படுத்துகிறது; வெளிப்பாடு 19இலும், சபையின் இந்த இரண்டு அம்சங்கள் இருக்கின்றன.
ஜீவனின் அனுபவம்
தம் மனுஷீகத்தில் கிறிஸ்து, பள்ளத்தாக்கின் அதிதாழ்வான பகுதியில் தேவனின் மக்களின் தாழ்நிலையில் அவர்களுக்கு அக்கறை செலுத்தவும், அவர்களுக்காகப் பரிந்துபேசவும், அவர்களை பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விரைவாக வெளியேகொண்டுவரவும் அவர்களோடு நிற்கின்ற யெகோவாவின் தூதராக, மூவொரு தேவனாகிய யெகோவாவாகவே இருக்கிறார்.
கிறிஸ்து இரண்டு கோல்களைக் கொண்டு தம் மந்தையை மேய்க்கிற மேய்ப்பராக வந்தார், அதில் ஒன்றுக்கு தயவு (கிருபை) என்று பெயர், மற்றொன்றுக்கு பிணைப்புகள் (பிணைத்தல்) என்று பெயர்; கிருபை, நாம் தேவனோடு கலந்திணைவதற்காக இருக்கிறது; பிணைத்தல், நாம் ஒருமைக்குள் கட்டிப்பிணைக்கப் – படுவதற்காக இருக்கிறது.
பயிற்சி மற்றும் பிரயோகம்
தேவனின் நித்தியப் பொருளாட்சி செயல்படுத்தப்படும்படி மனிதனின் வரலாற்றில் தேவனின் நகர்வை நிறைவேற்றுவதற்கான வழி, ஏழுமடங்கு அதிதீவிரப்படுத்தப்பட்ட ஆவியானவராகக் கிறிஸ்துவை அனுபவமாக்கவும் அனுபவித்துமகிழவும் நம் ஆவியைப் பயிற்சிசெய்வதே ஆகும்.
நம் முழு இருதயத்தோடும் கர்த்தரிடம் திரும்ப நாம் நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும், அப்போது கர்த்தர் நம்மிடம் திரும்புவார் என்ற கோட்பாட்டை நிறுவுகிறது.இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவை நாம் பெற்றுக்கொள்ளுமாறும், அவரைக்குறித்து அதில் வெளிப்படுத்தப்படும் எல்லாவற்றையும் புரிந்துக்கொள்ளுமாறும், நம் மனித ஆவிக்கு முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்
ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்
நாள் 1
த1 மற்றும் 2 நாளாகமத்தின் மையக் கருத்து (வெளி.11:15)
(கிறிஸ்து தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இனத்திற்காக மட்டுமல்ல, தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட முழு மனித இனத்திற்காகவும் இருப்பவர் என்பதற்கு இது ஒரு பலமான சான்றாகும் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 தேவனுடைய நகர்வு மனிதனின் வரலாற்றில் இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் (சங். 2:4).
(தேவன் நகர்ந்துகொண்டிருக்கிறார், அவர் இன்னும் மனிதனின் வரலாற்றிலும், வரலாற்றினூடாகவும் நகர்ந்துகொண்டிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.)
நாள் 2
த1 சகரியாவின் புத்தகத்தில் திரைநீக்கப்பட்ட கிறிஸ்து (சக. 9:9)
(சகரியாவின் புத்தகத்தில் திரைநீக்கப்பட்ட கிறிஸ்து மனித வரலாற்றுடன் நெருக்கமான தொடர்புடைய ஒரு கிறிஸ்து என்பதை எடுத்துரையுங்கள்)
த2 இஸ்ரயேலின் நேர்த்தியான மேய்ப்பரான, மேசியா வெறுக்கப்பட்டு அழுக்கையும் நீக்க, தாக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு விற்கப்பட்டார்
(சக. 11:12-13)
( சகரியா 11: 12 மற்றும் 13இலுள்ள வெளிப்பாடுகள் இங்கே தீர்க்கதரிசனமாக சுவிசேஷங்களில் முழுநிறைவடைந்தது என்பதை எடுத்துரையுங்கள்).
நாள் 3
த1 கிறிஸ்து மனித வரலாற்றுடன், குறிப்பாக ரோமப் பேரரசுடன் நெருக்கமாகத் தொடர்புடையவர் (சக.14:3-4)
எவ்வாறு ரோமப் பேரரசு, கிறிஸ்துவைத் தம் பொருளாட்சியின் மையத்துவம் மற்றும் சர்வத்துவமுமாக ஆக்கும் தம் நோக்கத்தை நிறைவேற்ற தேவனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எடுத்துரையுங்கள்)
த2 மகா உபத்திரவ காலத்தில் இஸ்ரயேல் அந்திக்கிறிஸ்துவாலும் அவனது சேவையாலும் காலால் மதிக்கப்படும் (வெளி. 11:2)
( இஸ்ரயேல் அழிவின் விளிம்பில் இருக்கையில், கிறிஸ்து எவ்வாறு இரட்சிப்பார் என்பதை எடுத்துரையுங்கள்)
நாள் 4
த1 [சகரியா 1:8இல் உள்ள] இந்த மனிதன் தம் மனுஷீகத்தில் உள்ள கிறிஸ்து ஆவார் (சக. 1:8)
(இந்த தரிசனத்தில் உள்ள மனிதன் ஒரு சிவப்பு குதிரையின்மீது சவாரி செய்கிறவனின் ஆவிக்குரிய உட்கருத்தை எடுத்துரையுங்கள் )
த2 தரிசனத்தின் நான்கு கொம்புகள் மற்றும் நான்கு கைவினைஞர்கள் (சக.1:18-21)
(கிறிஸ்து இந்தக் கைவினைஞர்களில் ஒருவர், இவர் மாபெரும் சிலையை உடைக்க கைகளாலல்லாமல் வெட்டப்பட்ட கல்லாக வருவார் என்பதை எடுத்துரையுங்கள்).
நாள் 5
த1 சபை கிறிஸ்துவுக்கு வழங்கப்படும் மணவாட்டியாகவும், தேவனின் எதிரிக்கு விரோதமாக கிறிஸ்துவுடன் சேர்ந்து யுத்தம் செய்யும் போர்வீரனாகவும் இருக்கிறது (வெளி.19:7, 14)
(மணவாட்டி என்றமுறையில், நாம் அழகாக இருக்க வேண்டும். போர்வீரன் என்றமுறையில், நாம் தேவனின் எதிரிக்கு விரோதமாகப் போரிட ஆயத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 நாம் தேவனுடைய வார்த்தையின் கொல்லும் வல்லமையை அனுபவமாக்க வேண்டும்.(எபே.6:17)
(நாம் ஜெப-வாசிக்கும்போது, ஒருபுறம் நாம் போஷிக்கப்படுகிறோம், ஆனால் மறுபுறம் குறிப்பிட்ட சில மூலக்கூறுகள் கொல்லப்படுகின்றன என்பதை எடுத்துரையுங்கள்).
நாள் 6
த1 தேவன் மனிதனுக்காக ஒரு உள்வாங்கியை சிருஷ்டித்தார். அதனால் கிறிஸ்து என்னவாகவெல்லாம் இருக்க வேண்டுமோ அவற்றை பெறுவதற்கான கொள்திறனைப் பெறுவார்கள்(சக.12:1)
(வானங்கள் பூமிக்காக இருக்கிறது, பூமி மனிதனுக்காக இருக்கிறது, மனித தேவனைத் தொடர்புகொள்ளவும் தேவனைப் பெற்றுக்கொள்ளவும் ஓர் ஆவியோடு தேவனால் சிருஷ்டிக்கப்பட்டான் என்பதை எடுத்துரையுங்கள் )
த2 கர்த்தர் நமக்கு மிக தயவுள்ளவராக இருக்கும்போது, நாம் அவரிடம், இன்னும் கூடுதலான தயவை அனுப்பும்படி கேட்க வேண்டும் (சக. 1:1, 8)