Tamil – Prophesying Outline DST23 Week 06

கிறிஸ்துவின் சரீரமாக சபையின் கட்டியெழுப்புதலுக்காகவும், இராஜ்ஜியத்தின் நிஜம் மற்றும் வெளியரங்கத்திற்காகவும், கர்த்தருடைய வருகைக்காக மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும், நல்ல தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவின்மீது உழைத்தல். 

செய்தி 6

நல்ல தேசமாகிய கானானால் மாதிரியாகக் காட்டப்படும் நம் சாபோத் இளைப்பாறுதலாகிய கிறிஸ்து

தீர்க்கதரிசன கூடுகையின் ஆரம்ப வார்த்தை

அனுதின நாளிலுள்ள வசனங்களை வாசித்தல்

செய்திக்குறிப்பில் உள்ள முக்கியப் பகுதிகளை வாசித்தல்

எபி. 4:8-9 ஏனெனில் யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் கொண்டு வந்திருந்தால், இவற்றுக்குப் பிறகு அவர் வேறொரு நாளைக்குறித்துப் பேசியிருக்கமாட்டாரே. ஆகவே, தேவனுடைய மக்களுக்காக ஒரு சாபோத் இளைப்பாறுதல் மீதமிருக்கிறது.

எபி. 4:12 ஏனெனில் தேவனுடைய வார்த்தையானது ஜீவிக்கிறதாகவும் கிரியைசெய்கிறதாகவும் இருபுறமும் கூர்மையுள்ள எந்தப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும் ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும்கூட பிரிக்குமளவுக்கு உருவக் குத்துகிறதாகவும் இருதயத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.

 

பசிதூண்டும் வார்த்தை

இஸ்ரயேல் தேசத்தினர் நல்ல தேசத்திற்கு (கானான்) நுழைந்ததிலிருந்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் தேவன் ஏன் நல்ல தேசத்தை இளைப்பாறுதல் என்று உபாகமம் 12:9இல் கூறினார்?

ஆலயம் அங்கு கட்டப்பட முடிந்ததால், தேசம் ஓர் இளைப்பாறுதலாக இருந்தது. ஆலயத்துடன் அங்கு தேவன் தம் வெளியாக்கத்தையும், பிரதிநிதித்துவத்தையும் பெற முடிந்தது. தேவன் வெளிக்காட்டப்பட்டு, பிரதிநிதிப்படுத்தப்படும்போது, தேவன் மனிதன் இருவருக்குமே திருப்தி ஏற்படுகிறது, அதுவே நிஜமான இளைப்பாறுதல்.

மனிதன் தேவனை வெளிக்காட்டி, தேவனைப் பிரதிநிதிப்படுத்தும்போது, அது தேவனுக்கு ஒரு சாபோத் இளைப்பாறுதலாக இருக்கிறது; சாபோத் இளைப்பாறுதல் என்பது தேவனின் இருதய வாஞ்சையில் அவரது திருப்தி அவ்வளவே.

ஆவிக்குரிய பாரம்

தேவனுடைய ஜீவிக்கும் வார்த்தை நம் ஆள்தத்துவத்திற்குள் ஊடுருவி, நம்மை நம் வியக்கிற மனம் மற்றும் அலைந்துதிரிகிற ஆத்துமாவிலிருந்து நம் ஆவியிலுள்ள சாபோத் இளைப்பாறுதலாகிய கிறிஸ்துவுக்குள்ளாக விடுவிக்க வேண்டும்; நாம் நம் ஆத்துமாவின் அலைந்துதிரிதலில் தடுமாறுகிறவர்களாக இருக்கக்கூடாது. மாறாக ஆயிரவருட யுகத்தில் அவரது ஆளுகையின் இராஜ்ஜிய இளைப்பாறுதலில் நாம் பங்குபெறுமாறு, ஆத்துமாவை மறுதலித்து, பரலோகக் கிறிஸ்துவில் பங்குபெறவும், அனுபவித்துமகிழவும் நம் ஆவிக்குள் முன்னேறிச் செல்ல வேண்டும்.

தீர்க்கதரிசன கூடுகையின் முடிவுரை வார்த்தை

சத்தியத்தினுடைய வெளிப்பாடு

எபிரெயரில் சாபோத் இளைப்பாறுதலைப் பற்றிய நேர்த்தியான புரிந்துகொள்ளுதலை நாம் பெற விரும்பினால், வேதத்தில் சாபோத் இளைப்பாறுதலைப் பற்றிய முதல் குறிப்பிடுதலின் உட்கருத்தை நாம் அறிய வேண்டும். மனிதன் தேவனை வெளிக்காட்டி, தேவனைப் பிரதிநிதிப்படுத்தும்போது, அது தேவனுக்கு ஒரு சாபோத் இளைப்பாறுதலாக இருக்கிறது; சாபோத் இளைப்பாறுதல் என்பது தேவனின் இருதய வாஞ்சையில் அவரது திருப்தி அவ்வளவே.

சாபோத் இளைப்பாறுதல் என்பது நல்ல தேசமாகிய கானான் தேசத்தால் மாதிரியாகக் காட்டப்படும் நம் இளைப்பாறுதலாகிய கிறிஸ்துவே (உபா 12:9; எபி. 3:7 4:13); கிறிஸ்து மூன்று நிலைகளில் பரிசுத்தவான்களுக்கு இளைப்பாறுதலாக இருக்கிறார்.

யாத்திராகமம் 31:12-17ல் உள்ள அறிவுறுத்தல், ஓய்வுநாள் வாசஸ்தலத்தைக் கட்டுவதற்கான அறிவுறுத்தலுக்குப் பிறகு இருந்தது என்பதைக் காட்டுகிறது; நாம் சுமக்கும் அடையாளம் என்னவென்றால், நாம் தேவனுடன் இளைப்பாறுகிறோம், தேவனை அனுபவிப்போம், தேவனின் அனுபவமகிழ்ச்சியின் காரணமாக, முதலில் தேவனால் நிரப்பப்படுகிறோம், பின்னர் நம்மை நிரப்புகிறவருடன் ஒன்றாக இருக்கிறோம், ஒத்துழைக்கிறோம்; இதுவே நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கை, நித்திய ஒப்பந்தம்.

ஜீவனின் அனுபவம்

வருந்தியுழைத்து பாரஞ்சுமக்கிற எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள்மேல் எடுத்துக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், ஏனெனில் நான் சாந்தமாகவும் இருதயத்தில் தாழ்மையாகவும் இருக்கிறேன், அப்போது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைவீர்கள். ஏனெனில் என் நுகம் எளிதானது, என் பாரம் இலேசானது. (மத் 11:28-30)

கர்த்தருடைய நுகத்தை எடுத்துக்கொள்வதன் மூலமும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல் நான் ஆத்துமாவை இளைப்பாறுதலடைய செய்கிறது; இது ஓர் உள்ளார்ந்த இளைப்பாறுதல், சுபாவத்தில் இது வெறுமனே புறம்பான எதுவோ அல்ல.

பயிற்சி மற்றும் பிரயோகம்

கிறிஸ்துவை நல்ல தேசமாக அனுபவித்துமகிழ்வதற்கான வழிவகை, “இருபுறமும் கூர்மையுள்ள எந்தப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும் ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும்கூட பிரிக்குமளவுக்கு உருவக் குத்துகிறதாகவும் இருதயத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிற” ஜீவிக்கிறதும் கிரியைசெய்கிறதுமான தேவனுடைய வார்த்தையே (எபி. 4:12)

வார்த்தை ஜீவிக்கிறதாகவும் மற்றும் சக்திஊட்டுகிறதாகவும் இருக்குமாறு, நாம் ஆவியில் வார்த்தையுடன் விசுவாசத்தை கலந்து ஜெபிக்க வேண்டும். தேவனுடைய ஜீவிக்கும் வார்த்தை நம் ஆள்தத்துவத்திற்குள் ஊடுருவி, நம்மை நம் வியக்கிற மனம் மற்றும் அலைந்துதிரிகிற ஆத்துமாவிலிருந்து நம் ஆவியிலுள்ள சாபோத் இளைப்பாறுதலாகிய கிறிஸ்துவுக்குள்ளாக விடுவிக்க வேண்டும்; நாம் நம் ஆத்துமாவின் அலைந்துதிரிதலில் தடுமாறுகிறவர்களாக இருக்கக்கூடாது, மாறாக ஆயிரவருட யுகத்தில் அவரது ஆளுகையின் இராஜ்ஜிய இளைப்பாறுதலில் நாம் பங்குபெறுமாறு, ஆத்துமாவை மறுதலித்து, பரலோகக் கிறிஸ்துவில் பங்குபெறவும், அனுபவித்துமகிழவும் நம் ஆவிக்குள் முன்னேறிச் செல்ல வேண்டும்

தீர்க்கதரிசனம் உரைப்பதின் தலைப்புகள்—ஒரு வாரத்திற்கு பன்னிரண்டு தலைப்புகள்

நாள் 1
த1 பூமியில் மனிதன் தம்மை வெளிக்காட்டி, பிரதிநிதிப்படுத்துவதைப் பெறுவதன்மூலம் தேவனின் இருதயம் திருப்தியடைகிறது (ஆதி. 1:26)

(மனிதன் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்டிருக்காவிட்டால், மற்றெல்லாக் காரியங்களும் சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும்கூட ஏன் தேவனால் ஏழாம் நாள் இளைப்பாறுவது இயலாதிருந்திருக்கும் என்பதை எடுத்துரையுங்கள்)

த2 ஏழாம் நாள் தேவனுக்கான ஓய்வு நாளாக இருக்கிறது (ஆதி. 2:2-3)

(தேவனின் ஏழாம் நாள் மனிதனின் முதல் நாளாய் இருக்கிறது என்பது எதைக் குறிப்பிடுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 2
த1 உச்சநிலையான சாபோத் ஓய்வு புதிய எருசலேமாக இருக்கிறது. (எபி. 4:8-9)

(புதிய எருசலேம் உச்சநிலையான, நித்திய இளைப்பாறுதலாக இருக்கும் என்று ஏன் கூறப்படுகிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 நல்ல தேசத்தால் முன்னுரைக்கப்பட்டுள்ள கிறிஸ்துவே நம் இளைப்பாறுதல் (உபா. 12:9; எபி. 4:8)

(பரிசுத்தவான்களின் ஓய்வாக கிறிஸ்துவின் மூன்று நிலைகளை எடுத்துரையுங்கள்)

நாள் 3
த1 இளைப்பாறுதல் என்பது பூரண சமாதானத்தையும் முழு திருப்தியையும் குறிக்கிறது (மத். 11:28-30)

(மத். 11:28 இல் குறிப்பிடப்பட்டுள்ள உழைத்தல் எதைக் குறிக்கிறது என்பதை எடுத்துரையுங்கள்)

த2 தேவனுடைய சித்தம் நம் நுகமாக இருக்கிறது. (மத். 11:28-30)

(கர்த்தரின் நுகம் தேவனுடைய சித்தம் என்பதையும் மற்றும் பிதாவின் சித்தத்தை செய்து முடிக்கும் வேலையே அவருடைய பாரம் என்பதையும் எடுத்துரையுங்கள்)

நாள் 4
த1 தேவன் தாம் படைத்த மனிதனைக் கண்டு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார் (ஆதி. 2:18; யாத். 31:17)

(“தேவன் மனிதனைக்கொண்டு புத்துணர்ச்சி அடைந்தார்” என்பதின் அர்த்தத்தை எடுத்துரையுங்கள்)

த2 தேவனோடு அவருடைய வேலையில் ஒன்றாய் இருப்பதற்கு, நாம் அவரை அனுபவிக்க வேண்டும் (1 கொரி. 15:10)

(பெந்தேகொஸ்தே நாளில் சீஷர்கள் தேவனோடு வேலை செய்ய தொடங்கினர் அதன் பிறகு அவர்கள் பரலோக திராட்சைரசத்தின் அனுபவமகிழ்ச்சியால் நிரப்பப்பட்டிருந்தனர் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 5
த1 தேவனின் முழு இரட்சிப்பின் நம் பங்கு பெறுதலின் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளின் மாதிரியாக இஸ்ரயேலர்கள் இருக்கின்றனர் (எபி. 4:12)

(தேவனுடைய முழு இரட்சிப்பில் இஸ்ரயேலர்களின் பங்கு பெறுதலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற, அவர்களுடைய வரலாற்றிலுள்ள மூன்று நிலைகளை எடுத்துரையுங்கள்)

த2 நம் ஆத்துமா நம் சுயமாகும், நம் ஆவி நாம் தேவனை தொடர்பு கொள்ளுகிற ஒரு உறுப்பாகும், நம் இருதயம் நாம் தேவனை நேசிக்க பயன்படுத்தும் உறுப்பு (மத். 16:26; யோவா. 4:24; மாற். 12:30)

(எபிரெயர் புத்தகத்தின் எழுத்தாளன் எபிரெய விசுவாசிகள் தங்கள் ஆத்துமாவின் அலைந்துதிரிதலில் தடுமாறாமல், பரலோகக் கிறிஸ்துவில் பங்குபெறவும், அவரை அனுபவித்துமகிழவும், தங்கள் ஆவிக்குள் முன்செல்லும்படி அவர்களை அறிவுறுத்துகிறான் என்பதை எடுத்துரையுங்கள்)

நாள் 6
த1 எப்போதெல்லாம் நாம் நம் ஆவிக்கு திரும்புகிறோமோ அப்போதெல்லாம் பரலோகத்தில் உள்ள கிருபையின் சிங்காசனத்தை நம்மால் தொட முடியும் (எபி. 4:16)

(நாம் இன்னும் பூமியில் இருக்கையில் நாம் எவ்வாறு பரலோகத்தில் (கிறிஸ்து) செம்மறியாட்டுகுட்டியானவரிடத்தில் மற்றும் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வர முடியும்?)
த2 நாம் வேதத்தை வாசிக்கும் போதெல்லாம், தேவனுடைய வார்த்தையானது நமக்கு ஜீவிக்கிறதாயும் மற்றும் சக்தி ஊட்டுகிறதாயும் இருக்க வேண்டும் (எபி. 4:12)

(நாம் வெறும் எழுத்துக்களை அல்ல, தேவனுடைய வார்த்தையைத் தொடுகிறோம் என்று எவ்வாறு அறிகிறோம்?)

Send this to a friend