Tamil – Prophesying Outline DST23 Week 07

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்காகவும், இராஜ்ஜியத்தின் நிஜம் மற்றும் வெளியரங்கத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும், நல்ல தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின்மீது உழைத்தல். 

செய்தி 7

பரமேறுதலை அறிதல்

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

எபே. 2:6 நம்மை ஒன்றாக அவருடன்கூட எழுப்பி, கிறிஸ்து இயேசுவில் நம்மை ஒன்றாக அவருடன்கூட பரமண்டலங்களில் உட்காரச் செய்தார்.

அப். 2:32 இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

எபி. 4:14 வானங்களினூடாய்க் கடந்துபோயிருக்கும் தேவ குமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருப்பதால், நாம் அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாக

பசிதூண்டும் வார்த்தை

கிறிஸ்து இன்று எங்கே இருக்கிறார்?

” இன்று கர்த்தர் அவரது பரமேறுதலில் இருக்கிறார்” என்பதை நாம் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். முழு கிருபையின் யுகமும் கர்த்தரின் பரமேறுதலின் நேரமாக இருக்கிறது. கிறிஸ்து பரலோகங்களில் அநேக காரியங்களை செய்து இருக்கிறார். ஆனால், கிறிஸ்தவர்கள் இன்று இந்த கிறிஸ்துவின் ஊழியத்தின் பகுதிக்கு போதிய கவனம் செலுத்தவில்லை. இன்று அவர் பரலோகத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார். (ரோ. 8:34) மற்றும் அவர் நம்முடனும் இருக்கின்றார் (வ. 10). இது மிகவும் புதிரானது. அவருடைய பரமேறுதலில் அவர் பரலோகத்தில் இருக்கிறார். நம்முடன் இருப்பதற்கு அவருடைய பரமேறுதலில் நம்முடனும் இருக்கின்றார். இன்று நாம் பரலோகத்தில் இருக்கின்றோம். நாம் உலகத்திற்குரிய மக்கள் அல்ல; நாம் பரலோகத்திற்குரிய மக்கள்.

ஆவிக்குரிய பாரம்

நம் இரட்சகரின் பரமேறுதலானது மனிதன் மற்றும் தேவனாக, சிருஷ்டிகர் மற்றும் சிருஷ்டியாக, மீட்பராக, இரட்சகராக, ஜீவன் தரும் ஆவியாக தேவனுடைய நிர்வாகத்தைச் செயல்படுத்தவும், தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியை நிறைவேற்றவும் சிருஷ்டிப்பு, மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, சிலுவைமரணம், உயிர்த்தெழுதல் என்ற வழிமுறையின்மூலம் அவர் தம் பரலோக அலுவலுக்குள் பதவியமர்த்தப்பட்டதாகும்.

கர்த்தர் இன்று அவரது பரமேறுதலிலும் மற்றும் நம் ஆவியிலும் இருக்கின்றார். எப்போதெல்லாம் அவரது நாமத்தினால் நாம் ஒன்றுகூடி வருகிறோமோ, அப்போது கிறிஸ்து அவரது பரமேறுதலில் அவருடைய அங்கங்களோடு இருக்கின்றார், இதுவே மனிதனில் தேவனுடைய நகர்வாக இருக்கிறது.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

“இன்று கர்த்தர் அவரது பரமேறுதலில் இருக்கிறார்” என்பதை நாம் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். முழு கிருபையின் யுகமும் கர்த்தரின் பரமேறுதலின் நேரமாக இருக்கிறது. கிறிஸ்து பரலோகங்களில் அநேக காரியங்களை செய்து இருக்கிறார். ஆனால், கிறிஸ்தவர்கள் இன்று இந்த கிறிஸ்துவின் ஊழியத்தின் பகுதிக்கு போதிய கவனம் செலுத்தவில்லை. இன்று அவர் பரலோகத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார். (ரோ. 8:34) மற்றும் அவர் நம்முடனும் இருக்கின்றார் (வ. 10). இது மிகவும் புதிரானது. அவருடைய பரமேறுதலில் அவர் பரலோகத்தில் இருக்கிறார். நம்முடன் இருப்பதற்கு அவருடைய பரமேறுதலில் நம்முடனும் இருக்கின்றார். இன்று நாம் பரலோகத்தில் இருக்கின்றோம். நாம் உலகத்திற்குரிய மக்கள் அல்ல; நாம் பரலோகத்திற்குரிய மக்கள்.

கர்த்தருடைய பரமேறுதலின் புறம்சார்ந்த அம்சத்தை நாம் பார்க்க வேண்டும்.

கர்த்தருடைய பரமேறுதலின் அகம்சார்ந்த அம்சத்தை நாம் பார்க்க வேண்டும்.

ஜீவனின் அனுபவம்

நாம் இப்போது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலில் அவருடன் ஒன்றாக இருக்கிறோம் (எபே. 2:6); இதன் விளைவாக, நமக்கு உயிர்த்தெழுதலில் ஜீவனும் வல்லமையும், பரமேறுதலில் அதிகாரமும் உள்ளன; நாம் நம் கர்த்தரைத் தொடர்புகொள்ளும்போது, அவர் என்னவாக இருக்கிறார் என்பதைப் பற்றிய ஓர் உணர்ந்தறிதல், அதாவது, அவரது அந்தஸ்து, நிலை, மற்றும் பதவியைப் பற்றிய ஓர் உணர்ந்தறிதல் நமக்கு இருக்க வேண்டும்.

தெய்வீக, ஆவிக்குரிய மண்டலத்தில், கிறிஸ்து தனது பரமேறுதலில் நிறைவேற்றிய மற்றும் பெற்ற அனைத்தையும் நமக்கு கடத்தும் சக்தி உள்ளது என்று நாம் நம்ப வேண்டும். நாம் தெய்வீக கடத்துதலை மட்டும் நம்பக்கூடாது, ஆனால் இந்த கடத்தலை நாம் நாளுக்கு நாள் அனுபவிக்க வேண்டும்.

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்காகவும், இராஜ்ஜியத்தின் நிஜம் மற்றும் வெளியரங்கத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும், நல்ல தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின்மீது உழைத்தல்

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்- ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 கிறிஸ்துவின் பரமேறுதல் என்பது அவருடைய பரலோக அலுவலுக்குள் அவரின் பதவியமர்த்தபடுதல் ஆகும். (எபி. 2:9)
(இந்தப் பதவி அமர்த்தப்படுதலுக்கு தேவைப்பட்ட நீண்ட வழிமுறையை எடுத்துரையுங்கள்)

த2 கிறிஸ்துவின் பரமேறுதலின் புறம்சார்ந்த அம்சம் (எபி. 2:9; 12:2)
(தம் பரமேறுதலில் மனித இரட்சகர் மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்பட்டார் மற்றும் தேவனுடைய நிர்வாகத்திற்காக சிங்காசனத்திற்கு பரமேறினார் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 2
த1 பரமேறுதலில் கிறிஸ்து எல்லாவற்றையும் உடைமையாக்க எல்லாருக்கும் கர்த்தராக்கப்பட்டார் (அப்.2:36)
(கிறிஸ்து தம் பரமேறுதலில் எல்லா மனிதர்களுக்கும் மட்டுமல்லாமல், எல்லாக் காரியங்களுக்கும்கூட எல்லாருக்கும் கர்த்தராகப் பதவியமர்த்தப்பட்டார் என்பதை எடுத்துரையுங்கள் )

த2 தம் பரமேறுதலில் கிறிஸ்து கர்த்தராக மட்டுமல்லாமல் கிறிஸ்துவாகவும் ஆக்கப்பட்டார் (அப். 2:36)
(தம் பரமேறுதலில், தம் பரலோக ஊழியத்தின் மூலம் தேவனின் ஆணையை நிறைவேற்ற அவர் கிறிஸ்துவாக ஆக்கப்பட்டார் என்பதை எடுத்துரையுங்கள் )

நாள் 3
த1 தேவன் கிறிஸ்துவானவரை சபைக்கு எல்லா காரியங்களின் மீதும் தலையாக ஆக்கினார்
(எபே.1:22-23)
(கிறிஸ்துவின் பரமேறுதலானது அகம்சார்ந்த விதத்தில் நம்மோடு உறவுடையது என்பதை எவ்வாறு நம்மால் நிரூபிக்க முடியும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 மின்சாரமானது மின்உற்பத்தி நிலையத்திலும் நம் வீடுகளிலும் உள்ளது
(எபே.1:22-23)
(தலையாகிய கிறிஸ்து என்னவெல்லாம் அடைந்தாரோ, பெற்றுக்கொண்டாரோ அது அவருடைய சரீரமாகிய சபைக்குக் கடத்தப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 4
த1 கிறிஸ்து என்னவெல்லாம் அடைந்தாரோ, பெற்றுக்கொண்டாரோ அது இன்று சபைக்குக் கடத்தப்படுகிறது என்பதை விசுவாசித்தல் (எபே. 1:19-22)

(இன்று, கிறிஸ்து என்னவெல்லாம் அடைந்தும் பெற்றும் இருக்கிறாரோ அவை யாவும் சபைக்கு கடத்தப்படுகின்ற, கிறிஸ்துவோடு தேவனால் எடுக்கப்பட்ட நான்கு படிநிலைகளை வேதவாக்கியங்களோடு எடுத்துரையுங்கள்)

த2 சகலத்தையும் உள்ளடக்கிய ஜீவன் தரும் ஆவியானவரின் மூலம் தெய்வீக கடத்துதலை அனுபவமாக்குதல் (1 கொரி.15:45; எபே. 1:22)
(நம்மால் எவ்வாறு இந்த தெய்வீக கடத்துதலை அனுபவித்து மற்றும் அனுபவமாக்க முடியும் என்பதை எடுத்து உரையுங்கள்)

நாள் 5
த1 தம் பரமேறுதலில் கிறிஸ்து பரலோகங்களில் பிரதான ஆசாரியராகவும் ஆக்கப்பட்டார் (ரோம. 8:34; வெளி. 1:13)

(மேலே உள்ள வசனங்களின் அடிப்படையில் கிறிஸ்து பிரதான ஆசாரியராக இருத்தலின் இரண்டு அம்சங்களை எடுத்துரையுங்கள்)

த2 கர்த்தர் நம்மீது வைத்திருக்கும் அக்கறை எப்போதும் நேர்மறையானது. (எபி. 4:14-15
(நமக்கு எது நல்லது என்று நமக்குத் தெரியாது, ஆனால் கர்த்தருக்குத் தெரியும். பூமியில் நம் வாழ்க்கைக்கு என்ன தேவை என்று அவருக்குத் தெரியும் என்பதை அனுபவங்களுடன் எடுத்துரையுங்கள்)

நாள் 6
1 கிறிஸ்து பரலோகங்களிலும் நம்மிலும் வேலை செய்கிறார் (ரோ. 8:34, 10)
(இன்று கிறிஸ்து பரலோகங்களுக்கு மேலே, தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார், நம்மிலும் இருக்கிறார் என்பதை எடுத்துரையுங்கள் )

த2 கிறிஸ்துவின் பரமேறுதலில் அவர் நமக்குள்ளாக நுழைந்தார் (எபே. 2:6; கொலோ. 1:27)
(இன்று நாம் மூவொரு தேவனுடன் ஒன்றாக இருக்கின்றோம், எனவே நம்மைப் போன்று அவருக்கும் ஒரே வரலாறு இருக்கிறது என்பதை எடுத்துரையுங்கள் )

Send this to a friend